வாசுபகேன்

வாசுபகேன் ராம்பிரசாத் பட் (Vasubahen Ramprasad Bhatt 23 மார்ச் 1924 - 13 டிசம்பர் 2020) இந்திய சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். குசராத்தின் பல்வேறு அனைத்திந்திய வானொலி நிலையங்களின் இயக்குநராகவும், குசராத் மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.

வாசுபகேன்
தொழில்
நாட்டுரிமை இந்தியன்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பண்ததே பண்ததே மோதி

வாழ்க்கைதொகு

வசுபகேன் [1] 1924 மார்ச் 23 அன்று பரோடாவில் (இப்போது வதோதரா) ராம்பிரசாத் பால்கிருஷ்ணா சாஸ்திரி மற்றும் சரஸ்வதிபென் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை பரோடா மாநிலத்தின் சயாஜிராவ் கெய்க்வாட் III இன் அரசியல் செயலாளராக இருந்தார். ஏழு உடன்பிறப்புகளில் ஐந்தாவது மகளாக இருந்தார். இவர் எஸ். என். டி. டி. கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

இவர் 1949 இல் அனைத்திந்திய வானொலியில் சேர்ந்தார், பின்னர் அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் வதோதராவில் இயக்குநராக பணியாற்றினார் . அந்தப் பணியில் இருந்து 1982 இல் ஓய்வு பெற்றார். அகமதாபாத் சிறார் நல வாரியத்தின் தலைவராகவும், குசராத் மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் குசராத் ஸ்ட்ரீ கெல்வானி மண்டல் மற்றும் குழந்தைகள் அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் ஒரு நடிகையும் ஆவார்.[3]

இவர் 2020 டிசம்பர் 13 அன்று அகமதாபாத்தில் இறந்தார். [4]

சான்றுகள்தொகு

  1. Modi, Binit (23 March 2012). "વસુબહેન : નામ નહીં ‘સર્વ’નામ, સર્વે જણ માટે એક જ નામ" (gu). மூல முகவரியிலிருந்து 2017-04-13 அன்று பரணிடப்பட்டது.
  2. Brahmabhatt, Prasad (2010) (in gu). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ. Ahmedabad: Parshwa Publication. பக். 251–252. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5108-247-7. 
  3. Tevani, Shailesh (2003). C.C. Mehta. Sahitya Akademi. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1676-1. https://books.google.com/books?id=AbLPU10RFUYC&pg=PA84. 
  4. "આકાશવાણી પૂર્વ નિર્દેશક વસુબહેન ભટ્ટ નું ૯૬ વર્ષની વયે અવસાન થયું: તેઓ ઘણા વખતથી પથારીવશ હતાં". https://www.akilanews.com/Gujarat_news/Detail/14-12-2020/153567. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுபகேன்&oldid=3228187" இருந்து மீள்விக்கப்பட்டது