விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 2, 2012

ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை என்பது இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட வரி வசூல் செய்பவரும், பாவிகளும் அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட மதகுருக்கள் தமக்குள், இவர் பாவம் செய்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு போன்ற உவமைகளைத் தொடர்ந்து ஊதாரி மைந்தன் உவமையை இயேசு கூறினார். இது லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் நல்லவர்கள் நல்வழியில் வாழ்வதை பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரே கெட்டமனிதனால் இறைவன் மிகுந்த இன்பம் அடைவார் என்பது இதன் செய்தியாகும்.

படம்: பொம்பெயோ பட்டோனி (1773)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்