விகடகவி
விகடகவி (Vikadakavi) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்ததை முன்னாள் ஒலிப் பொறியாளரான ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ் மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 2011 ஏப்ரல் 22 அன்று வெளியானது.[2] இந்த படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. மேலும் இது முன்னணி நடிகை அமலா பாலின் முதல் படமாகும்.[3][4][5] படத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர் மைனா மற்றும் வீரசேகரன் உள்ளிட்ட பிற படங்களில் பணியாற்றினார்.[4]
விகடகவி | |
---|---|
இயக்கம் | ஜி. கிருஷ்ணன் பாலசுப்பிரமணி |
தயாரிப்பு | சி. சரவணன் டி. ஆர். சேவுகன் |
இசை | ராடன் |
நடிப்பு | சத்தீஷ் அமலா பால் |
ஒளிப்பதிவு | முபூ ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | ஏபிசி ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 22 ஏப்ரல் 2011 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுவிகடகவி ஐந்து நண்பர்களின் நகைச்சுவைக் கதை, அவர்கள் கிராமவாசிகளுக்கு இம்சையைக் கொடுக்கிறார்கள்.
நடிப்பு
தொகு- சதிஷ் வினோத்
- அமலா பால் கவிதாவாக
- விருச்சிககாந்த் கருணாவாக
- பேச்சி டயானாவாக
- இர்ஷாத் விருமாண்டியாக
தயாரிப்பு
தொகுஅமலா பால் கல்லூரியில் பயின்றபோது இந்தப் படத்தில் பணியாற்றினார்.[6]
வரவேற்பு
தொகுதி இந்து எழுதிய விமர்சனத்தில், " குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட விகடகவி, இரசிகர்களைக் கவர்வதற்கு கதாபாத்திரம், உரையாடல், திரைக்கதை ஆகியவற்றை பெரிதும் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இவற்றைக் கையாண்ட கிருஷ்ணன் ஏமாற்றவில்லை ".[7] நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சனத்தில் "விகடகவியில் புகழ்ந்து பேசுவதற்கு பெரியதாக ஒன்றும் இல்லை, ஆனால் நிச்சயமாக ஒரு அறிமுக இயக்குநரின் எதிர்பார்ப்பை கடந்து உள்ளது" என்று எழுதியது.[8] முன்னணி நடிகர்களின் நடிப்பை பாராட்டிய தினமலர், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவை விமர்சித்தது.[9] குங்குமம் கதையைப் பாராட்டியது.[10]
குறிப்புகள்
தொகு
- ↑ Anupama Subramanian chennai (2011-04-16). "Amala Paul takes the de-glam route". Deccan Chronicle. Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "Friday Fiesta 220411 - Tamil Movie News". IndiaGlitz. 2011-04-22. Archived from the original on 2011-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "விகடகவி". Dinamani.
- ↑ 4.0 4.1 "Advantage Amala". The Hindu. 24 April 2011.
- ↑ Rao, Subha J. (14 May 2011). "Reason to smile" – via www.thehindu.com.
- ↑ "Busy bee". 29 January 2010 – via www.thehindu.com.
- ↑ Rangarajan, Malathi (23 April 2011). "Funny, to an extent". The Hindu.
- ↑ "Exceeding expectations". The New Indian Express.
- ↑ "விகடகவி - விமர்சனம்". cinema.dinamalar.com.
- ↑ "விகடகவி - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in.