விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 13, 2014
நிக்கோட்டீன் எனப்படுவது, சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும் சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் காணப்படுகின்றது. இதனை, கோகேயின் என்னும் பொருளுடன் சேர்ந்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். அமெரிக்க இதயக் கழகத்தின் கூற்றுப்படி, நிக்காட்டீன் பழக்கம் நிறுத்துவதற்கு மிகக் கடினமானதொரு பழக்கம் ஆகும். படத்தில் நிக்கோட்டீன் மூலக்கூறு ஒன்றின் முத்திரட்சி அசைபடம் காட்டப்பட்டுள்ளது. அசைபடம்: Fuse809 |