விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 24, 2016

பசுங்கொட்டை (பொதுவாக பிஸ்தா என்றழைக்கப்படுகிறது) விரும்பி உண்ணப்படும் முந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொட்டை வகையாகும். மத்தியக் கிழக்கு நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிசுத்தான், துருக்மேனியா ஆகிய நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது தற்போது பயிரப்படுகிறது. இது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் Pistachio எனப்படுகிறது. உப்பிட்டு வறுக்கப்பட்ட ஒரு பசுங்கொட்டை படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: முகமது மகிதி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்