வளஞ்சியர்

பழங்கால வணிகப் பிரிவினரி

சோழர் காலத்தில் வணிகப் பிரிவினரில் வலஞ்சியர் அல்லது வளஞ்சியர் என்று ஒரு குழுவினர் இருந்தனர்.[1] வளஞ்சியர் என்ற சொல்லுக்கு வணிகம் என்று பொருளாகும். சேர மன்னன் வட்டெழுத்து தமிழ் கல்வெட்டுகள் இதனை கடத்து வளஞ்சியம் என்கிறது. தமிழ் கல்வெட்டுகளில் வளஞ்செயர் என்றும் வருகிறது. வளஞ்சியர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர்.[2] வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற வணிகர் மக்களைக் குறிப்பதாகும்.[3] முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கவரை வளஞ்சியர்கள் எனும் வணிக பிரிவினர் பல குடிகளுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.[4] வளஞ்சியர் என்ற வாணிகக் குழுவினைப் பற்றி முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு  ஒன்று விரிவான வணிகத் தளங்களில் இவர்கள் ஆயுதம் தாங்கி வரி தாண்டியது பற்றிய செய்திகளைக் கூறுகின்றது.  வீர வளஞ்சிய சமயத்தைப் பாதுகாப்பவர்கள் இவர்களே என்றும், இவர்கள் வாசுதேவன், கந்தழி, வீரபத்திரன் ஆகிய கடவுளரிடம் தோன்றியவர்கள் என்றும் பட்டாரகி (துர்க்கை)யை வழிபடுபவர்கள் என்றும் அக் கல்வெட்டு கூறுகிறது .இவர்களுள் பல பிரிவினர் உண்டு. நான்கு திசைகளின் ஆயிரம் வட்டங்கள், பதினெண் நகரங்கள்,முப்பத்திரண்டு வேளர்புரங்கள், நான்கு கடிகைத் தானங்கள் ஆகியவற்றினின்றும் இவர்கள் வந்தவர்கள்.[5][6][7]

வீர வளஞ்சியர்

தொகு

ஐந்நூற்றுவர் கழக வணிகர்களான வளஞ்சியர் கன்னடத்தில் வீர பளஞ்சியா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர பலிஜா என்றும் "தீரமிக்க வணிகர்கள்" என்ற பொருளில் அழைக்கப்பட்டனர்.[8] வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட இவ்வணிகர்களைப் பற்றி நடுக்கால கல்வெட்டுக்கள் பலவும் குறித்துரைக்கின்றன.[9] வீர வளஞ்சியர் பற்றிக் காணப்படும் கல்வெட்டுக்கள் நிறையவே உள்ளன. எடுத்துக் காட்டாக, அனிலமை எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1531 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று அக்கிராமத்திலிருந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் வீர வளஞ்சியர்களால் கொடையளிக்கப்பட்ட விளக்கின் காரணமாகப் பருத்தி, நூல், துணிமணிகள் போன்ற வணிகப் பொருட்களுக்கான தீர்வை நீக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.[10]

ஐந்நூற்றுவர் அல்லது ஐயவோலா-எனும்பாரு-சுவாமிகளு எனப்பட்டோர் வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகவும் வீர வளஞ்சிய சமயத்தைப் பின்பற்றுவோராகவும் இருந்தனரென்று நெல்லூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.[11] சிந்தப்பள்ளியில் காணப்பட்ட பொ.கா. 1240 ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று வீர வளஞ்சிய சமயத்தில் (வணிகக் கழகத்தில்) உபயநானாதேசிகளும் கவரைகளும் மும்முறி தண்டர்களும் இருந்ததாகவும் ஐந்நூறு வீரர்களைத் தம்முடன் வைத்திருக்கும் உரித்துடையோராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.[12] இவர்களில் உபயநானாதேசிகள் எனப்படுவோர் பல்வேறு பகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தேசிகளும் பரதேசிகளும் நானாதேசிகளுமாக இருந்த அதே வேளை, கவரைகள் எனப்படுவோர் கவரேசுவரரை எனப்பட்ட கடவுளை வழிபடும் வணிகர்களாக இருந்தனர்.[13]

கண்டலேசுவரர் வழிபட்டவர்கள் கண்டாலிகள் என்றும், நகரேசுவரரை வழிபட்ட வைசியர்களைக் கொண்ட நகரத்தார் சமூகத்தையும் (சிறீ கண்டரேசுவர திவ்ய தேவ சிறீபாத பதுமராதக் குழு) எனப்பட்ட கண்டலேசுவரரை வழிபட்ட வளஞ்சியர் சமூகத்தின் கண்டாலிகளையும் போலச் சில வணிகக் கழகங்கள் சமய அடையாளங்களின் அடிப்படையில் அமையப் பெற்றிருந்தன.[14] மும்முறி தண்டர்கள் எனப்படுவோர் முதலில் போர் வீரர்களாயிருந்து பின்னர் வணிகர்களாக மாறியோராவர். குருகோடு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1177 ஆம் ஆண்டின் கல்வெட்டொன்று மும்முறி தண்டர் எனப்படுவோர் ஆரியபுரம் அல்லது ஐகோலே என்ற நகரின் ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் ஒரு பிரிவினரெனக் குறிப்பிடுகிறது.[15] போர்களும் படையெடுப்புக்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வீர வளஞ்சிய போன்ற வணிகக் கழகங்கள் பல்வேறு பேரரசுகளின் கீழும் வள மிக்கனவாகவே திகழ்ந்தன.[16]


மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாட்டு வரலாறு குழு, ed. (1988). தமிழ்நாட்டு வரலாறு நான்காம் பகுதி சோழப் பெருவேந்தர் காலம். தமிழ் வளர்ச்சி இயக்கம். p. 30.
    • கி. நாச்சிமுத்து எம்.ஏ, ed. (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். p. 39.
    • நிருபர், ed. (8 மார்ச் 2015). வணிகக் குழு கல்வெட்டுகள். தினமணி நாளிதழ். இடைக்கால தென்னிந்தியாவில் பல்வேறு தொழிற்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன {{cite book}}: Check date values in: |year= (help)
    • Epigraphia Indica And Record Of The Archæological Survey Of India - Volume 18. Office of the Superintendent of Government Printing, India. 1983. p. 335. In Telugu the word balija or balijiga has the same meaning. It is therefore probable that the words valañjiyam, valanjiyar,  balañji,  banañji,  banajiga and balija are cognate, and derived from the Sanskrit vanij {{cite book}}: no-break space character in |quote= at position 3 (help)
    • வணிகக் குழுக் கல்வெட்டுகள், ed. (1961). தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. தமிழ்நாடு அரசு.
    • கி. நாச்சிமுத்து, ed. (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். p. 39. இரண்டாவதாகச் செட்டிமையான பல குடிக்கும் கவறை வலைஞ்சியர்கள் தலைவர்களாக்கப் படுகிறார்கள். வலைஞ்சியர் என்பது பலிஜர் என்ற தெலுங்கு வணிக மக்களைக் குறிப்பதாகும்.
    • சி. எம். ராமச்சந்திர செட்டியார், ed. (1950). சோழன் பூர்வ பட்டையம். தமிழக அரசின் கீழைக்கலை ஒலைச்சுவடி நூலக நிறுவனம். p. 68.
  2. கே கே பிள்ளை, ed. (2000). தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம். p. 327.
  3. ஞானி, ed. (1999). மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள். புதுமலர் படைப்பகம். p. 30.
  4. ஆர் ஸ்ரீனிவாசன், ed. (1975). சக்தி வழிபாடு. ஜெயா பதிப்பகம். p. 34.
  5. Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh, Volume 100, by SS Shashi, p.86
  6. Studies in economic and social conditions of medieval Andhra, by K.Sundaram, p.69-76
  7. Hindu and Muslim religious institutions, Andhra Desa, 1300-1600, by Ravula Soma Reddy, p.110
  8. The quarterly journal of the Mythic society (Bangalore), Volume 82, p.88-91
    • T. Venkateswara Rao, ed. (1978). Prasasti of The Vira Balanja. Vol. 6. Itihas. p. 74. A Chintapalli record of S. 1162 mentions that the Ubhaya - Nānādēsi , Mummuridandas and Gavares were the protectors of the Vira - Balanja - Dharma.
    • K. Sundaram, ed. (1968). "The Balanja Merchant Community of Medieval Andhra, (A. D. 1300 - 1600)". Studies in Economic and Social Conditions of Medieval Andhra, A. D. 1000-1600. Triveni Publishers. p. 72. In one of the early inscriptions of the merchants from Chintapalli in Guntur District of the year A.D. 1240, it is mentioned that Ubhaya Nanadesis, Gavares and Mummaridandas as protectors of Vira Balanja Dharma.
    • Vasant K. Bawa, ed. (1975). Aspects of Deccan History. Institute of Asian Studies. p. 120. One record from Chintapalli 26 in the Guntur district , dated S. 1162 , states the Virabalamja - samaya was composed of the Ubhaya - nanadesi , the Gavares and the Mummiridandas.
    • Mallampalli Somasekhara Sarma, ed. (1948). History of the Reddi Kingdoms (circa. 1325 A.D. to Circa 1448 A.D.). Andhra University. p. 396. The body of Gavares seems to have derived its name from worshipping god Gavaresvara, one of the gods , referred to in the prasasti of the Vira Balañjyas , as having been worshipped by them Mummuridaṇḍas was another component sect of the Vira Balañjya samaya*Kambhampati Satyanarayana, ed. (1975). A Study of the History and Culture of the Andhras. Vol. 2. People's Publishing House. p. 52. The body of Gavares seems to have derived its name from worshipping God Gavaresvara ... The Mummuridandas , probably , represented the advance guard of the trading caravan " . Another body of traders
  9. Cultural heritage of the Kakatiyas: a medieval kingdom of south India, by S.Nagabhushan Rao, p.59
  10. Brahma sri: Researches in archaeology, history, and culture in the new millennium : Dr. P.V. Parabrahma Sastry felicitation volume, Volume 1, p.169
  11. A study of the history and culture of the Andhras, Volume 2, by Kambhampati Satyanarayana, p.125
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளஞ்சியர்&oldid=4087990" இலிருந்து மீள்விக்கப்பட்டது