வான்வழித்தாக்குதல்
வான்வழித்தாக்குதல் அல்லது விமானத் தாக்குதல் என்பது வானூர்தி மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கையாகும்.[1] வான்வழித்தாக்குதல்கள் வேவு வானூர்திகள், ஊதுபைகள், சண்டை வானூர்திகள், கனரக குண்டுவீச்சு வானூர்திகள், தரைத் தாக்குதல் வானூர்திகள், தாக்குதல் உலங்கு வானூர்திகள், ஆளில்லாத வானூர்திகள் போன்ற வானூர்திகளிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. வான்வழித்தாக்குதல் என்பதற்கான உத்தியோகபூர்வ வரையறையானது அனைத்து வகையான இலக்குகளையும் உள்ளடக்கியது. இதில் எதிரியின் வான் இலக்குகளும் உட்படும். ஆனால் பிரபலமான பயன்பாட்டில் இது பொதுவாக தரை அல்லது கடற்படை இலக்குகள் மீதான தந்திரோபாய தாக்குதல் முதல் (சிறிய அளவிலான) பொதுவான தாக்குதலான தரைவிரிப்பு குண்டுவீச்சு போன்ற பெரிய தாக்குதல் வரை அமைந்துள்ளது. வான்வழித்தாக்குதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் நேரடிச்சூட்டுக்கு பயன்படுத்தப்படும் வானூர்தியில் பொருத்தப்பட்ட பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், உந்துகணைகள், வானிலிருந்து தரையைத்தாக்கும் ஏவுகணைகள் முதல் பல்வேறு வகையான வான்வழிக் குண்டுகள், சறுக்குக் குண்டுகள், சீர்வேக ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நேரடி ஆற்றல் ஆயுதங்களான சீரொளிகள் போன்றவை வரை இருக்கலாம்.
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ air strike- DOD Dictionary of Military and Associated Terms பரணிடப்பட்டது சூன் 4, 2011 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Airstrikes தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.