விகாசு தாக்ரே

இந்திய அரசியல்வாதி

விகாசு பாண்டுரங் தாக்கரே (Vikas Thakre) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 14-ஆவது மகாராட்டிரா சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தாக்கரே இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர்.[1][2][3] இவர் நாக்பூர் மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2020 டிசம்பர் முதல் நாக்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். தாக்கரே 2024 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியினை எதிர்த்துப் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பின்னர் நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

விகாசு தாக்ரே
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்சுதாகர் தேசுமுக்
தொகுதிநாக்ப்பூர் மேற்கு
பதவியில்
2019–2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஆகத்து 1966
நாக்பூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி
துணைவர்விருந்தா
பிள்ளைகள்2
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Vikas Thakre is Nagpur Congress chief | Nagpur News - Times of India". The Times of India.
  2. "Vikas Pandurang Thakre Election Results 2019: News, Votes, Results of Maharashtra Assembly". NDTV.com.
  3. "Vikas Pandurang Thakare(Indian National Congress(INC)):Constituency- NAGPUR WEST(NAGPUR) - Affidavit Information of Candidate:". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாசு_தாக்ரே&oldid=4152383" இலிருந்து மீள்விக்கப்பட்டது