விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 12, 2015
கித்தார் (Guitar) என்பது அதிர்கம்பிகள் கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி. இது மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். இதிலுள்ள உள்ள ஆறு வேவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மின்னாற்றலால் இயங்கும் கித்தார்கள் 1930களிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவை நவீன காலத்திற்கு ஏற்புடைய இசையைத் தருவிப்பதால், மேற்கத்திய இசைகளான புளூஸ், ஜாஸ், சோலோ, ராக், பாப் போன்றவற்றில் இன்றியமையாத இடத்தை இவை பிடித்துள்ளன. படத்தில் செர்மனியின் மெட்டல்கோர் இசைக்கலைஞர் அலெக்சாண்டர் டியெட்சு ஒரு மின்-கித்தாரை வாசிப்பது காட்டப்பட்டுள்ளது. |