விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 27, 2016

பெரும் இன அழிப்பு (Holocaust) என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் செருமனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். இது அக்காலத்தில் செருமனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் இட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச செருமன் தொழிலாளர் கட்சியின் (நாசி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர், நாடோடிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பிறழ்ந்தவர், தற்பாலீர்ப்புள்ளோர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்ட பலரும் கொல்லப்பட்டனர்.

படத்தில் மிட்டெல்பௌ-டோரா நாசி வதை முகாமில் பசியினாலும் துப்பாக்கியில் சுடப்பட்டும் இறந்தவர்களுள் பாதிக்கும் குறைவானவரது உடல்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ஜேம்ஸ். இ. மையெர்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்