வலைவாசல்:யாழ்ப்பாணம்

வலைவாசல் யாழ்ப்பாணம்
.


தொகு 

யாழ்ப்பாணம் - அறிமுகம்

யாழ்ப்பாணம் (Jaffna, சிங்களம்: යාපනය) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தொகு 

சிறப்புக் கட்டுரை

யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.

தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

யாழ்ப்பாணக் கோட்டை வாயில்
யாழ்ப்பாணக் கோட்டை வாயில்
  • யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும்.
  • 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
  • யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22இல் கைப்பற்றிய அடுத்த நாள் ஜூன் 23 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் கைப்பற்றி அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.
  • 1984-1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது.
  • 1629இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது.


தொகு 

விக்கித் திட்டங்கள்

தாய்த் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இலங்கை
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் யாழ்ப்பாணம்



தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • யாழ்பாணம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|யாழ்பாணம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • யாழ்பாணம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • யாழ்பாணம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • யாழ்பாணம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • யாழ்பாணம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • யாழ்பாணம்வில் உள்ள இடங்கள், அவற்றின் புவியியல், நில அமைப்புகள் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு 

பகுப்புகள்


தொகு 

சிறப்புப் படம்

கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம் (Co-operator Veerasingam Hall) அல்லது பொதுவாக வீரசிங்கம் மண்டபம் என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு பொது மண்டபம் ஆகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாநாடுகள், மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இம்மண்டபத்திலேயே நடத்தப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவு நிலையத்தின் முதலாவது தலைவராகப் பணியாற்றிய வி. வீரசிங்கம் என்பவரின் நினைவாக இம்மண்டபத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியரான வீரசிங்கம் வட்டுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

தமிழர்தமிழர்
தமிழர்
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழர் தமிழ் வரலாறு இலங்கை தமிழீழம்


தொகு 

விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:யாழ்ப்பாணம்&oldid=1604383" இலிருந்து மீள்விக்கப்பட்டது