முதன்மை பட்டியைத் திறக்கவும்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்Project Tiger update: Let's walk together with Wikipedia Asian Month and WWWWதொகு

 
The Tiger says "Happy Dipavali" to you
Apologies for writing in English, Kindly translate this message if possible.

Greetings!

First of all "Happy Dipavali/Festive season". On behalf of the Project Tiger 2.0 team we have exciting news for all. Thanks for your enthusiastic participation in Project Tiger 2.0. You also know that there is a couple of interesting edit-a-thons around. We are happy to inform that the Project Tiger article list just got bigger.

We'll collaborate on Project Tiger article writing contest with Wikipedia Asian Month 2019 (WAM2019) and Wiki Women for Women Wellbeing 2019 (WWWW-2019). Most communities took part in these events in the previous iterations. Fortunately this year, all three contests are happening at the same time.

Wikipedia Asian Month agenda is to increase Asian content on Wikipedias. There is no requirement for selecting an article from the list provided. Any topic related to Asia can be chosen to write an article in WAM. This contest runs 1 November till 30 November. For more rules and guidelines, you can follow the event page on Meta or local Wikis.

WWWW focus is on increase content related to women's health issues on Indic language Wikipedias. WWWW 2019 will start from 1 November 2019 and will continue till 10 January 2020. A common list of articles will be provided to write on.

In brief: The articles you are submitting for Wikipedia Asian Month or WWWW, you may submit the same articles for Project Tiger also. Articles created under any of these events can be submitted to fountain tool of Project Tiger 2.0. Article creation rule will remain the same for every community. -- sent using MediaWiki message delivery (பேச்சு) 12:44, 29 அக்டோபர் 2019 (UTC)

Wikipedia Asian Month 2019தொகு

Please help translate to your language

Wikipedia Asian Month is back! We wish you all the best of luck for the contest. The basic guidelines of the contest can be found on your local page of Wikipedia Asian Month. For more information, refer to our Meta page for organizers.

Looking forward to meet the next ambassadors for Wikipedia Asian Month 2019!

For additional support for organizing offline event, contact our international team on wiki or on email. We would appreciate the translation of this message in the local language by volunteer translators. Thank you!

Wikipedia Asian Month International Team.

MediaWiki message delivery (பேச்சு) 16:57, 31 அக்டோபர் 2019 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019தொகு

வணக்கம். விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 இன்று முதல் துவங்குகிறது. வழக்கம் போல் பங்களிப்பு செய்யுமாறு பயனர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். திட்டப்பக்கம், இங்கு பங்களிப்போர்கள் தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளவும். வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைகளையும் ஆசிய மாத கட்டுரைகளும் ஒன்றாகவும் இருக்கலாம் (இரண்டு போட்டிகளின் விதிமுறைகளையும் பார்க்கவும்). நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:07, 1 நவம்பர் 2019 (UTC)

சென்னையில் விக்கி நிகழ்வுதொகு

வேங்கைத் திட்டம் மற்றும் இதர போட்டிகளை மையமாக வைத்து சென்னையில் தொடர் தொகுப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 07:33, 5 நவம்பர் 2019 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்தொகு

மீண்டும் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பகுதியை இடம்பெறச் செய்வது புதிதாக வந்துள்ள பல பயனர்களுக்குத் தக்க அங்கீகாரம் வழங்குவதாக அமையும். இதைப் பொறுப்பெடுத்து இற்றைப்படுத்த யாராவது முன்வர வேண்டுகிறேன். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புதிய பயனர் ஒருவரின் சிறு அறிமுகம், புகைப்படத்தைப் பெற்று முதற்பக்கத்தில் இற்றைப்படுத்த வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு நிருவாக அணுக்கம் தேவை இல்லை. இப்பணியைப் பொறுப்பெடுக்க முன்வருவோருக்குக் கூடுதல் வழிகாட்டல் வழங்குவதோடு உறுதுணையாகவும் இருக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:12, 5 நவம்பர் 2019 (UTC)

இப்பணியைப் பொறுப்பெடுத்து செய்ய விரும்புகிறேன-.ஹிபாயத்துல்லா (பேச்சு) 09:42, 6 நவம்பர் 2019 (UTC)

  விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 14:55, 7 நவம்பர் 2019 (UTC)

  விருப்பம் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:26, 7 நவம்பர் 2019 (UTC)

@Hibayathullah: மகிழ்ச்சி. கூடுதல் விவரங்களை உங்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறேன். --இரவி (பேச்சு) 17:49, 7 நவம்பர் 2019 (UTC)

புதுப்பயனர் கட்டுரைகள்தொகு

இன்று புதுப்பயனர் நடமாட்டம் கூடுதலாகத் தென்படுகிறது. கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். யாராவது விக்கிப்பீடியர் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறீர்களா? நிருவாகிகள் இக்கட்டுரைகளை உடனுக்கு உடன் நீக்காமல், தகுந்த வார்ப்புரு இட்டு, இயன்ற அளவு கட்டுரைகளை மேம்படுத்திக் காட்டினால் புதுப்பயனர்களை அரவணைத்து வளர்க்க உதவியாக இருக்கும். பார்க்கவும் - விக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள்#கொள்கை மீளாய்வு--இரவி (பேச்சு) 17:48, 7 நவம்பர் 2019 (UTC)

இவ்வாறு பயிற்சி கொடுப்பவர்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:11, 8 நவம்பர் 2019 (UTC)

Project Tiger 2.0 - Hardware support recipients listதொகு

Excuse us for writing in English, kindly translate the message if possible

Hello everyone,

Thank you all for actively participating and contributing to the writing contest of Project Tiger 2.0. We are very happy to announce the much-awaited results of the hardware support applications. You can see the names of recipients for laptop here and for laptop see here.

78 Wikimedians will be provided with internet stipends and 50 Wikimedians will be provided with laptop support. Laptops will be delivered to all selected recipients and we will email you in person to collect details. Thank you once again.

Regards. -- User:Nitesh (CIS-A2K) and User:SuswethaK(CIS-A2K) (on benhalf of Project Tiger team)
using --MediaWiki message delivery (பேச்சு) 07:15, 8 நவம்பர் 2019 (UTC)

சுழற்சங்கம், சேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை நிகழ்வுதொகு

08.11.2019 அன்று மாலை 6 மணியளவில் சேலம் சுழற்சங்க அலுவலகக்கூடத்தில் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகள் என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளேன்; வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ள விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:53, 8 நவம்பர் 2019 (UTC)

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்--கி.மூர்த்தி (பேச்சு) 11:17, 8 நவம்பர் 2019 (UTC)
தங்களின் பணி மேன்மேலும், சிறக்க வாழ்த்துக்கள்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:59, 8 நவம்பர் 2019 (UTC)

பொதுவகத்தின் எந்திர ஒலிக்கோப்புகளை நீக்கலாமா என்ற உரையாடலில் உங்கள் எண்ணமிடுகதொகு

பொதுவகத்தில் எந்திரவழியே ஒலிக்கோப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றை சில ஆண்டுகளுக்கு முன் கேட்டு பின்னூட்டத்தை 2015 ஆம் ஆண்டு அளித்து இருந்தேன். அவற்றை விட, தற்போது எந்திரம் வழியே உருவாக்கப்படும் ஒலிக்கோப்புகளை சிறந்தவையாக உள்ளன என்பதால் அவற்றை நீக்க எண்ணுகிறேன். https://commons.wikimedia.org/wiki/Commons:Categories_for_discussion/2019/11/Category:Machine_pronunciations_of_Tamil_language

உங்களின் மேலான எண்ணங்களை உரையாடற் பக்கத்தில் இடுக. --உழவன் (உரை) 10:04, 12 நவம்பர் 2019 (UTC)

பேச்சுப் பக்கச் செய்தியை முன்னிலைப்படுத்தல்தொகு

16 ஆவது ஆண்டிவிழாவில் விவாதித்ததன் அடிப்படையில் புதுப்பயனர்களைத் தக்கவைக்க/ஊக்கப்படுத்த முன்னெடுக்கும் திட்டத்தில் ஒன்றாக இந்தப் பரிந்துரையை இங்கு வைக்கிறேன். மற்ற விக்கியில் உள்ளதா என்று தெரியவில்லை. பல புதுப் பயனர்கள் கணக்கைத் தொடங்கி பங்களிக்கையில் அவர்களின் கேள்விக்கோ, அவர்களின் பிழைக்கோ நாம் சில செய்திகளைப் பேச்சுப் பக்கத்தில் இடுவோம். ஆனால் அந்தப் புதிய பயனர்க்குப் பேச்சுப்பக்கம் என்றால் என்னவென்றே அறியாததால் அதைக் கண்டுகொள்ளாமல் படிக்காமல் போவதுண்டு. அதற்கு ஒரு நுட்பத் தீர்வினை உருவாக்கியுள்ளேன். இதனை பயனரின் common.js இல் இடுவதன் மூலம் அந்தப் பயனருக்குப் பேச்சுப் பக்கத்தின் கடைசிப் பகுதி முன்பக்கத்தில் காணக்கிடைக்கும். உள்நுழைந்தவுடன் அந்தச் செய்தி காட்டும், sitenotice போல வேண்டாம் என்றால் நீக்கிக் கொள்ளலாம். செய்தி அவரை அடைந்த பிறகு, அந்த நிரலினை நீக்கிக் கொள்ளலாம். இந்த யோசனை குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். சோதனையிட்டுப்பார்க்க எனது காமன்ஸ்.ஜேஎஸ் போல உங்கள் பக்கத்தில் importScript('User:Neechalkaran/talkboard.js'); என்று இட்டுக்கொள்ளலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 13:49, 14 நவம்பர் 2019 (UTC)

  ஆதரவு - இது மிக நல்ல ஒரு முயற்சி. அண்மைய பரப்புரகளில் பேச்சுப்பக்கம் குறித்து நான் கூறிவருகிறேன். புதிய பயனர்களுக்குப் பேச்சுப்பக்கம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அவர்கள் தவறு செய்யும்போது, அவற்றைத் திருத்துமாறோ அல்லது எச்சரிக்கைச் செய்தியோ பேச்சுப்பக்கத்தில் விடுக்கப்பட்டாலும் சிலவேளைகளில் அவர்கள் அவற்றைப்பற்றி அறியாமலே தொடர்ந்து அறியாமையால் தவறு செய்கின்றனர். இந்தப் பிரச்சனையை இது தீர்க்கும். இதனைச் செயற்படுத்தப் பேராதரவு வழங்குகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 13:16, 16 நவம்பர் 2019 (UTC)
  ஆதரவு - எல்லா புதுப்பயனர்களுக்கும் தானியக்கமாக இதனைச் செய்யலாம். இதற்கான தொழில்நுட்பச் சாத்தியங்கள் குறித்து என் கருத்துகளை நீச்சல்காரனிடம் தெரிவித்து உள்ளேன். --இரவி (பேச்சு) 14:23, 18 நவம்பர் 2019 (UTC)
  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:34, 19 நவம்பர் 2019 (UTC) 

கருத்துதொகு

அனைத்துப் புதுப் பயனருக்கும் இடவேண்டிய தேவையிருப்பது தெரிகிறது. அனைவரது பக்கத்திற்கும் தனித்தனியாக இடுதல் பின்னர் நீக்குதல் என்பது என்பது ஒரு வழி. அல்லது பயனர் பக்கத்திற்குப் பதில் நேரடியாகவே விக்கியில் செயல்படுத்தித் தானாக உறுதிபடுத்தப்படாத + ஒரு தொகுப்பாவது செய்த பயனர்கள் அனைவருக்கும் இதனைச் செயல்படுத்தலாம் என்பது அடுத்த வழி. சாத்தியங்கள் குறித்தும் சோதித்துப் பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 06:23, 19 நவம்பர் 2019 (UTC)

சிலர் பேச்சுப்பக்கத்தைப் பார்த்தார்களா இல்லையா என்பது கூடத் தெரிய வருவதில்லை.எந்த மறுமொழியும் இடுவதும் இல்லை. எனவே இது பொருந்துவதற்கான சாத்தியம் உள்ளது. செயல்படுத்திப் பார்த்து பின் நீக்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:34, 19 நவம்பர் 2019 (UTC)