விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2022

மூடுபனியில் மரம் மூடுபனி அல்லது பனிப்புகார் என்பது புவியின் மேற்பரப்பிற்கு அண்மையாக வளியில் நீர்த்துளிகளோ, அல்லது பனிப் படிகங்களோ தொங்கிக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.

படம்: Dietmar Rabich
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

ஆப்பிரிக்க கழுகு ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது. இதன் கழுத்து தலை ஆகியன முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இப்பறவை 4.2 இல் இருந்து 7.2 கிலோ கிராம் எடை இருக்கும்.

படம்: Alchemist-hp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

ஏர்பஸ் ஏ380 உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

படம்: Julian Herzog
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

பேரரசர் சிவாஜி மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ, நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை அமைத்தார்.

படம்: Cj.samson
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

படம்: AstroAnthony
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

உருத்தேனியம் என்பது Ru என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 44 ஆகும். உருத்தேனியத்தின் அணுக்கருவில் 57 நியூட்ரான்கள் உள்ளன. தனிமவரிசை அட்டவணையில் பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த இடைநிலைத் தனிமங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது.

படம்: Alchemist-hp
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

மகரந்தச்சேர்க்கை என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.

படம்: Louise Docker
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

பப்பாளி என்பது ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. எளிதில் கிடைப்பது, விலை மலிவானது, எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் பப்பாளிப் பழம் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.

படம்: Ivar Leidus
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

படைப்பின் தூண்கள் என்பது அபிள் விண்வெளித் தொலைநோக்கியால் புவியில் இருந்து 6,500–7,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கழுகு நெபுலா என்று அழைக்கப்படும் விண்மீன்களிடை வாயு மற்றும் தூசு மண்டலத்தில் 1995 ஏப்ரல் 1 அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிக்கும்.

படம்: NASA'
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

325 முதல் 1000 கிலோ எடை கொண்ட கவரிமா என்று ஊகிக்கப்படும் நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம்.

படம்: Dennis Jarvis
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும், மூங்கிலால் வேயப்பட்ட வட்ட வடிவ படகு கலம். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

படம்: Dey.sandip
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

இடால்மேசன் என்பது ஒரு வகை நாய் ஆகும். இதன் பூர்வீகம் குரோவாசியா ஆகும். இதன் உடலில் திட்டு திட்டாக காணப்படும் கறுப்பு வெள்ளைப் புள்ளிகள் இதன் சிறப்பு அம்சமாகும். பண்டைக் காலத்தில் சுமை இழுக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் இது குடும்பத்தினரோடு பழகுவதற்கு சிறந்த நாய் என கருதப்படுகிறது.

படம்: Lucasbosch
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

இமயமலை உப்பு என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா, பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர்.

படம்: Cj.samson
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

உரோசா அழகி என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது பொதுவாக தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது.

படம்: Sarpitabose
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

தூண் அன்னை பசிலிக்கா மிகவும் புகழ்மிக்க உரோமன் கத்தோலிக்க ஆலயங்களுள் ஒன்றாகும். எசுப்பானியாவின் பன்னிரு புதையல்களில் இதுவும் ஒன்றாகும்.

படம்: Moahim
தொகுப்பு · சிறப்புப் படங்கள்