வார்ப்புரு:மேம்படுத்துக
வணக்கம், மேம்படுத்துக! நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
- பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
- எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
- கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
- தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
- தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
- கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
- கட்டுரையை விரிவாக்கலாம்.
- கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.
ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.