வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல்

வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல் (Wagner–Meerwein rearrangement) வினை என்பது ஒரு ஐதரசன், ஆல்க்கைல் அல்லது அரைல் தொகுதியானது, ஒரு கார்பன் அணுவிலிருந்து அருகிலுள்ள கார்பன் அணுவுக்கு [1][2] இடம்பெயரும் கார்போநேர்மின்னயனி 1,2- மறுசீராக்கல் வகை வினைகளாகும்.

இவ்வினைக்கான பல மதிப்புரைகள் வெளியிடப்பட்டுள்ளன [3][4][5][6][7]. பைசைக்ளிக் டெர்ப்பீன்களில் இம்மறுசீராக்கல் வினை முதலில் கண்டறியப்பட்டது. உதாரணமாக, ஐசோபோர்னியோல், காம்பீனாக மாறும் வினையைக் குறிப்பிடலாம் :[8].

ஐசோபோர்னியோல், காம்பீனாக மாறும் நீரிறக்க வினை
ஐசோபோர்னியோல், காம்பீனாக மாறும் நீரிறக்க வினை

இம்மறுசீராக்கம் தொடர்பான கோட்பாடுகளும், தொடர்புடைய வினைகளும், இடைநிலை கார்போநேர்மின்னயனிகள் கண்டுபிடிப்பிற்கு இடையிலுள்ள இவற்றின் நெருங்கிய தொடர்பும் விஞ்ஞானிகள் மத்தியில் பல புதிர்களை வெளிப்படுத்தின [9]. 1,4-டைமெத்தாக்சிபென்சீன் உடன் 2-மெத்தில்-2-பியூட்டனால் அல்லது 3-மெத்தில்-2-பியூட்டனால் சேர்மங்கள் கந்தக, அசிட்டிக் அமிலக் கலவையுடன் வினைபுரிந்து இருபதிலீடு செய்யப்பட்ட விளைபொருள் உருவாகும் வினையை எளிய செயல்முறை வினையாக கருதலாம். ஐதரைடு இடம்பெயரல் வழியாக நிகழும் பிந்தைய வினை ஒரு நேர்மின்னயனி இடைநிலையாகும் [10] the latter via a hydride shift of the cationic intermediate:

Carbocation rearrangement Polito 2010.

அசாபல்லினவளையங்கள் தொகுப்பில் இவ்வடிப்படை மறுசீராக்கல் பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. தரவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன [11]

பல்லின வளையங்கள் தொடரில் வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல் வினைக்கு சில எடுத்துக்காட்டுகள்.

டையெப்பாக்சி ஐசோயிண்டோல்களின் வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல் கோட்பாடு சாத்தியமுள்ள வினைவழிமுறைகள்

வாக்னெர்-மீர்வெயின் மறுசீராக்கல் கோட்பாடு சாத்தியமுள்ள வினைவழிமுறைகள்

தொடர்புடைய செர்கெய் நேமியோட்கின் கண்டறிந்த நேமிட்கின் மறுசீராக்கல் வினையில் டெர்பீன்களில் உள்ள மெத்தில் தொகுதிகள் மறுசீராக்கம் அடைகின்றன. சில நிகழ்வுகளில் இவ்வினைவகை ரெட்ரோபினாக்கோல் மறுசீராக்கல் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Wagner, G. (1899). J. Russ. Phys. Chem. Soc. 31: 690. 
  2. Hans Meerwein (1914). "Über den Reaktionsmechanismus der Umwandlung von Borneol in Camphen; [Dritte Mitteilung über Pinakolinumlagerungen.]". Justus Liebig's Annalen der Chemie 405 (2): 129–175. doi:10.1002/jlac.19144050202. 
  3. Popp, F. D.; McEwen, W. E. (1958). "Polyphosphoric Acids As a Reagent in Organic Chemistry". Chem. Rev. 58 (2): 375. doi:10.1021/cr50020a004. 
  4. Cargill, Robert L.; Jackson, Thomas E.; Peet, Norton P.; Pond, David M. (1974). "Acid-catalyzed rearrangements of β,γ-unsaturated ketones". Acc. Chem. Res. 7: 106–113. doi:10.1021/ar50076a002. 
  5. Olah, G. A. (1976). "Stable carbocations, 189. The σ-bridged 2-norbornyl cation and its significance to chemistry". Acc. Chem. Res. 9 (2): 41. doi:10.1021/ar50098a001. 
  6. Hogeveen, H.; Van Krutchten, E. M. G. A. (1979). "Wagner-meerwein rearrangements in long-lived polymethyl substituted bicyclo[3.2.0]heptadienyl cations". Top. Curr. Chem.. Topics in Current Chemistry 80: 89–124. doi:10.1007/BFb0050203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-09309-5. 
  7. Hanson, J. R. (1991). "Wagner–Meerwein Rearrangements". Comp. Org. Syn. 3: 705–719. doi:10.1016/B978-0-08-052349-1.00077-9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-052349-1. 
  8. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, ISBN 0-471-85472-7
  9. Birladeanu, L. (2000). "The Story of the Wagner-Meerwein Rearrangement". J. Chem. Ed. 77 (7): 858–863. doi:10.1021/ed077p858. 
  10. Polito, Victoria; Hamann, Christian S.; Rhile, Ian J. (2010). "Carbocation Rearrangement in an Electrophilic Aromatic Substitution Discovery Laboratory". Journal of Chemical Education 87 (9): 969. doi:10.1021/ed9000238. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2010-09_87_9/page/969. 
  11. Zubkov, F. I.; Zaytsev, V. P.; Nikitina, E. V.; Khrustalev, V. N.; Gozun, S. V.; Boltukhina, E. V.; Varlamov, A. V. (2011). "Skeletal Wagner–Meerwein rearrangement of perhydro-3a,6;4,5-diepoxyisoindoles". Tetrahedron 67 (47): 9148. doi:10.1016/j.tet.2011.09.099.