வஸ்ஹோத் திட்டம்

(வஸ்கோத் திட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வஸ்ஹோத் திட்டம் (Voskhod programme, ரஷ்ய மொழி: Восход) என்பது சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மனித விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் வஸ்தோக் திட்டத்தின் தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்களின் பகுதிகள் வஸ்ஹோத் திட்டத்திற்குப் பயன்படுத்தினார்கள்.

வஸ்ஹோத் 1 மற்றும் 2 விண்கலங்கள்
வஸ்தோக், வஸ்ஹோத் 1, 2 மனித இருக்கைகள்

வஸ்ஹோத் பயணங்கள்

தொகு
  • கொஸ்மஸ் 47 - மனிதரற்ற சோதனைப் பயணம்
  • வஸ்ஹோத் 1 - அக்டோபர் 12, 1964. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர் பயணம் செய்த முதலாவது விண்கப்பல்.
  • கொஸ்மஸ் 57 - மனிதரற்ற சோதனைப் பயணம், வெற்றியளிக்கவில்லை
  • வஸ்ஹோத் 2 - மார்ச் 18, 1965. விண்வெளியில் மனிதன் நடந்தான்.
  • கொஸ்மஸ் 110 - 22 நாட்கள் மனிதரற்ற பயணம், இரண்டு நாய்கள் சென்றன.

ரத்துச் செய்யப்பட்ட பயணங்கள்:

  • வஸ்ஹோத் 3 - நீண்ட நாட்கள் நிறையில்லாத் தன்மையை சோதிப்பதற்கு (19 நாள் பயணம்)
  • வஸ்ஹோத் 4 - நீண்ட நாட்கள் நிறையில்லாத் தன்மையை சோதிப்பதற்கு (20 நாள் பயணம்)
  • வஸ்ஹோத் 5 - பெண்கள் மட்டும் பயணம் (10 நாட்கள்)
  • வஸ்ஹோத் 6 - Flight to test new EVA jet belt
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸ்ஹோத்_திட்டம்&oldid=2754247" இலிருந்து மீள்விக்கப்பட்டது