வல்லபாச்சார்யா
வல்லபாச்சாரியார் (Vallabhacharya, 1479 – 1531 இந்து மெய்யியலாளர். இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.[1]
இந்திய மெய்யியல் Medieval philosophy | |
---|---|
முழுப் பெயர் | வல்லபாச்சாரியார் |
சிந்தனை மரபு(கள்) | இந்து மெய்யியல், அத்வைதம், Pushtimarg, வேதாந்தம் |