வாளவாடி

இது தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும்

பெரிய வாளவாடி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் , உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சி உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியிலிருந்து உள்ளாட்சிகளை நிருவகிக்க 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர்.

ஊரின் பழைய பெயர் தொகு

இந்த ஊரின் பழைய பெயர் “அமணசமுத்திரம்”. பெரியவாளவாடியிலிருந்து தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை என்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலின் நினைவாக இவ்வூர் அமணசமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. பின் நாளடைவில் பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி எனப் பிரிக்கப்பட்டது.

பெரிய வாளவாடியில் ஒரு தொடக்கப்பள்ளியும், ஒரு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் மூலம் பெரிய வாளவாடியைச் சுற்றியுள்ள வேலூர், தீபாலபட்டி, மொடக்குப்பட்டி, பழையூர், வட பூதனம், சுண்டக்காம்பாளையம் போன்ற பல கிராம மக்கள் பயனடைகின்றனர்.

ஊரில் கார்ப்பரேசன் வங்கி, நியாய விலைக்கடை, கூட்டுறவு அங்காடி, தபால் நிலையம் போன்றவை உள்ளன.

இக்கிராம மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் ஆகும். இக்கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளவாடி&oldid=3697079" இலிருந்து மீள்விக்கப்பட்டது