விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 12, 2011
மன்ஹாட்டன் நியூ யார்க் நகரின் ஐந்து பெரும் பிரிவுகளில் ஒன்று. ஒரு சதுர மைலுக்கு 71,201 பேர் வசிக்கும் இது உலகில் மிக மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா மற்றும் உலகத்தின் வர்த்தக, நிதிஆதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் மன்ஹாட்டன் விளங்குகிறது. அமெரிக்காவின் பெரும் வர்த்தக மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைமையகங்களும் ஐக்கிய நாடுகள் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளன. இவை தவிர பங்குச் சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இங்கு அமைந்துள்ளன. படத்தில் ராக்ஃபெல்லர் மையத்தின் உச்சியிலிருந்து மன்ஹாட்டன் நகரப் பகுதியின் அந்தி நேர விரிந்த காட்சி காணப்படுகிறது. |