வானொலிக் கலை
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வானொலி வழி ஓரிருவருக்கும் இடையேயோ, ஒரே நேரத்தில் பலரிடமுமோ தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்புகொள- தொழில்நுட்ப, கலைநுட்பம் வானொலிக்கலை. ஒரே நேரத்தில் பலருடன் வானொலிவழி, அலைபரப்புமுகமாக தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒரு பொதுத் தொடர்பு ஊடகமாக இயங்குகின்றது.
இப்புது வானொலி தொடர்பு ஊடக வளர்ச்சியால் செய்திகள் விரைவாய், உடனுக்குடன், நேரடியாக கேட்போரை சென்றடைந்து உலக வாழ்வியலில் புது வளர்ச்சியும் செய்திப்பரவலும் தருகின்றது. புதுத் தொழில் நுட்ப நுண்ணியல் வளர்ச்சிகளால் இத்துறை வேகமான வேக வளர்ச்சி அடைந்து வருகின்றது. (திருத்தம் தேவை) இவ் உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்காக என்னவெல்லாம் இழந்தும், இழக்க விருப்பமின்றியும்,அத்தோடு காலத்தின் பறிப்பும், வழங்கலுமாக பிறப்பு - வாழ்வு - வாழ்வுக்கான போராட்டம் - உறவு - இறப்பு என சுழலும் உலகச்சக்கரத்தில் மனிதம். இதில் தொடர்பூடகவியல் என்பது, மனித வாழ்வியலுக்குள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்கவே முடியாதது ஆகிறது. தொடர்பூடகவியலில் வளர்ச்சியானது அதிசயத்தில், ஆச்சரியத்தில், அசுர வேகத்துடன் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
தனியே நான் என்று இல்லாமல் குடும்பம் - சமூகம் - நாடு - சர்வதேசம் என பரந்து விரிந்து செல்கிறது. வெகுசனத்தொடர்பு சாதனத்துறையில், இலத்திரனியல்ஊடகம் பதிப்பு ஊடகம் என பல்துறை ஊடகப் போக்கு நிலை என்பது அதன் தனிப் போக்கில் பற்பல தொழில்நுட்ப,மற்றும் மனிதவலு அறிவு நுனுக்கத் திட்ட மிடல்களை உள்ளடக்கி வெளி வருகின்றன, வெளிப்படுத்துகின்றன.
சனரஞ்சகமான போக்கு நிலையானது நவீனக் கலைகளின் வளர்ச்சியினோடு காலப் போக்கின் தன்மைகளுக்கேற்ப மாறி மாறிக் கொண்டே செல்கிறது. வேகமான ஓய்வற்ற வாழ்வியலில் சிக்கித்தவிக்கும் மனிதனாகிவிட்டான் இக்கால மனிதன். அதனால் உறவியல் பண்பு நிலைகளும் தம் போக்கிலே மாற்று நிலைகளுக்குள் வழிமாறிப்போகும் நிலைகாணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சியின் வெற்றியில் உலகு நிகழ்வுகளை இப்போ விரல்களுக்குள் நர்த்தனமாட வைக்கும் வளர்ச்சியின் உச்சப் போக்கில் வளர்கிறது.இந்நிலை எங்கு, எதில்தான் போய் முடியுமோ? என ஓர் அச்சமும் ஆட் கொண்ட வண்ணமே உலகு பயணிக்கிறது.
உலகில் எங்கு என்ன நிகழ்ந்தாலும் அதனை கைக்குள்ளே பெறக்கூடிய தகவல் பரிமாற்றத்துறையானது வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள் ஆரம்ப காலந்தொட்டு வானொலிக்கலை என்றுமே மாறாத் தன்மையுடன் தொடர்பூடகமாக வெற்றி கொண்டு பலவித சவால்களுக்கும், போட்டிகளுக்கும் முகம் கொடுத்து வளர்ந்த வண்ணமேயிருக்கிறது.
தொடர்பூடகத் தொடர்பற்று வாழ்தலென்னபது சாத்தியமற்றது. ஆகவே தொடர்பூடகப் பயிற்சி என்பதை ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பெற்றேயிருக்க வேண்டிய தேவையாகவும், தெரிந்திருத்தலும் அவசியமாகிப்போகிறது. அவற்றின் நுட்பங்களை அறிந்திராதவர்கள் இல்லையென்றே கூறலாம்.
முறையான கொள்கைத் திட்டமிடலுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு, அதனூடான ஒழுங்கமைப்பு, உண்மை, நேர்மைப்போக்கு, பொதுநலசிந்தை தனித்தரம்பேணல் என பல விடயங்களை கருத்தில் எடுத்து பயணிக்கும்போது எந்த விடயமும் வெற்றி பெறத்தவறாது. வானொலிக் கலைக்கும் இது பொருந்தும்.
பல் துறைப் புலமை நிறைந்த சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது.
பாரம்பரியம் - தகவல் - பொழுதுபோக்கு - கல்வி என அதன்பங்கு பல்கிப்பெருகி சமூக வளர்ச்சி மாற்றத்துக்கு வழி அமைத்துக்கொள்கிறது.
அலைவழித் தொடர்பினூடே பொதுநிலைக்குள் வரவேற்று, கருத்துநிலை, மகிழ்வூட்டல் நிலை,வெளிப்படுத்தல் அனுகுமுறையுடன், கேட்போரின் உணர்வு, எண்ணம், அனுபவம், என்பவற்றின் உள்வாங்கலினாலும், சமூக வாழ்வியலின் தேவைகளை, தேடல்களை சொல்வோர் - கேட்போர் - பதில் சிந்திப்போர் என பங்கிட்டுகொள்ளும் உறவுநிலைப் பண்பை, தன்மையை கொண்டு பிரசித்தம் பெறுகிறது.
சமூக மட்டத்தில் அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், சேவையாளர்கள் என விரிகின்ற பொறுப்புணர்வாளர்களுக்கு வழிதரும் ஓர் அரிய ஊடகம் வானொலி.
வானொலிக்கலையின் தேவை உணரக்கூடியதாகவே உள்ளது.
உயர்தரத்துடன், விற்பன்னத்துவம் நிறைந்ததாகவும், கேட்போருக்கு விடயங்கள் கொண்டு செல்லப் படுவதனால் சமூகத்தின் ஓர் அங்கமாகி சங்கமித்து நிலை பெறுகிறது.
அதிதொழில் நுட்பமும், பல்துறை நுட்ப அறிவுசார் மனிதவலுத் தேவையும் ஏற்படுகிறது. கற்றல் - அதனால் ஆய பயன் என்ன வென்றால் சரியான, முறையான படைப்பாக்க வெளிப் பாட்டுடன் பகிர்ந்து கொள்ளல். அத்துடன் பொழுது போக்கான உக்த்திக் கையாள்கையுடனான மகிழ்ச்சிப்படுத்தலின் ஊடான ஒன்றுபடல்.
எல்லோருடைய எண்ண வோட்டங்களும் சரியாக இருந்து விடக்கூடிய சூழலிலும், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. வானொலிக்கலையில் பல்வித பிரிவு நிலைத் தன்மைகள் உண்டு பலவிரிவான விளங்கங்களினூடகப் பாக்க வேண்டும்.
அத்தன்மைகளைப் விரிவாக இங்கு எடுத்துக் கூறல் சாத்தியப்படாதது. அதிலும் அனுபவமும், தேர்ச்சி நிலைப் பன்மைத்துவம் இருப்பது தனிச் சிறப்பியல்புகளை கொள்வதோடு, மதிக்கப்பட வேண்டியதும், காக்கப்பட வேண்டியதும், இனக் கடமைப்பாடாகும். இதில் முக்கியமானதாகிறது.
இக்கலை ஆர்வமுள்ளவர், மனவிருப்புடன் முழு ஈடுபாட்டுடன் செயற்பட ஆரம்பிக்கும் போது, அறிவு, ஆற்றல், தேர்ச்சித்திறன் வளர்ச்சி, நுட்பப் பாவனை, அதற்கான முயற்சி இடைவிடா பயிற்சி என்பன ஒருங்கு சேர பெற்றிருந்தால் இக்கலையில் பாரிய வெற்றிகளை சாதிக்க முடியும்.
எந்தவொரு விடயத்திலும் அக்கறை வெளிப்பாட்டுத் தன்மை, மற்றவர்களினூடான தொடர்பாடல் உறவு நிலையில் சரியான அனுகுமுறை, உறுதியான நம்பிக்கை கொண்ட மனத்திடம், சமூக விழிப்புணர்வுடனிருத்தல்,எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருத்தல், பதட்டமற்ற, பண்பான நிலையுடன் உண்மையுள்ளவராய் இருத்தல், ஏனையோர் கூறும் கருத்துக்களை ஆவுலுடன் கேட்பதுடன் அவர்களுடனான தூய்மையான நட்புரையாடலை சுவாரஸ்யமான முறையில் கைக்கொள்வதும், ஈர்ப்புடன் கவருதலும் அறிவுப்புக்கலை பண்புகளில் சில எனலாம்.
சீர்திருத்தம் உள்ள சமூகக் கூட்டமைப்பினை உச்ச வளர்ச்சிக்கு வித்திட்டு, நீர்பாய்ச்சி, வளர்த்து பயன் தரக்கூடிய பணிகளில் ஈடுபடவைக்கக் கூடிய பொறுப்புணர்வு கொண்டவராகிறார்.
வானொலிக்கலையில், அறிப்புக்கலையாளர் சரியான தெரிவுசெய்த விடயத்தானத்தை, விளக்கமாகவும், மொழி உச்சரிப்புத் தெளிவாகவும், சுருக்கமாகவும், பேசுதல், அறிவித்தல் மிக முக்கிய தொடர்பாடல் இலக்கணத்துடன் நடந்து கொள்ளல் மிக அவசியமானது. அத்தோடு எளிமையான முறையாக, நேடியாக விளங்கக் கூடிய மொழி நடையுடன்தொடர்பு படுதல் வேண்டும். நல்ல சொற்தெரிவுகளுடன் அவற்றைக் கொண்டு மன உறுதியுடன், துணிவுடன், ஆற்றல் உடைய தொனியுடன் இனிய குரல் வெளிப்பாட்டுடன் கூறல் அறிவுப்புக்கலையாளரின் தனித்துவமிக்க பண்பெனக் கொள்ளலாம்.
சரியான, நியாயமான, சமூக வளர்ச்சிக்கான, மனமாற்றம், செயல்மாற்றம் இவற்றுக்கான ஊக்குவிப்பே இதனுடைய இலக்காக் கொள்ளக்கூடியது.
ஈர்ப்புடன் கூடிய உரையாடல்கலையூடான ஓர் தூய ஐக்கியம் பேணல் என்பது நன் நிலையாகும். பெற்றுக் கொண்டதை, கற்றுக் கொண்டதை சரியான வடிவத்தெரிவுடன் வானொலிக்கலை நுட்பத்திற்கேற்ப கொடுத்து அதனூடான சித்தி எய்தல் என்பதும் அறிவுப்புக்கலை வெற்றியின் ஒரு படி. பெறுநரின் தேவையை முதலில் சரியாகப் புரிதல் அவசியம். அத்தியாவசியம்.
கூட்டுமொத்த முயற்சியூடான பயணமே வானொலி வளர்ச்சியின் அடிப்படை அத்திவாரம். கேட்பவர் ஒருவராக இருந்தாலும் அவரது பகிர்வு என்பது பலருக்கூடாக எடுத்துச் செல்லப்படும் போது அது இன்னும் பரந்து சென்று விடுகிறது. கொடுத்ததின் ஊடாக கிடைக்கப்பெறும் பின்னூட்டல் முக்கியமாக கவணிக்கப்பட வேண்டியது. அதன் தன்மைகளை அடையாளம் கண்டு சரியான பார்வையில் பிரித்து ஆராய்ந்து ஆய்வு செய்து அறிந்து மீண்டும் கொடுக்கப்படும் விடயத்தில் புதிய அக்கறை செலுத்துதல் பயனளிக்க வல்லது.
பல விடயங்களை உள்ளடக்கியோ அல்லது ஒரு விடயத்தை முன்னிலைப் படுத்தியோ, அன்றி வேறுவடிவத் தொகுப்பை செப்பனிடுதலினூடே வளங்குவதில் பல தன்மை வெளிப்பர்டுகளைக் கொண்ட கலை நிகழ்ச்சித் தயாரிப்புக்கலை.
நிகழ்ச்சித்தயாரிப்புக்கலையாளர்,மற்றவர்களுக்கு விளங்கும் வண்ணம், தனது கற்றலை, வெளிப்பாட்டை வானொலிக்கலைக் குரிய பண்பு முறையில், அதற்கான சிறப்புக்களை அடிப்படையாக வைத்து ஒலிக்காட்சித் தொகுப்பாக்கி பல்வேறு நுட்பங்களை, கைத்திறனை, நிபுணத்துவங்களை கைக்கொண்டு படைப் பாக்கத்தினை வெளிப்படுத்தல் வேண்டும்.
பல வழிகளில் காண்பதை, கேட்பதை அதன் உண்மைத் தன்மைகளை அறிந்து வானொலித் தயாரிப்புக்கு உகந்த வகையில் சரிப்படுத்தி சரியான ஒலிச் சேர்க்கைகளை ஒலிப்பதிவுக்கு உள்ளாக்கி செப்பனிட்டு பொறுப்புணர்வோடு உருவாக்கும் பணி இதுவாகும்.
இதில் அசட்டையீனம், சிறு கவலையீனக் குறைகளும் பல பிழையான விளைவுகளை தந்து விடக்கூடும். இவரும் அறிவுப்புக் கலையாளரின் பண்புகளைக் கொண்டிருத்தல் உச்சப் பயன்தரும்.
குரல்விரும்பத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டு மொழிஉச்சரிப்புடன் தெளிவாகவும், கம்பீரமான தொனி அழகுடனும், விடயம் அர்த்தபடுத்தலுடனும், கவர்ச்சியான ஈரப்புடன் இவை அனைத்தும் அடங்கிய குரல் வளம்.
முக்கியமாகப் பார்த்தால் குரல் ஊடே கேட்போரை குழப்பமின்றி - அதிரச்சியின்றி இரசிக்கக் கூடிய வகையில் குரல்களைப் பாவிக்கும் நுட்பம். சரியான குரல் பொருத்தமான விடயத்துக்கு பாவிக்கப்படுவதால் அவ் வொலிபரப்பலை வெற்றி பெறலாம்.
அறிவித்தல் மற்றும் ஏனை இன்னோரன்ன விடயங்களில், பல ஒலிவடிவத் தயாரிப்புக்கு குரல் பொருத்தம் என்பது வானொலிக்கலைக்கு உயிர் நாடியெனலாம்.
வானொலியில் ஒலிக்கும் குரல்களின் வித்தியாசம் தெரிகின்ற போதும், அந்த வானொலிப் பண்பின் நிமித்தம் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒருவித ஒற்றுமையுடன் ஒரே பாங்கில் இருப்பது போன்ற ஒரு செவிப் பிரமை ஒரே அலைவரிசையில் கேட்போரிடத்தில் உருவாகுதல் இயல்பானது.
இசை வானொலிக் கலைக்கு மிகவும் முக்கியமானது. இக்கலை ஆரம்பம் முதல் என்றும் ஒட்டிப் பிறந்தது. இதனைப்பயன் படுத்தும் முறை, தன்மை,மாற்றங்கள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டிருக்கிறது.
வானொலி நிகழ்ச்சி மெருகூட்டல், அதன் தன்மைகளை வேறுபடுத்தல், கேட்போரை பரவசப் படுத்துதல், உற்சாகப் படுத்துதல், மனமகிழ்வு உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என பயன் விரிகிறது. குறிப்பு இசையூடாக வானொலியின் நிகழ்ச்சசித் தன்மைகளை, நேரக் குறிப்புகளை வித்தியாசங்களை, தனித் தயாரிப்பு வேறுபாடுகளை கேட்போர் புரியும் வகையில் விளக்கம் கொடுக்கிறது.
அதன் பாவனைக்கான பொருத்தப்பாடு சரியாகி கேட்போரை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துக் கொண்டு விட்டால், அதில் இசைவாக்கம் ஆகு நிலை உறுதி என்றாலே வெற்றியின் பங்கொன்று கிடைத்து விட்டது எனக் கொள்ளலாம். இசை பல்வேறு வழிகளிலும் வானொலிக்கலையில் தனிப் பங்காற்றுகிறது.
வானொலி - இதில் ஒலி. இதுதானே அதன் வித்தையை ஒலி விந்தையை காட்டி வானொலிக்கலைக்கு உரம் சேர்ப்பது.பார்த்தல் - ஒரு தொடர்பாடல். இதுவே மனிதனில் அதிகளவு ஆதிக்கம் செலுத்துவது.
அதற்கடுத்து கேட்டல் - இதுதான் முதலிடம் பிடிப்பது என வானொலிக் கலைக்காக சொல்லவில்லை உண்மையும் அதுதான். ஒலி பல கற்பனைகளை, மாற்றங்களை, தத்துரூபமாக எடுத்து விடயத்தானங்களை பிரித்துக் காட்டுவது.
எனவே இதன் தெளிவென்பதே அதிமுக்கியம்.தொழில் நுட்பத்தடை, இரச்சல், எதிரொலி, இவை தடங்கல்களை ஏற்படுத்தும். பொருத்தமான இடத்தில் மிகச்சரியான முறையான ஒலிச்சேர்க்கையென்பது வானொலி க் கலைக்கு மேலும் பலம் சேர்ப்பது.
கொடுப்போர் - கேட்போர்
தொகுமுன்னர் வாசித்த விடயங்கள் வானொலிக்கலையாளருக்கும், கேட்போருக்கும் இரு வழிச்சமம் பெற்ற விடயங்கள் எனலாம். இரு நிலையும் முக்கியமானது. இருகை ஓசை போல் இதன் செய்நிலை ஒலிக்க வேண்டும்.கொடுப்போர்பற்றி பார்த்தோம்.
• கேட்போர் தங்கள் தலையாய பணிகளுக்கிடையே, இலகுவாக செவிமடுத்து தேவைகளை பெறும் ஓர் அரிய பொக்கிச வெளிப்பாட்டுப் பெட்டகமே வானொலி.தேவையானபோது செவிமடுக்கவும், விருப்பமில்லாதவிடத்து நிறுத்திக் கொள்ளும் உரிமையாளர் ஆகிறார். கேட்பதோடு நின்று விடாமல் அவற்றின் பின்னூட்டலை வழங்குதல் இரு வழித் தொடர்பு ஐக்கியத்தையும், அறிவுசார் வளர்ச்சிக்கும் வழிசமைக்கிறது.
பங்கெடுக்க விரும்பும் கேட்போர் நேரடியாகவோ,பிரதிகள்டாகவோ, ஒலிப்பதிவு கடாகவோ, விடயத்தானத்தை புரிந்து, அதற்கான தெளிவு முறைத் தயாரிப்புக்களை மேற்கொண்டு தடங்கல்களை அகற்றி சரியான தொடர்பு வழிகளைக் கைக்கொண்டு மெருகூட்டுவதன் மூலம் இக்கலை சிறப்புறும்.பெரு வெற்றியை ஒருமித்து நிகழ்த்தலாம். கேட்போரின்; துறைசார் - கல்விநிலை - வாழ்வியல் அனுபவப் பகிர்வும் சேர்ந்தே வானொலிக்கலை வளர்ந்து கொண்டே செல்கிறது.
கொடுப்போரே கேட்போராகவும், கேட்போரே கொடுப்போராகவும் செயற்படு நிலை காணப்படுதல் வானொலிக் கலையின் வெற்றி எனக்கொள்ளலாம்.
ஆகவே வளர்த்தெடுப்பதும், பங்கெடுப்பதும் கேட்போர் உரிமையாகிறது. கேட்போருடன்; இணைந்த வாழ்வியலை அறிந்து, அவர்களை ஒருமுகப்படுத்திஎப்பொழுதும் நம்பகமான உண்மை நேர்மையுடன் நல்ல விடயங்களை கொடுத்தல் வானொலிக்கும் அதன் உயரிய வளர்ச்சிக்கும் உகந்தது.