விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 19, 2014
சார்லஸ் ராபர்ட் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். படத்தில் ஜான் கோலியரால் வரையப்பட்ட டார்வினின் ஓவியம் காட்டப்பட்டுள்ளது. ஓவியம்: ஜான் கோலியர்; மூலம்: தேசிய நேர்ப்படக் கூடம், இலண்டன் |