விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 1, 2014
பலக்லாவா என்பது, முகத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து, தலையில் ஏனைய பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கும் துணியால் ஆன ஒருவகைத் தலையணி ஆகும். பெரும்பாலும், கண்கள் அல்லது கண்களும், வாயும் மட்டுமே திறந்து இருக்கும். உக்ரேன் நாட்டின் கிரீமியாவில் உள்ள சேவாசுத்தோபோலுக்கு அண்மையில் அமைந்துள்ள பலக்லாவா என்னும் நகரின் பெயரைத் தழுவியே இத்தலையணிக்குப் பெயர் ஏற்பட்டது. படம்: டொபையாஸ் மேயர் |