விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 16
- 1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.
- 1858 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
- 1929 – பாலத்தீனத்தில் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.
- 1930 – முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- 1946 – கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் (படம்) ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
- 1962 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
அ. மாதவையா (பி. 1872) · ஒரு விரல் கிருஷ்ணா ராவ் (இ. 2002) · ஜிக்கி (இ. 2004)
அண்மைய நாட்கள்: ஆகத்து 15 – ஆகத்து 17 – ஆகத்து 18