வார்ப்புரு பேச்சு:Subcat guideline
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags
மேலுள்ளவற்றில் எது சரியானது?
விக்கிப்பீடியாவில் முன்னிலை தவிற்கப்பட வேண்டுமா?
பின்பற்றவும், தவிர்க்கவும், பயன்படுத்தவும் முதலியவை கட்டளைச் சொற்களா (imperative) அல்லது உம்மைத்தொகையா (conjunction)? ஐயம் களைந்தமைக்கு (முன்னதாகவே) நன்றிகள்
- ʋɐɾɯn (பேச்சு) 11:01, 5 அக்டோபர் 2015 (UTC)
- எதுவும் கட்டயமில்லை என்றாலும், முதலாவது நன்றாகவே உள்ளது. இரண்டாவதில், "கேட்டுக்கொள்ளப்படுகிறது போன்ற சொற்கள் அந்நியமாகப் படுகிறது.--Kanags \உரையாடுக 11:09, 5 அக்டோபர் 2015 (UTC)
- அருண், இந்த வார்ப்புரு ஓர் பயனருடனான தொடர்பாடலாகும்; எனவே முன்னிலையில் உள்ள முதற்பெட்டியே பொருத்தமானது. மேலும் பல வார்ப்புருக்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. எளிமையான மொழியும் தெளிவான வழிகாட்டல்களும் இல்லை என்பது பல பயனர்களின் குறைபாடாகும். ஆனால் கட்டுரைவெளியில் இவ்வாறான முன்னிலை நடை தவிர்க்கப்பட வேண்டும்.
- பி.கு:மேலே பகுத்தறிவு என்பதற்கு மாறாக பொதுவறிவு (common sense) எனலாம் என எண்ணுகின்றேன்.--மணியன் (பேச்சு) 11:38, 5 அக்டோபர் 2015 (UTC)
- பொதுவறிவு - general knowledge, common sense - இயல்பறிவு?--Kanags \உரையாடுக 07:35, 8 அக்டோபர் 2015 (UTC)