விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 12, 2015
டொலேடோ மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டிலே லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது. படத்தில் டொலேடோ நகரின் அகலப்பரப்புக் காட்சியைக் காணலாம். படம்: டிலிஃப் |