விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 23, 2015
ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். அதற்காக அமெரிக்க உள்நாட்டுப் போரை எதிர்கொண்டு வென்றார். அமெரிக்காவின் பெருந்தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் லிங்கனின் ஒளிப்படங்களும் ஓவியங்களும் பொதுவாக அவர் தாடியுடன் இருப்பதையே காட்டுகின்றன. அவர் தாடி வளர்ப்பதுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் படத்தில் உள்ளது. படம்: தாமசு ஹிக்ஸ் |