வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2007
- டிசம்பர் 29 - மன்னாரில் இலங்கைப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரும் 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர். (புதினம்)
- டிசம்பர் 27 - வவுனியா குருமண்காடுப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் காயமடைந்தனர். (புதினம்)
- டிசம்பர் 27 -டிசம்பர் 24 ஆம் நாள் இலங்கைப் படையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் விடுவிப்பு.(புதினம்)
- டிசம்பர் 26 - யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் டோறாப் பீரங்கிப் படகு ஒன்றை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்தனர். இரண்டு டோறாக்கள் சேதமடைந்தன. (புதினம்)
- டிசம்பர் 26 - இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இந்தோனீசியாவுக்குச் சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை கடற்படையிரால் தடுத்து நிறுத்தப்பட்டது. (பதிவு)
- டிசம்பர் 24 - இலங்கைப் படையினரால் கொழும்பில் பிரெஞ்சு தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். (பதிவு)
- டிசம்பர் 23 - அமெரிக்காவின் செனட்சபை இலங்கைக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டதை அடுத்து இரசியா இலங்கை அரசுக்கு படைத்துறை உதவிகளை வழங்க பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. (தமிழின் வெற்றி)
- டிசம்பர் 22 - மன்னார், உயிலங்குளத்தில் இரு முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இடம்பெற்ற சமரில் 17 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 19 - தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளராக கே. இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். (புதினம்)
- டிசம்பர் 18 - வவுனியா, வீரபுரம் என்ர இடத்தில் இலங்கை இராணுவ காவலரண் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 18 - அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். (புதினம்)
- டிசம்பர் 11 - மன்னாரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதலில் 20 இராணுவத்தினரும் 3 புலிகளும் கொல்லப்பட்டனர். (புதினம்)
- டிசம்பர் 5 - அநுராதபுரத்தில் கெப்பிட்டிகொல்லாவ என்ற இடத்தில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 5 - வவுனியா தந்திரிமலை சின்னசிப்பிக்குளத்தில் அமுக்க வெடியில் சிக்கி 4 படையினர் கொல்லப்பட்டு 2 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- டிசம்பர் 2 - கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 3,000 இற்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டனர். (புதினம்)