விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்ட் 31, 2008
பிட்டு அல்லது புட்டு என்பது ஒருவகை உணவுப் பண்டம். இதை அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்டு செய்யலாம். தமிழ் நாட்டில் பெரும்பாலும் பிட்டு சமைப்பதில்லை என்றாலும், இலங்கை, மற்றும் கேரளாவில் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் காலை, இரவு உணவுகளுக்கு விரும்பி உண்பவற்றில் பிட்டும் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன. |