விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 15, 2015
நெப்டியூன் (Neptune) சூரியக் குடும்பத்தின் எட்டாவதும் மிக தொலைவில் உள்ளதுமான ஒரு கோளாகும். 1846ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 1930ஆம் ஆண்டு புளூட்டோ கண்டறியப்படும் வரை இதுவே சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளாக இருந்துவந்தது. ஆனால், 2006ஆம் ஆண்டு புளூட்டோ கோள் எனும் தகுதியிலிருந்து நீக்கப்பட்டதால் மீண்டும் இது கடைசிக் கோள் என்ற நிலையைப் பெற்றது. கண்டறியப்பட்ட பிறகு 164.8 ஆண்டுகள் கழித்து இது 2011ஆம் ஆண்டு சூலை 12 அன்று முதன்முறையாகச் சூரியனை முழுமையாக வலம் வந்துள்ளது. படம்: நாசா |