விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 8, 2014
தொடர்வண்டி அல்லது தொடருந்து என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு போக்குவரத்து வண்டியாகும். தொடர்வண்டி முன்னர் செல்வதற்கான உந்து சக்தியானது ஒரு தனியான வண்டி மூலமோ அல்லது பல மோட்டார்கள் மூலமோ அளிக்கப்படுகிறது. வைசன் மலைப்பாலத்தின் மீது செல்லும் தொடர்வண்டியை படத்தில் காணலாம். படம்: டேவிட் கப்லர் |