வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூலை 2007
- ஜூலை 6 - கிழக்கிலங்கையில் குடும்பிமலையில் இடம்பெற்ற சண்டையில் ஆறு இராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 10 - விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவி செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு தமிழர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டார். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஜூலை 10 - மாங்குளம் பகுதியில் தமிழீழ சுகாதார சேவைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றின் மீது நடத்தப்படட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், வேறு இருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (புதினம்)
- ஜூலை 11 - முல்லைத்தீவு அளம்பிலில் தேவாலயம் மற்றும் மீன்வாடிகள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட பொதுமக்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
- ஜூலை 11 - கிழக்கிலங்கையில் குடும்பிமலை பகுதியை கைப்பற்றியதுடன் கிழக்கிலங்கையை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. (பிபிசி)
- ஜூலை 12 - வவுனியாவில் பறந்து கொண்டிருந்த இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (புதினம்)
- ஜூலை 14 - மன்னாரில் இருமுனைகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 விடுதலைப் புலிகள் பலியாயினர். இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். (வாஷிங்டன் போஸ்ட்), (புதினம்)
- ஜூலை 17 - விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகள் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். (ஏபிசி)
- ஜூலை 19 - குடும்பிமலையைக் கைப்பற்றிய வெற்றியை இலங்கை அரசு கொழும்பில் வெற்றி விழாவாகக் கொண்டாடியது. (பிபிசி)]
- ஜூலை 20 - மன்னார், நீலச்சேனை என்னும் இடத்தில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தளம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதில் 10 இராணுவத்தினரும் 4 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- ஜூலை 23 - யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் மரியநாயகம் அலோசியஸ் (வயது 26) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (புதினம்)
- ஜூலை 24 - வவுனியா செட்டிக்குளத்தில் இலங்கை இராணுவத்தினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் குறைந்தது 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 30 - கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஜூலை 15இல் கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொறியியலாளரின் சடலம் அவிசாவளையில் கண்டெடுக்கப்படட்து. (டெய்லி மிரர்)
- ஜூலை 31 - யாழ்ப்பாணம் வரணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் மூன்று இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)