வாதுவை
இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாதுவை இலங்கையின் மேற்குக் கரையில், கொழும்பிற்குத் தெற்காக சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது காலி வீதியில் 30.5 கி.மீ தூரத்திலிருந்து 36.5 கி.மீ தூரம் வரையான பகுதியை உள்ளடக்குவதுடன் வீதியிலிருந்து தரைப்பக்கமாக சுமார் 4.5 கி.மீ தூரமும் கடற்பக்கமாக ஒரு கி.மீ தூரமும் பரந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். தென்னையிலிருந்து பெறப்படும் கள் மற்றும் புளிங்காடி என்பனவும் தென்னை நாரிலிருந்து செய்யப்படும் தும்புத்தடி, கால்மிதி ஆகியவையும் இப்பிர்தேசத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களாக விளங்குகின்றன. இந்நகரம் பாணந்துறை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.
வாதுவை | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |