விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 07:57 மணி வெள்ளி, திசம்பர் 13, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
நவம்பர் 1: புனிதர் அனைவர் விழா
- 1512 – மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை (படம்) பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
- 1755 – போர்த்துகல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1765 – பிரித்தானிய நாடாளுமன்றம் வட அமெரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு 13 குடியேற்ற நாடுகளில் முத்திரை வரியை அறிமுகப்படுத்தியது.
- 1928 – துருக்கிய மொழி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.
- 1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
- 1956 – இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
- 1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.
மோகன் குமாரமங்கலம் (பி. 1916) · தியாகராஜ பாகவதர் (இ. 1959) · ஆ. வேலுப்பிள்ளை (இ. 2015)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 31 – நவம்பர் 2 – நவம்பர் 3
- 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர் (படம்).
- 1917 – பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலத்தீன நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
- 1936 – பிபிசி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1956 – சூயெசு நெருக்கடி: இசுரேல் காசாக்கரையை ஆக்கிரமித்தது.
- 1965 – வியட்நாம் போரில் நேப்பாம் குண்டுகள் வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நண்பர்களின் சமய சமூகத்தைச் சேர்ந்த நார்மன் மொரிசன் என்பவர் பென்டகன் முன்னே தீக்குளித்து மாண்டார்.
- 2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
பரிதிமாற் கலைஞர் (இ. 1903) · ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (இ. 1917) · ஏ. பெரியதம்பிப்பிள்ளை (இ. 1978)
அண்மைய நாட்கள்: நவம்பர் 1 – நவம்பர் 3 – நவம்பர் 4
- 1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
- 1848 – நெதர்லாந்தில் இட்ச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1957 – உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை, லைக்கா (படம்) என்னும் நாயை சோவியத் ஒன்றியம் இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.
- 1963 – தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது.
- 1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1964 – வாசிங்டன், டி. சி. மக்கள் முதன் முறையாக அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
- 1988 – இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளிகளினால் மாலை தீவுகள் அரசைக் கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
பெங்களூர் நாகரத்தினம்மா (பி. 1878) · ஏ. கே. செட்டியார் (பி. 1911) · ஈ. வி. சரோஜா (இ. 2006)
அண்மைய நாட்கள்: நவம்பர் 2 – நவம்பர் 4 – நவம்பர் 5
- 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.
- 1922 – எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.
- 1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
- 1967 - நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
- 1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே (படம்) சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
- 1979 – ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
- 1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
டி. கே. இராமானுசர் (இ. 1985) · கி. வா. ஜகந்நாதன் (இ. 1988) · கு. மா. பாலசுப்பிரமணியம் (இ. 1994)
அண்மைய நாட்கள்: நவம்பர் 3 – நவம்பர் 5 – நவம்பர் 6
நவம்பர் 5: கை பாக்சு இரவு (ஐக்கிய இராச்சியம்) · உலக சுனாமி விழிப்புணர்வு நாள்
- 1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.
- 1605 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.
- 1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் (படம்) வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
- 1872 – அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய சூசன் பிரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
- 2006 – 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
- 2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.
சைமன் காசிச்செட்டி (இ. 1860) · கா. சு. பிள்ளை (பி. 1888) · கனக செந்திநாதன் (பி. 1916)
அண்மைய நாட்கள்: நவம்பர் 4 – நவம்பர் 6 – நவம்பர் 7
- 1759 – பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
- 1860 – ஆபிரகாம் லிங்கன் (படம்) அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.
- 1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
- 1943 – இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து-முசுலிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.
- 1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் சப்பான், நாகசாகியில் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.
- 1999 – ஆத்திரேலியாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க பெரும்பான்மையானோர் சம்மதம் தெரிவித்தனர்.
சூலமங்கலம் ராஜலட்சுமி (பி. 1937) · மு. பொன்னம்பலம் (இ. 2024)
அண்மைய நாட்கள்: நவம்பர் 5 – நவம்பர் 7 – நவம்பர் 8
நவம்பர் 7: பெலருஸ் – அக்டோபர் புரட்சி நாள் (1917)
- 1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.
- 1910 – உலகின் முதலாவது விமான அஞ்சல் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் (படம்) ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
- 1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.
- 1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி செருமனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
சி. வி. இராமன் (பி. 1888) · என். சி. வசந்தகோகிலம் (இ. 1951) · கிருபானந்த வாரியார் (இ. 1993)
அண்மைய நாட்கள்: நவம்பர் 6 – நவம்பர் 8 – நவம்பர் 9
- 1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார்.
- 1811 – இலங்கையில் மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், யாழ்ப்பாணத்தில் கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. குற்றவியல் வழக்குகளுக்கு சான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.
- 1892 – கறுப்பின, மற்றும் வெள்ளையின அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் முதல் தடவையாக ஒன்றிணைந்து நியூ ஓர்லென்சு மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர்.
- 1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் (படம்) கண்டுபிடித்தார்.
- 1957 – ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது ஐதரசன் குண்டை பசிபிக் பிராந்தியத்தில் கிரிபட்டி தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.
- 2006 – வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சி. கணேசையர் (இ. 1958) · சக்தி கிருஷ்ணசாமி (இ. 1987) · சோ. சிவபாதசுந்தரம் (இ. 2000)
அண்மைய நாட்கள்: நவம்பர் 7 – நவம்பர் 9 – நவம்பர் 10
நவம்பர் 9: கம்போடியா - விடுதலை நாள் (1953)
- 1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- 1867 – சப்பானின் கடைசி இராணுவ ஆட்சியாளர் ஆட்சியை சப்பானியப் பேரரசரிடம் ஒப்படைத்தனர். மெய்சி மீள்விப்பு ஆரம்பமானது.
- 1907 – கலினன் வைரம் இங்கிலாந்தின் ஏழாம் எட்வர்டு மன்னருக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு பரிசளிக்கப்பட்டது.
- 1914 – செருமனியின் எம்டன் கப்பல் கொக்கோசு தீவுகளில் இடம்பெற்ற போரில் ஆத்திரேலியாவின் சிட்னி கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
- 1918 – செருமனியப் புரட்சியை அடுத்து இரண்டாம் வில்லியம் முடி துறந்தார். செருமனி குடியரசானது.
- 1989 – பனிப்போர் முடிவுற்றமைக்கான அறிகுறியாக கிழக்கு செருமனி பேர்லின் சுவரைத் (படம்) திறந்து விட்டது, சோவியத் கம்யூனிசத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது.
பி. எஸ். வீரப்பா (இ. 1998) · வல்லிக்கண்ணன் (இ. 2006) · சிற்பி (இ. 2015)
அண்மைய நாட்கள்: நவம்பர் 8 – நவம்பர் 10 – நவம்பர் 11
- 1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தது.
- 1945 – சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1975 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.
- 1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1989 – செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.
- 2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு (படம்) விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.
கொத்தமங்கலம் சுப்பு (பி. 1910) · சாண்டில்யன் (பி. 1910) · தமிழ்வாணன் (இ. 1977)
அண்மைய நாட்கள்: நவம்பர் 9 – நவம்பர் 11 – நவம்பர் 12
- 1675 – கோட்பிரீட் லைப்னிட்ஸ் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார்.
- 1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார்.
- 1869 – பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் விக்டோரிய பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் ஆத்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் திருடப்பட்ட தலைமுறைகளுக்கு வழிவகுத்தது.
- 1918 – பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் செருமனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது (படம்). முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
- 1933 – யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.
- 2004 – யாசிர் அரஃபாத் இனந்தெரியாத காரணங்களால் உயிரிழந்ததை பலத்தீன விடுதலை இயக்கம் உறுதி செய்தது. மகுமுது அப்பாசு தலைவரானார்.
கி. ஆ. பெ. விசுவநாதம் (பி. 1899) · டி. பி. ராஜலட்சுமி (பி. 1911) · மே. ரா. மீ. சுந்தரம் (இ. 1995)
அண்மைய நாட்கள்: நவம்பர் 10 – நவம்பர் 12 – நவம்பர் 13
- 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார்.
- 1893 – அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாக்கித்தான்) ஆப்கானித்தானுக்கும் இடையேயான துராந்து எல்லைக்கோடு (படம்) கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
- 1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
- 1927 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
- 1980 – நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
- 1991 – கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
- 1996 – சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது தில்லிக்கு அருகில் வானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
வல்லிக்கண்ணன் (பி. 1920) · கண. முத்தையா (இ. 1997) · சிவாய சுப்பிரமணியசுவாமி (இ. 2001)
அண்மைய நாட்கள்: நவம்பர் 11 – நவம்பர் 13 – நவம்பர் 14
- 1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.
- 1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 – தென்னிலங்கையில் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் முதல் நாள் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
- 2015 – புவியின் விண்வெளிக் கழிவு டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது (படம்).
சங்கரதாசு சுவாமிகள் (இ. 1922) · பி. சுசீலா (பி. 1935) · இந்திரா சௌந்தர்ராஜன் (பி. 1958)
அண்மைய நாட்கள்: நவம்பர் 12 – நவம்பர் 14 – நவம்பர் 15
நவம்பர் 14: இந்தியக் குழந்தைகள் நாள்
- 1579 – "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
- 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பெலருசில் செருமனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.
- 1967 – அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் (படம்) உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
- 1991 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.
தி. கோ. சீனிவாசன் (இ. 1922) · ஓம் முத்துமாரி (இ. 2013) · கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: நவம்பர் 13 – நவம்பர் 15 – நவம்பர் 16
நவம்பர் 15: பிரேசில்: குடியரசு நாள் (1889)
- 1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
- 1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் (படம்) வாக்குரிமை பறிக்கப்பட்டது.
- 1949 – நாத்தூராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் மகாத்மா காந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர்.
- 1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதலாவது வணிகரீதியிலான 4004 என்ற ஒற்றைச்சில் நுண்செயலியை வெளியிட்டது.
- 1978 – டக்ளஸ் டிசி-8 தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் உயிரிழந்தனர்.
- 1988 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: பாலத்தீனம் தனிநாடாக பாலத்தீன தேசியப் பேரவையினால் அறிவிக்கப்பட்டது.
- 2000 – இந்தியாவில் சார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
- 2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (பி. 1877) · பூர்ணம் விஸ்வநாதன் (பி. 1921)
அண்மைய நாட்கள்: நவம்பர் 14 – நவம்பர் 16 – நவம்பர் 17
நவம்பர் 16: உலக சகிப்புத் தன்மை நாள்
- 1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி உருசிய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு, கடுந்தொழில் செய்யக் கட்டளையிடப்பட்டார்.
- 1933 – ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
- 1945 – யுனெஸ்கோ (படம்) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
- 1974 – ஆரசீபோ தகவல் 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன்களுக்கு அனுப்பப்பட்டது.
- 1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாக்கித்தானில் நடைபெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஊமைத்துரை (இ. 1801) · கனக செந்திநாதன் (இ. 1977) · சித்பவானந்தர் (இ. 1985)
அண்மைய நாட்கள்: நவம்பர் 15 – நவம்பர் 17 – நவம்பர் 18
நவம்பர் 17: அனைத்துலக மாணவர் நாள்
- 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
- 1869 – எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
- 1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
- 1939 – செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
- 1947 – அமெரிக்க அறிவியலாளர்கள் ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் திரிதடையத்தின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர் (படம்). 20-ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.
- 1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
சி. இலக்குவனார் (பி. 1909) · திருச்சி லோகநாதன் (இ. 1989) · பித்துக்குளி முருகதாஸ் (இ. 2015)
அண்மைய நாட்கள்: நவம்பர் 16 – நவம்பர் 18 – நவம்பர் 19
- 1626 – புதிய புனித பேதுரு பேராலயம் (படம்) உரோமை நகரில் திறந்து வைக்கப்பட்டது.
- 1803 – எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
- 1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
- 1928 – வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.
- 1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
- 1993 – தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.
வ. உ. சிதம்பரம் (இ. 1936) · தி. ஜானகிராமன் (இ. 1982) · கா. மீனாட்சிசுந்தரம் (இ. 2015)
அண்மைய நாட்கள்: நவம்பர் 17 – நவம்பர் 19 – நவம்பர் 20
நவம்பர் 19: உலகக் கழிவறை நாள், அனைத்துலக ஆண்கள் நாள்
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.
- 1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.
- 1943 – பெரும் இன அழிப்பு: நாட்சிகள் மேற்கு உக்ரைனில் லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.
- 1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர் (படம்).
எஸ். ஏ. அசோகன் (இ. 1982) · சி. வி. வேலுப்பிள்ளை (இ. 1984) · எம். என். நம்பியார் (இ. 2008)
அண்மைய நாட்கள்: நவம்பர் 18 – நவம்பர் 20 – நவம்பர் 21
- 1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.
- 1945 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.
- 1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.
- 1977 – ஆறு ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
- 1994 – அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா (படம்) கசக்ஸ்தானில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1999 – இலங்கையில் மன்னார், மடுத் தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 31 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
எம். கே. ராதா (பி. 1910) · ஜி. ராமநாதன் (இ. 1963)
அண்மைய நாட்கள்: நவம்பர் 19 – நவம்பர் 21 – நவம்பர் 22
நவம்பர் 21: உலகத் தொலைக்காட்சி நாள்
- 1676 – தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் (படம்) ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார்.
- 1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.
- 1905 – ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
- 1918 – உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர்.
- 1962 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
- 1971 – வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி வாகினியின் உதவியுடன் இந்தியப் படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாக்கித்தான் படைகளைத் தோற்கடித்தன.
- 2017 – 37 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் ராபர்ட் முகாபே சிம்பாப்வே அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
சி. வி. இராமன் (இ. 1970) · தி. சு. அவிநாசிலிங்கம் (இ. 1991) · மால்கம் ஆதிசேசையா (இ. 1994)
அண்மைய நாட்கள்: நவம்பர் 20 – நவம்பர் 22 – நவம்பர் 23
நவம்பர் 22: லெபனான் – விடுதலை நாள் (1943)
- 1635 – சீனக் குடியரசின் டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள்: மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானைப் போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், சங் கை செக் ஆகியோர் கெய்ரோவில் சந்தித்தனர்.
- 1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார்.
- 1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
- 1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (பி. 1839) · அ. சிதம்பரநாதச் செட்டியார் (இ. 1967) · எம். பாலமுரளிகிருஷ்ணா (இ. 2016)
அண்மைய நாட்கள்: நவம்பர் 21 – நவம்பர் 23 – நவம்பர் 24
- 1857 – ஐக்கிய இராச்சியத்தின் சிபெல்லா என்ற பயணிகள் கப்பல் கொழும்புக்கு அருகே மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர்.
- 1924 – அந்திரொமேடா நெபுலா (படம்) உண்மையில் நமது பால் வழிக்கு வெகுதூரத்தேயுள்ள பிறிதொரு விண்மீன் பேரடை என்ற எட்வின் ஹபிளின் கண்டுபிடிப்பு முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
- 1978 – கிழக்கு மாகாண சூறாவளி, 1978: இலங்கையின் மட்டக்களப்பில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1985 – எகிப்தியப் பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
- 1992 – ஐபிஎம் சைமன் என்ற முதலாவது திறன்பேசி, லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுரதா (பி. 1921) · ஏ. எல். சீனிவாசன் (பி. 1923) · மு. அருணாசலம் (இ. 1992)
அண்மைய நாட்கள்: நவம்பர் 22 – நவம்பர் 24 – நவம்பர் 25
- 1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்..
- 1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் (படம்) என்ற நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
- 1922 – துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1965 – யோசப் மொபுட்டு கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- 1971 – வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
- 2016 – கொலம்பியா அரசும் கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (இ. 1953) · ஏ. எம். ஏ. அசீஸ் (இ. 1973)
அண்மைய நாட்கள்: நவம்பர் 23 – நவம்பர் 25 – நவம்பர் 26
நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்
- 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தார்.
- 1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே (படம்) தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.
- 1667 – காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1936 – சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனைக் கூட்டாக எதிர்கொள்ள சப்பானும், செருமனியும் பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
- 1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
ராஜா சாண்டோ (இ. 1943) · துவாரம் வேங்கடசுவாமி (இ. 1964)
அண்மைய நாட்கள்: நவம்பர் 24 – நவம்பர் 26 – நவம்பர் 27
நவம்பர் 26: இந்திய அரசியலமைப்பு நாள்
- 1922 – எகிப்திய பார்வோன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த்சு பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
- 1949 – அம்பேத்கர் (படம்) சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
- 1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
- 1970 – குவாதலூப்பின் பாசு-தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.
- 2008 – மும்பாய் நகரில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பொன்னம்பலம் இராமநாதன் (இ. 1930) · வேலுப்பிள்ளை பிரபாகரன் (பி. 1954) · ஐராவதம் மகாதேவன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: நவம்பர் 25 – நவம்பர் 27 – நவம்பர் 28
நவம்பர் 27: தமிழ் ஈழம் - மாவீரர் நாள்
- 1895 – பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
- 1935 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது.
- 1971 – சோவியத்தின் "மார்ஸ் 2" விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
- 1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் (படம்) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.
- 2001 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
- 2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
ஆ. பூவராகம் பிள்ளை (பி. 1899) · தி. சதாசிவ ஐயர் (இ. 1950) · எஸ். யேசுரத்தினம் (இ. 2010)
அண்மைய நாட்கள்: நவம்பர் 26 – நவம்பர் 28 – நவம்பர் 29
நவம்பர் 28: விடுதலை நாள் - பனாமா (1821), அல்பேனியா (1912), மூரித்தானியா (1960)
- 1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் அத்திலாந்திக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
- 1942 – அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியையும், யப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், உருசியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள் (படம்).
- 1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
- 1989 – பனிப்போர்: செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
வி. கே. வெள்ளையன் (பி. 1918) · பொ. ம. இராசமணி (இ. 2009)
அண்மைய நாட்கள்: நவம்பர் 27 – நவம்பர் 29 – நவம்பர் 30
- 1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.
- 1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
- 1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.
- 1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் (படம்) என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
- 1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.
- 1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
என். எஸ். கிருஷ்ணன் (பி. 1908) · எஸ். வி. சகஸ்ரநாமம் (பி. 1913) · அ. மருதகாசி (இ. 1989)
அண்மைய நாட்கள்: நவம்பர் 28 – நவம்பர் 30 – திசம்பர் 1
- 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
- 1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடானது.
- 1803 – லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
- 1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.
- 1872 – முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
- 1936 – இலண்டனில் பளிங்கு அரண்மனை (படம்) தீப்பற்றி எரிந்து அழிந்தது.
- 1947 – பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.
கோவைக்கிழார் (பி. 1888) · ச. து. சுப்பிரமணிய யோகி (பி. 1904) · டி. ஆர். இராமச்சந்திரன் (இ. 1990)
அண்மைய நாட்கள்: நவம்பர் 29 – திசம்பர் 1 – திசம்பர் 2