வாயிரகைட்டு

சியோலைட்டு கனிமம்

வாயிரகைட்டு (Wairakite) என்பது Ca8(Al16Si32O96)•16H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அனல்சிம் கட்டமைப்பிலான சியோலைட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் கால்சியம் அயனியைக் கொண்டிருக்கிறது. 1955 ஆம் ஆண்டில் செக்கோசுலோவாக்கிய கனிமவியலாளர் ஆல்ஃபிரட் சுடெய்னரால் நியூசிலாந்தின் வட தீவில் உள்ள வாயிரகையில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கனிமம் கண்டுபிடித்த இடத்தின் நினைவாக வாயிரகைட்டு எனப்பெயரிடப்பட்டது. முதல் கண்டுபிடிப்புகள் நீர்வெப்ப மாறுபாட்டால் ஆன சிலிக்கா மிகு இரையோலைட்டு இழைமுடிச்சுகள், இக்னிம்பிரைட்டுகள் மற்றும் எரிமலை பாறைகள் ஆகும். கனிமம் பின்னர் உருமாற்ற பாறைகள் மற்றும் புவிவெப்ப பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1970 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டது.

வாயிரகைட்டு
Wairakite
அசர்பைசானில் கிடைத்த வாயிரகைட்டு
பொதுவானாவை
வகைசியோலைட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa8(Al16Si32O96)•16H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றும் வெண்மையும்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மிளிர்வுபளபளக்கும், மங்கலாகவும் இருக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
மேற்கோள்கள்[1][2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வாயிரகைட்டு கனிமத்தை Wrk[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mindat
  2. Mineralienatlas
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயிரகைட்டு&oldid=4141486" இலிருந்து மீள்விக்கப்பட்டது