விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 27
ஆகத்து 27: மல்தோவா - விடுதலை நாள் (1991)
- 1781 – பொள்ளிலூர் போர்: ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசுப் படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் போர் இடம்பெற்றது. 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1859 – அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
- 1883 – இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,400 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
- 1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது.
- 1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
- 1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபு (படம்) ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
எம். எம். தண்டபாணி தேசிகர் (பி. 1908) · தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (இ. 1980) · அ. ச. ஞானசம்பந்தன் (இ. 2002)
அண்மைய நாட்கள்: ஆகத்து 26 – ஆகத்து 28 – ஆகத்து 29