வளிம விதிகள்
வாயு விதிகள் (gas laws) இந்த தொகுதியில் வாயுக்களை பற்றிய விதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
பாயில் விதி
தொகு“மாறாத வெப்பத்தில் ஒரு வாயுவின் அழுத்தம் மற்றும் கன அளவின் பெருக்குத் தொகையானது மாறிலி ஆகும்.”
இவ்விதி 1662ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் என்பவரால் கண்டறியப்பட்டது. கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.
P1(V1) = P2(V2)
P= வாயுவின் அழுத்தம் V= வாயுவின் கன அளவு
சார்லஸ் விதி
தொகு“மாறாத அழுத்தத்தில் ஒரு வாயுவின் கன அளவு அதன் வெப்பநிலைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.”
இவ்விதி 1678ஆம் ஆண்டு சார்லஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.
V1/T1=V2/T2
T=வாயுவின் வெப்பநிலை V=வாயுவின் கன அளவு
கே-லுசாக் விதி
தொகு“ஒரு கொள்கலனில் இருக்கும் வாயு அந்த கொள்கலனின் மீது செலுத்தும் அழுத்தமானது,வாயுவின் வெப்பநிலைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.”
இவ்விதி 1809ஆம் ஆண்டு ஜோசப் லூயிஸ் கே-லுஸாக் என்பவரால் கண்டறியப்பட்டது. கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.
P=k3T
P=வாயுவின் அழுத்தம் T=வாயுவின் வெப்பநிலை
அவகெட்ரோ விதி
தொகு“ஒரு கொள்கலனில், ஒரு வாயுவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கன அளவானது, அந்த கொள்கலனில் உள்ள வாயுவில் உள்ள மோல்களின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்தில் இருக்கும்.”
கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.
P1/T1=P2/T2
P= வாயுவின் அழுத்தம் T= வாயுவின் வெப்பநிலை
டால்ட்டன் விதி
தொகு“ஒரு வாயு சேர்மத்தின் பகுதி அழுத்தமானது,அந்த வாயு சேர்மத்தை உருவாக்கிய வாயுக்களின் தனி தனி அழுத்தங்களின் கூட்டு தொகைக்கு சமமாக இருக்கும்.”
கணித முறைப்படி இந்த விதி கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது.
P=P1+P2+P3......+Pn P= வாயு சேர்மத்தின் பகுதி அழுத்தம் P1,P2...Pn= வாயுக்களின் பகுதி அழுத்தம்
எ.கா:
அம்மோனியா வாயுவின் பகுதி அழுத்தமானது, ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களின் பகுதி அழுத்தங்களின் கூட்டு தொகைகு சமமாக இருக்கும்.
PNH3=PN+PH