வாகரை குண்டுத்தாக்குதல்

வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலைகளின் மீது நவம்பர் 8,2006 ல் இலங்கை இராணுவம் நடத்திய மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வே வாகரை குண்டுத்தாக்குதல் ஆகும். இந்நிகழ்வின் விளைவாக 50க்கும் அதிகமான அகதித்தமிழர்கள் இறந்ததுடன் [1] 100க்கும் அதிகமானோர் காயமுற்று[2] உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.

வாகரைப் பகுதி, இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு வடக்காக அமைந்துள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் இந்நகர் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டுதொகு

வாகரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவு திட்டம் அடங்கலாக பலவித நிவாரண உதவிகள் வழங்கும் வழிகளை மூன்று கிழமையாக இலங்கை அரசு, தடுத்துவருவதாகவும் "[3] மேலும்,வாகரை குண்டுதாக்குதலில் காயமுற்றவர்களை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக கொண்டு செல்வதற்கு இராணுவ கெடுபிடியால் மூன்று மணித்தியாலம் வரை பிடித்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்[3]..

அரசின் பதிலளிப்புதொகு

தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாகவும்,தவறுக்கு வருந்துவதாகவும் மேலும் எல்லாவற்றையும் விட நாட்டுப் பாதுகாப்பே முதன்மையானது எனவும் இலங்கை அரசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.[4].இந்நிகழ்வின்போது தாக்குதலுக்குள்ளான அகதி முகாமும் மக்களும் மனிதக் கேடயமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டிருந்தது. இதனை தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தொடர்புடைய பாடசாலையிலும் அதனை அண்டியுள்ள பகுதியும் இராணுவத் தளமாக பாவிக்கப்பட்டமைக்கான எந்தவொரு அறிகுறிகளையும் தாம் காணவில்லை என தெரிவித்துள்ளனர் [5].

பன்னாட்டு வெளிப்பாடுகள்தொகு

வாகரை நிகழ்வு இலங்கை வாழ் தமிழர் இடையில் அரசின் மீது பரந்த வெறுப்பையும் கோபத்தினையும் உருவாக்கி உள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இலங்கைகான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தலைமை அலுவலகதின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது]][6].இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடாத்திய முண்ணனி தமிழ் பாராளமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மறுநாளே கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்[7] இந்நிகழ்வு பற்றி குறிப்பிட்ட தமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி, "எவ்வளவு காலம்தான் இந்தியா இலங்கையில் தமிழருக்கு எதிராக இராணுவத்தால் நிகழ்த்தப்படும் வன்கொடுமை கண்ணுறாமல் பொறுமை காப்பது" என மனவேதனைப்பட்டுள்ளார்[8]ஐக்கிய நாடுகள் அவை குறிப்பிடும்போது இந்நிகழ்வை காட்டமாக கண்டித்ததுடன் தாக்குதல் நடாத்தும்போது மக்கள் தொடர்பில் கரிசனமெடுக்குமாறு கேட்டிருக்கின்றது[9].மேலும் அனைத்துலக மன்னிப்புச் சபையும் தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன் உரிய விசாரணைகளை நடத்தும்படி அரசினைக் கேட்டிருக்கின்றது[10].

இவற்றினையும் பார்க்கதொகு

Referencesதொகு

  1. "40 civilian refugees killed in Sri Lankan artillery attack". Tamilnet. நவம்பர் 8, 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20196. 
  2. "Lanka army 'kills 45 civilians'". BBC World Service. நவம்பர் 8, 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6128094.stm. 
  3. 3.0 3.1 "SLA denied transport to Vaharai injured for 3 hours- Elilan". Tamilnet. நவம்பர் 9, 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20209. பார்த்த நாள்: 2006-11-09.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Tamilnet2" defined multiple times with different content
  4. "Amnesty International condemns attack on Sri Lankan school; at least 23 killed". Associated Press. நவம்பர் 09, 2006. http://www.theacademic.org/stories/11630714610/story.shtml. பார்த்த நாள்: நவம்பர் 9, 2006. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Anger over Lanka civilian deaths". BBC World Service. 2006-11-09. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6131566.stm. பார்த்த நாள்: 2006-11-19. 
  6. "Sri Lankan Tamil MPs in Colombo protest against the artillery attack". AFP. 2006-11-09. http://uk.news.yahoo.com/09112006/323/photo/sri-lankan-tamil-mps-colombo-protest-against-artillery-attack.html. பார்த்த நாள்: 2006-11-09. 
  7. "Tamil member of Parliament killed in Sri Lankan capital". Associated Press. 2006-11-09. Archived from the original on 2007-03-17. https://web.archive.org/web/20070317115000/http://www.iht.com/articles/ap/2006/11/10/asia/AS_GEN_Sri_Lanka_Attack.php. பார்த்த நாள்: 2006-11-09. 
  8. "Karunanidhi deplores shelling by Lankan forces". Press Trust of India. 2006-11-09. http://www.hindu.com/thehindu/holnus/004200611092032.htm. 
  9. "Sri Lanka: United Nations condemns indiscriminate use of force". United Nations Office for the Coordination of Humanitarian Affairs. 2006-11-09. http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900SID/EGUA-6VDNCG?OpenDocument. பார்த்த நாள்: 2006-11-09. 
  10. "Sri Lanka: Attack on displaced civilians must be investigated". Amnesty International Press Release. Archived from the original on 2006-11-13. https://web.archive.org/web/20061113231708/http://web.amnesty.org/library/Index/ENGASA370322006. 

வெளி இணைப்புக்கள்தொகு