விக்கிப்பீடியா:கலந்துரையாடல்

இங்கு தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்கு மற்ற விக்கிப்பீடியர்கள் பதில் அளிப்பார்கள். தகுந்த ஆலோசனைகளை உடனே செயற்படுத்தவும் செய்வோம். விக்கிப்பீடியா திட்டத்தின் வளர்ச்சி, மேலாண்மை குறித்த கலந்துரையாடலுக்கு விக்கிப்பீடியா:ஆலமரத்தடிக்குச் செல்லுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதிய மேலே காணும் தொகு இணைப்பை சொடுக்கவும். அடுத்து வரும் பக்கத்தில் உள்ள தொகுப்புப் பெட்டியில் கருத்தை உள்ளிட்டு "பக்கத்தைச் சேமிக்கவும்" என்பதை அழுத்தவும். நன்றி.

முந்தைய கலந்துரையாடல்கள் தொகு

  • தொகுப்பு 01 (மயூரநாதனின் முதற் குறிப்பு!, தமிழ் விக்கிப்பீடியா 1000 கட்டுரைகள்.)

மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள்

பயனர் கருத்துகள் தொகு

உங்கள் கருத்துகளை இதன் கீழ் இடவும். கையெழுத்து இடப் பார்க்கவும்: விக்கிப்பீடியா:கையெழுத்து

First time I saw the Tamil version of Wikimedia site. It's great...keep it up. Unfortunately I don't know how to use the tamil font here. All the best. --Drvelmuruan (பேச்சு) 05:59, 29 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

அன்புடன் dr.வேல்முருகன். தமிழ் விக்கிபக்கத்தின் மேல் கரையில் தமிழில் எழுத எனும் விசை அழுத்தி உள்ளது. அதனை செயலாக்கவும். பின் நீங்கள் தட்டச்சு செய்யவும். விக்கி தமிழுக்கு உங்களை பெரிது எதிர்பார்க்கின்றோம். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:57, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கி பீடியவினருக்கு வணக்கம், நாங்கள் இந்திய சரித்திரங்களையும் மற்றும் அரசாட்சி செய்துவந்த அரசர்களைபற்றியும் ஆராய்ச்சி செய்துவருகின்றோம். நாங்கள் இக்கட்டுரைகளை விரிவாக்கம் செய்யவும், புதிய கட்டிரைகளை படைக்கவும் user friendly software தேவைபடுகின்றது அத்துடன் நாங்கள் மிகச்சிறந்த கானணி பொறியாளர்கள் அல்லர், எனவே கட்டுரைகளை மேம்படுத்தி விக்கியின் தரத்திக்கு உயர்த்த சீரிய நண்பர்களின் உதவி தேவை. இதை உங்களுக்கு எழுதும் பொழுது என்னுடைய விக்கியின் சுய அனுபவத்தின் அடிப்படியில் எழுதுகின்றேன். நன்றி! மற்றும் வணக்கம்!--Premloganathan (பேச்சு) 06:35, 29 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  • உங்களுக்கு எத்தகைய உதவி தொகுத்தலில் தேவைப்படுகிறது என்று கூறவும். தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். என்னால் இயன்றதைச் செய்யக் காத்திருக்கிறேன். மாதிரிக்கு ஒரு கட்டுரையைத் தொடங்குங்கள். அதில் மாற்றங்கள் போன்ற, ஆக்கப்பணிகள் செய்து கொண்டே உரையாடுவோம்.கற்போம்.கற்பிப்போம்.-- உழவன் +உரை.. 04:03, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி நண்பரே! தங்களின் செய்தியினை கண்டு அகம் மகிழ்ந்தேன், இங்கு தமிழில் போயர் எனும் கட்டுரையினை எழுதி வருகின்றேன், மேலும் அதனின் துணை மற்றும் இணைப்பு கட்டுரைகளான நாயக்கர் மற்றும் ராஜகம்பளம் ஆகியவற்றில் விரிவக்கதினையும் செய்துவருகின்றேன், முதலில் எனக்கு போயர் எனும் கட்டுரைக்கு ஆதாரங்களுடன் தமிழில் கட்டுரைனை செய்து விரிவாக்கம் செய்துவருகின்றேன், அதனை தங்கள் அன்பு கூர்ந்து தமிழ் விக்கியின் தரத்திற்கு உகந்த நடையாக மற்றிதாருங்கள். மேலும் நான் அவற்றினை புறிந்துகொண்டு அதே போல விரிவாக்கம் செய்ய முயலுகின்றேன். உங்களின் உதவிபுரிதலின் குணத்திற்கு தலை வணங்குகின்றேன். உளமார்ந்த நன்றிகளை தங்களுக்கு உரித்தாக்குகின்றேன்!--Premloganathan (பேச்சு) 05:54, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பகுப்புத் தலைப்புகள் தொகு

  • கரையோர வேடர்கள் என்னும் கட்டுரைக்கு, கரையோர வேடர்கள் என்னும் பகுப்புத் தலைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதனை உருவாக்கிய அறிஞரே காட்டியிருந்த இலங்கைத் தமிழர் என்னும் பகுப்புத் தலைப்புக்கு உட்படுத்தியிருக்கிறேன். தெரிந்திருந்தும் பழைய பகுப்பில் சேர்க்காமல் புதுப்புது பகுப்புத் தலைப்புகளைக் கட்டுரையாளர்கள் உருவாக்குவதைத் தவிர்க்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 23:38, 30 அக்டோபர் 2012 (UTC)--Sengai Podhuvan (பேச்சு) 23:30, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மலேசியாவின் மலாய்ப் பெயர்கள் தொகு

வணக்கம். மலேசியாவில் மாநிலங்கள், நகரங்களின் பெயர்களை மலாய் மொழியில் எப்படி அழைக்கிறார்களோ, அப்படி அழைப்பதுதான் நல்லது. Penang என்பதை பினாங்கு என்று அழைப்பதைப் போல Pahang என்பதை பகாங்கு என்று அழைக்கமாட்டார்கள். Perak என்பதை பேராக்கு என்று அழைப்பது இல்லை. Kelantan என்பதை கிளாந்தான் என்று அழைக்க வேண்டும். Terenggaanu என்பதை திரங்கானு என்றும் Sarawak என்பதை சரவாக் என்றும் அழைக்க வேண்டும்.

எனக்கு 65 ஆகிறது. ஏறக்குறைய 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளராகவும் சேவை செய்கின்றேன். நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர், துணை ஆசிரியராகப் பணி புரிந்த அனுபவங்கள் உள்ளன. ஆக, மலேசியாவில் உள்ள பெயர்களை மாற்றும் போது, என்னுடைய கவனத்திற்கு கொண்டு வருவது சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன்.

மலேசியாவிற்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகள் தங்கிவிட்டு, மலேசியாவில் உள்ள எல்லாமே தெரியும் என்று பெயர்களை மாற்ற நினைத்தால், மனதிற்கு வேதனையாக இருக்கிறது. மலேசியாவில் பிறந்து வளர்ந்த எனக்கு, இங்கே என்ன நடக்கிறது எனும் தகவல் முழுமையாகத் தெரியும்.

மலேசிய வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியிடும் போது, பெயர்களில் தடுமாற்றம் அல்லது மயக்கம் ஏற்படும் போதும், புதிய கலைச் சொற்கள் தேவைப்படும் போதும் எனக்கு அழைத்து ஆலோசனைக் கேட்கிறார்கள். விக்கிப்பீடியா மலேசிய எழுத்தர்களும் ஒத்துழைப்பு வழங்கினால், சிறப்பாக இருக்கும். நன்றி. --மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 23:30, 30 அக்டோபர் 2012 (UTC)--[பதிலளி]

வணக்கம் முத்துக்கிருஷ்ணன் அவர்களே. மலாய்ப் பெயர்களை தமிழில் எழுதும் போது தவறு நேருமாயின் அவற்றை அன்பு கூர்ந்து சுட்டிக்காட்ட வேண்டுகின்றேன். தங்கள் அனுபவம் பற்றி அறிந்தபோது புகழாங்கிதமாயிருந்தது. எல்லாப் பயனர்களும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் உங்களை வினவி தம் பங்களிப்புகளை தருவது சாத்தியக் குறைவானது. ஆகவே அடிக்கடி இத்தகைய கட்டுரைகளை நேரோட்டமிட்டுத் திருத்தி உதவினால் உதவியாயிருக்கும். நன்றிகள் பல.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:26, 1 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
(தொகுத்தல் முரண்பாடு (edit conflict))வணக்கம் முத்துக்கிருஷ்ணன், அனைத்து மலேசிய தொடர்பான தலைப்புகளை மாற்றும் போதும் தங்களது கவனத்திற்கு விக்கிப்பயனர்களால் கொண்டுவர இயலுமா என்பது சந்தேகமே. எனினும் தொடர்புடைய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் எது சரியான பெயர், ஏன் என்பதை விளக்கினீர்கள் எனில் நாம் உரையாடி சரியான தலைப்புக்கு மாற்றலாம். விக்கியின் பலமே அதுதானே. எனவே தலைப்புக்கள் தவறாக உள்ள கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பு எழுதிவிடுங்கள், ஆட்சேபனை இல்லையெனில் உடனே மாற்றிவிடலாம், ஆட்சேபனை இருந்தால் உரையாடி மாற்றலாம் (இதில் என்னுடைய கருத்து : மலேசியா தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாதலால், மலாய் மொழியில் அழைப்பதை விட, அங்குள்ள உங்களைப் போன்ற தமிழர்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படி அழைப்பதுதான் சிறப்பு)--சண்முகம்ப7 (பேச்சு) 04:34, 1 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
மலேசியப் பெயர்ச்சொற்களை மலேசியத் தமிழர் எவ்வாறு அழைக்கின்றனரோ அதனையே முதன்மைப்படுத்த வேண்டும். இது பற்றி ஏற்கனவே உரையாடியுள்ளோம். இது இலங்கைக்கும் பொருந்தும்.--Kanags \உரையாடுக 09:29, 1 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மலேசியப் பெயர்கள் தொகு

வணக்கம், திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.சண்முகம், திரு.கனகு அவர்களுக்கு, தங்களின் கருத்துகள் ஒரு தாக்கத்தின் தீர்வைச் சரி செய்கின்றன. அதையும் தாண்டி ஓர் ஏக்கத்தின் பார்வையை மிஞ்சுகின்றன. நன்றி சகோதரர்களே. நம்முடைய விக்கிப்பீடியா நல்லபடியாக அமைய, என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். செய்து வருவேன்.

என்னுடைய பேரன்களும் பேத்திகளும் விக்கிப்பீடியாவின் தீவிர ரசிகர்கள். மகிழ்ச்சிதானே. ஏதாவது எழுத்துப் பிழை, இலக்கணப் பிழைகள் என்றால் என்னிடம் சுட்டிக் காட்டுவார்கள். தமிழ் மொழி சுத்தமாக எழுதப்படுவதில் மிகுந்த அக்கறை காட்டுபவர்கள். அவர்களுக்கு வயது 12. மலாய்ப் பள்ளியில் படித்தாலும், தங்களின் தாய்மொழியை மறந்தது இல்லை. என்னுடைய எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்து திருத்தச் சொல்கிறார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

//மலேசியா தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாதலால், மலாய் மொழியில் அழைப்பதை விட, அங்குள்ள உங்களைப் போன்ற தமிழர்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படி அழைப்பதுதான் சிறப்பு)//

நல்ல ஓர் உடன்பாடு. ரோமாபுரிக்கு போனால் ஒரு ரோமனைப் போல பேசு என்கின்ற ஒரு பொன்மொழி நினைவிற்கு வருகின்றது. உங்களின் நல்ல நல்ல சிந்தனைகள், நல்ல நல்ல சித்தாந்தங்களைக் கொண்டு வரும். சரஸ்வதி உங்களிடம் பேசுகின்றாள். நல்ல ஆழமான தமிழ் உங்களிடம் வீணை வாசிக்கின்றது. வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம். இப்போது சிரம்பான் நகரத்தைப் பற்றி எழுதி வருகின்றேன். --மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)