விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/தொகுப்பு04
- web server - தமிழில் எப்படி அழைக்கப்படுகிறது.
- வலை வழங்கி--சோடாபாட்டில்உரையாடுக 11:16, 26 சனவரி 2012 (UTC)
- responsible - கரணியான?? காரணியான (அஃறிணை),காரணமான (உயர்திணை) பொறுப்பான
- accountable - பொறுப்புடைமை, பொறுப்பு
- sister company - சகோதர நிறுவனம் ?, உறவுநிறுவனம்.
Distributed computing என்பதை "விரவல் கணிப்பு" என்று குறிப்பிடுவதை விட "பங்கீட்டுக் கணிப்பு" எனச்சொல்லலாமா? ஏனெனில் விரவல் கணிப்பு எனும் சொல் pervasive computing என்பதற்குத்தான் சரியான மொழிபெயர்ப்பாக அமையும் அல்லவா?
யாராவது உதவுஙகளேன். -- −முன்நிற்கும் கருத்து Jahirhussain (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- car pooling, தானுந்துப் பகிர்வு, வண்டிப்பகிர்வு
- cow pooling, மாட்டைக் கூட்டுவாங்கல் (பலர் வாங்கி அதன் இறைச்சியை பகிர்ந்துகொள்தல்)
- car sharing, தானுந்துக் குறுவாடகை (சில மணிநேரம் ஒரு தானுந்தை வாடகைக்கு எடுத்தல்)
- swap (பரிமாறு, பரிமாறிக்கொள்தல்)
- swapping , பரிமாறுதல், பரிமாறிக் கொள்தல்
--Natkeeran 21:24, 12 பெப்ரவரி 2012 (UTC)
சதுரங்கம் பற்றிய பின்வரும் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டு உதவுங்களேன்.
- Checkmate இறுதிசாய்
- Pin பிணை (இக்காயை நகர்த்தினால் இன்னும் மதிப்பானது போகும்)
- Fork கவை (இரண்டையோ கூடுதலானவையையோ தாக்கும் காய் நிலை)
- En Passant வழிபறி, வழிமடக்கு (காலாள் இரண்டு கட்டம் நகரும்பொழுது எதிராளியின் காய் முதல்கட்டம் நகர்ந்தவுடன் வெட்டும் நிலையில் இருந்தால் வெட்டிவிடுவதாகக் கொண்டு நீக்குதல். முதல்கட்டத்தைத் தாண்டும்பொழுதே வெட்டிவிடுதல்.)
--மதனாஹரன் 04:31, 25 பெப்ரவரி 2012 (UTC)
Checkmate என்பதற்கு இறுதிசாய் என்பது பொருத்தமாகத் தென்படவில்லை. Check என்பதற்கு முற்றுகை என்பது பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, Checkmate என்பதை இறுதி முற்றுகை எனக் குறிப்பிடலாமா? --மதனாஹரன் 01:51, 26 பெப்ரவரி 2012 (UTC)
- இறுதி முற்றுகை என்று சொல்லலாம். ஆனால் அதுவே இறுதி, எனவே வெறும் இறுதி என்றும் சொல்லலாம். நான் இறுதிசாய் என்றதற்குக்காரணம், இறுதிசெய்து சாய்த்தல் (அரசனை வெட்டுதல. எனவே இதனை இறுதி என்றே அழைக்கலாம். அல்லது தலைவீழ்த்தல். இறுதிமுற்றுகை என்பதும் பொருந்தும். எங்கேயும் நகரவிடாமல் முற்றுகை இட்டு (சாய்த்தல்/வீழ்த்தல்) (எங்கு நகர்ந்தாலும் சாய்க்கப்படுவான்/வெட்டப்படுவான்). --செல்வா 02:13, 26 பெப்ரவரி 2012 (UTC)
இறுதி முற்றுகை என்றே குறிப்பிடுகிறேன். --மதனாஹரன் 02:32, 26 பெப்ரவரி 2012 (UTC)
- Sicilian Defense
இதனைச் சிசிலியன் டிஃபென்ஸ் என எழுதுவதா? அல்லது தமிழ்ப்படுத்தி எழுதுவதா? தமிழ்ப்படுத்தி எழுதுவதாயின், இதற்கான தமிழ்ச் சொல்லையும் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் 02:35, 26 பெப்ரவரி 2012 (UTC)
- Doubled Pawn
இதற்கும் தமிழ்ச் சொல் தந்து உதவுங்கள். Pawn என்பதற்குச் சிப்பாய் என்று உபயோகப்படுத்துகின்றேன். --மதனாஹரன் 02:39, 26 பெப்ரவரி 2012 (UTC)
- சிசிலியத் தற்காப்பு (நகர்வு) (ஆங்கிலத்தில் -an, -ish என்று வருவதை நம் மொழியில் -அன், -இஷ் என்று அப்படியே சொல்லுதல் கூடாது. அது அவர்கள் பின்னொட்டு!!
Pawn என்பது முதலில் இரண்டு கட்டமாக நகர முடிந்தாலும் பின்னர் ஒவ்வொரு கட்டமாகத்தான் நகர முடியும். இதனைக் காலாள் என்றும் சொல்வதுண்டு (மிகப் பொருத்தமாக). சிப்பாய் என்றும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். Double Pawn காலாள் இரண்டடி (நகர்வு) (அல்லது) இரண்டெட்டுக் காலாள் (நகர்வு)
--செல்வா 02:53, 26 பெப்ரவரி 2012 (UTC)
- Doubled Pawn என்பதன் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
- இங்கே b-நிரலிலும் e-நிரலிலும் உள்ளவை போன்ற சிப்பாய்களே Doubled Pawns ஆகும். --மதனாஹரன் 03:20, 26 பெப்ரவரி 2012 (UTC)
- ஆமாம், நான் தவறுதலாக எழுதிவிட்டேன்! வெட்டால் ஒன்றன் பின் ஒன்றாக நிற்பது அல்லவா இது. இதனை இரட்டடுக்குக் காலாள் எனலாம்.--செல்வா 03:28, 26 பெப்ரவரி 2012 (UTC)
நன்றிகள். --மதனாஹரன் 12:21, 26 பெப்ரவரி 2012 (UTC)
கொந்தர்கள் மற்றும் கொந்துதல் பற்றிய பின்வரும் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை வழங்கி உதவுங்களேன்.
- White Hat Hacker
- Black Hat Hacker
- Grey Hat Hacker
- Elite Hacker
- Script Kiddie அல்லது Skiddie
- Neophyte அல்லது Newbie
- Blue Hat Hacker
- Hacktivist
- Vulnerability Scanner (கருவி)
- Password Cracking
- Packet Sniffer (கருவி)
- Rootkit
- Social Engineering
- Trojan Horse
- Key Logger (கருவி)
--மதனாஹரன் 03:38, 26 பெப்ரவரி 2012 (UTC)
- White Hat Hacker - வெள்ளைத்தொப்பி கொந்தர் (இவை literal ஆகப் பெயர்க்கலாம்)
- Black Hat Hacker - கருந்தொப்பிக் கொந்தர்
- Grey Hat Hacker - சாம்பல்நிறத்தொப்பி கொந்தர்
- Elite Hacker - கொந்து வல்லுனர்
- Script Kiddie அல்லது Skiddie - பழகு கொந்தர்
- Neophyte அல்லது Newbie - புதிய கொந்தர்
- Blue Hat Hacker - நீலத் தொப்பி கொந்தர்
- Hacktivist - கொந்து செயற்பாட்டாளர்
- Vulnerability Scanner (கருவி) - (பிணைய / வலை) பலவீனமாராயும் கருவி
- Password Cracking - கடவுச்சொல் உடைத்தல்
- Packet Sniffer (கருவி)
- Rootkit
- Social Engineering - சமூகப்பின்னணித் தாக்குதல் (engineering இங்கு literal ஆக வராது)
- Trojan Horse - டிராய் குதிரை
- Key Logger (கருவி) - விசைப்பதிவுக் கருவி. --சோடாபாட்டில்உரையாடுக 12:25, 26 பெப்ரவரி 2012 (UTC)
நன்றிகள். --மதனாஹரன் 12:27, 26 பெப்ரவரி 2012 (UTC)
Trojan Horse என்பதற்குப் பொய்க் குதிரை என்பதும் பயன்படுத்தப்படுகின்றது. Packet Sniffer என்பதற்குப் பொதி முகர்வர் என்று கூகுள் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சரியானதாகவே தோன்றுகின்றது. அவற்றையும் பயன்படுத்துகிறேன். --மதனாஹரன் 12:32, 26 பெப்ரவரி 2012 (UTC)
குறும்பர் என்பது வெள்ளைத் தொப்பிக் கொந்தர் என்பதை விடப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். --மதனாஹரன் 12:41, 26 பெப்ரவரி 2012 (UTC)
பரிந்துரைகள்
தொகுமதன், இவற்றை சூழலோடு விளக்கி அங்கே பயன்படுத்தினால்தான் எடுபடுமா, பொருந்துமா என்று அறிதல் கூடும். பொதுவாக அதற்கென ஒரு குழுமம் இருந்தால்தான், அவர்கள் தங்களுக்குள் இவற்றைப் பற்றிப் பேசி உறவாடினால்தான், வேரூன்றும், சிறுவழக்காவது ஊன்றும். இவை தொழில்சார் வட்டார வழக்கு. குழூஉக் குறிமொழி. வழபொதுவாக ஒயிட் ஃகேஅட், பிளாக் ஃகேஅட் போன்ற சொற்களை நிறத்தை மொழிபெயர்த்து {வெள்ளை, கறுப்பு, சாம்பல், நீலத்)தொப்பி எனலாம். ஆனால் இந்தத் தொப்பி (குறிப்பாக வெள்ளை) என்பது மேற்கத்தியர்களிடம் ஒரு பண்பாட்டுச் சொல் (கொந்துநர் குழுமம் அல்லாது). நாமும் வேண்டுமானால் வெண் தலைப்பா, கறுந்தலைப்பா, என்று தொப்பிக்கு மாறாக தலைப்பா (தலைப்பாகை) என்று சூட்டலாம் (தலைப்பா என்பது தலப்பா என்று சுருங்கும்). Elite Hacker என்பதை, கொந்துத்திறவோர் எனலாம் (திறவோர் = மிகுதிறனாளி), அல்லது திறக்கொந்தர் எனலாம். Script Kiddie என்பது ஏற்கனவே செய்து வடித்த கொந்துநிரல்களை, அவை எவ்வாறு இயங்குகின்றது என்று முழுதும் அறியாமல் செய்யும் தொடக்கநிலை மழலைக் கொந்தர். தமிழில் சோச்சி என்றால் குழந்தைகள் மொழியில் சோறு, பல நேரம் அவை பிசைந்து எளிதாய் குழந்தை உட்கொள்ளுமாறும் இருக்கும். இதன் பொருளை நீட்டித்து, சோசிக் கொந்தர் எனலாம். அல்லது கிளிப்பிள்ளை போல் புரிந்துகொள்ளாமல் சொன்னதைச் சொல்வதாகக் கொண்டால் கிளிக்கொந்தர் எனாலாம்.
- White Hat Hacker - வெண்(/வெள்ளள)த்தலைப்பாக் கொந்தர் (
- Black Hat Hacker - கறுந்தலைப்பாக் கொந்தர்
- Grey Hat Hacker - சாம்பற்தலப்பாக் கொந்தர்
- Elite Hacker - கொந்துத்திறவோர், திறக்கொந்தர்
- Script Kiddie - மழலைக் கொந்தர், சோச்சிக் கொந்தர், கிளிக்கொந்தர்
- Neophyte - புதிய கொந்தர்
- Blue Hat Hacker - நீலத்தலப்பாக் கொந்தர்
- Hacktivist - வீறுகொந்தர் (கொந்து வீறர்(வல்லின றகரம்))
- Vulnerability Scanner (கருவி) - குறைகுடைவர், வழுத்தேடுநர்,
- Password Cracking - கடவு உடைத்தல்
- Packet Sniffer (கருவி) - நடையுளவி, நடையலசி (ஒரு பிணையத்தின் போக்குவர்த்து நடவடிக்கைகளை நடை எனலாம்).
- Rootkit - தீவேர்நிரல் (தீய கூறுகள் கொண்ட வேர்நிரல். வேர்நிரல் என்பது கணினி நிருவாகி பயன்படுத்தும் ரூட் என்னும், தாய் அல்லது வேர்ப்பகுப்பு/அணுக்கம்)
- Social Engineering - நயத்திருட்டு (நம்பிக்கை ஊட்டும் படியாகச் சிலவற்றைச் செய்து செய்து திருடுதல்; நயவுந்துகை (நயவுந்துத்திருட்டு).
- Trojan Horse - திராய் குதிரை, புனைக்குதிரை, பொய்க்குதிரை, கன்னநிரல் (கன்னம் வைத்தல்)
தமிழில் கன்னம் வைத்தல் என்பதையும், உளவு, கள்ளம், திருட்டு, மயக்கு, புரட்டு முதலான சொற்களைத் தக்கவாறு பொருத்திப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
--செல்வா 16:05, 26 பெப்ரவரி 2012 (UTC)
இந்த வரியுருக்கான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைத்து உதவுங்கள்.
- Bell Character
--மதனாஹரன் (பேச்சு) 09:27, 1 மார்ச் 2012 (UTC)
பின்வரும் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைத்து உதவுங்கள்.
- அட்டவணை
- 576i
- Standard-Definition Television (SDTV)
- Global System for Mobile Communications/Groupe Spécial Mobile (GSM)
- Enhanced Data Rates for GSM Evolution (EDGE)
- Candybar
- M2
- General Packet Radio Service (GPRS)
- High-Speed Circuit-Switched Data (HSCSD)
- QCIF+
- Thin Film Transistor Liquid Crystal Display (TFT LCD)
- Autofocus (AF)
- Direct-to-Home (DTH)
- Indian National Satellite System (INSAT)--இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு
- INSAT 4A
- INRegistry
- National Internet Exchange of India (NIXI)
- Doctrine of Lapse
--மதனாஹரன் (பேச்சு) 07:00, 4 மார்ச் 2012 (UTC)
முதல்நிலைப் பரிந்துரைகள்
தொகு- 576i = 576-இ (சீர்துல்லியத் தொலைக்காட்சியில் திரையில் மேலிருந்து கீழாக வரும் 576 வரிகளில் இடைசொருகு வரிகள் உள்ளன என்பதைக் குறிக்கும்)
- Standard-Definition Television (SDTV) = சீர்துல்லிய தொலைக்காட்சி
- Global System for Mobile Communications/Groupe Spécial Mobile (GSM) = பார்க்க உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (இக்கட்டுரை பலவாறு திருத்தபப்ட வேண்டும். இதனை உலகளாவிய நகர்தொலைத்தொடர்பு ஒருங்கியம்/நகதொலைத்தொடர்பு சிறப்புக் குழு. Groupe Spécial Mobile என்பது பிரான்சிய வழக்கு. சி.எசு.எம் என்பதை உநஒ என்று நாமும் சுருக்கிச் சொல்லலாம்)
- Enhanced Data Rates for GSM Evolution (EDGE)
- Candybar
- M2
- General Packet Radio Service (GPRS) = பொது சிறுபொதி அலைச் சேவை. (ரேடியோ என்பது இங்கு மின்காந்த அலைகள் வழி தரவுகளைச் செலுத்திப்பெறுவதைக் குறிக்கும். வானொலி என்பது இப்படித்தான் இயங்குகின்றது, ஆனால் தொடக்கமும் முடிவும் ஒலியலைகள். இங்கு எந்தத் தரவாகவும் இருக்கலாம்)
- High-Speed Circuit-Switched Data (HSCSD)
- QCIF+ = இது காமன் இன்டர்மீடியட்டு ஃவார்மட்டு (CIF) என்பதன் கால்பகுதி படவணு (pixel) துல்லியம் கொண்டது. காமன் இன்டர்மீடியட்டு ஃவார்மட்டு 352 × 288 படவணுக்கள் கொண்டது, அதில் கால்பங்கு (அதாவது கிடைவவட்டில் அமைந்த படவனுக்களையும் நிரல்வாட்டில்(நெடுக்குவாட்டில்) அமைந்த படவணுக்களையும் பாதியாகப் பகுத்தால் கிட்டுவது= 176 × 144 படவணுக்கள்). காமன் இன்டர்மீடியட்டு ஃவார்மட்டு என்பதைப் பொது இடைநிலை வடிப்பு எனலாம்.
- Thin Film Transistor Liquid Crystal Display (TFT LCD) = மென்படல திரிதடையமியக்கும் படிகநீர்மத் திரை. (சில நீர்மங்கள் அதனுள் இருக்கும் குச்சிபோன்ற மூலக்கூறுகள் சீராக அமைந்தும் தாறுமாறாக அமைந்தும் ஒளியை கடத்தும் திறனை பெரிதும் மாற்றவலல்ன. மின்னழுத்தங்கள் தந்து இந்த நீர்மங்களின் உள்ளே இருக்கும் மூலக்கூறுகளை சீராகவோ, தாறுமாறாகவோ அமையச் செய்ய இயலும். சீரொழுக்கம் கொள்ளும் என்பதால், நீர்மமமகவே இருப்பினும் படிகம் என்று கூறுவர் (பொதுவாக படிகம் என்பது திண்மப் பொருள்களுக்கு மட்டுமே பயன்பட்டு வரும் ஒன்று). திரிதடையம் என்பது திரான்சிசிசிட்டர். திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் ஒரு திரிதடையம் கட்டுப்படுத்தும்.)
- Autofocus (AF) = தானியங்கிக் குவியம்
- Direct-to-Home (DTH) = நேரடி வீட்டுக்கான துணைக்கோள் தொலைக்காட்சி (சுருக்கமாக துணைக்கோள் தொலைக்காட்சி - வீதுதெ)
- Indian National Satellite System (INSAT)--இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இங்கே செயற்கைத்துணைக்கோள் என்று புரிந்துகொள்ளவேண்டும்)
- INSAT 4A (இன்சாட்டு 4ஏ) இந்திய தேசிய செயற்கைத்துணைக்கோள் ஒருங்கியம்/முறைமை - இது புவிநிலை மாறா வலயத்தில் இயங்கும் செயற்கைத்துணைக்கோள்கள் திட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட செயற்கைத் துணைக்கோள். இதேசெஅ-4ஏ/இதேசெஒ-4ஏ = INSAT 4A.
- INRegistry = இந்திய இணையப்பெயர் பதிவகம்
- National Internet Exchange of India (NIXI) = இந்திய இணையச்சேவை நடுச்சீரகம்
- Doctrine of Lapse = வாரிசின்மை, திறமின்மையால் உரிமையிழப்புக் கொள்கை (வாரிசு-திறமையின்மையால் இழப்பு என்னும் கொள்கை). பிரித்தானிய கிழக்கிந்தியக் கும்பினி கையாண்ட ஒரு கைப்பற்றும் முறை.
--செல்வா (பேச்சு) 15:50, 4 மார்ச் 2012 (UTC)
பின்வரும் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைத்து உதவுங்கள்.
- EXE
- MPEG-4 Part 14 (MP4)
- CMYK Model
- Pascaline
- International Standard Serial Number (ISSN)
- Extended Binary Coded Decimal Interchange Code (EBCDIC)
- Bitmap
- அதிர்ஷ்டம்
- துரதிர்ஷ்டம்
--மதனாஹரன் (பேச்சு) 11:34, 5 மார்ச் 2012 (UTC)
- பன்னாட்டு வரிசைத் தர எண்(?) பன்னாட்டுத் தர வரிசை எண்(?) = ISSN
- நீட்டிக்கப்பட்ட இருமமாக்கப்பட்ட தசம மாற்றுக் குறி = EBCDIC
- துண்டுப்படம் = bitmap
- நல்வாய்ப்பு = அதிஷ்டம்
- தீவாய்ப்பு = துரதிஷ்டம்
-- சூர்யபிரகாஷ் உரையாடுக 12:22, 6 மார்ச் 2012 (UTC)
- EXE உடன்செய் கோப்புரு (கோப்புரு, கோப்பு வடிவுரு = file format)
- MPEG-4 Part 14 (MP4) திபதிகு-4 என்பதன் பகுதி 14 (இது சில கீழ்க்குறிப்புகள், உள்தலைப்புகள் முதலியவற்றைக் காட்டவும், எண்ணிமச் சாரையாக (streaming) இணையத்தில் அனுப்பவும் வசதிகள் கொண்ட வடிவுரு)
- CMYK Model (இது ஊதா-செவ்வூதா-மஞ்சள்-கறுப்பு - ஊசெமக நிறக்கழித்தல்முறை)
- Pascaline - பாசுக்கலைன் என்னும் பாசுக்கல் கணி (பிளேசு பாசுக்கல் உருவாக்கிய கணிப்பிடும் இயந்திரப்பொறி)
- International Standard Serial Number (ISSN) - அனைத்துலகத் தொடர் வெளிய்யீடுகளுக்கான சீர்தர எண்
- Extended Binary Coded Decimal Interchange Code (EBCDIC) - எட்டுபிட்டு எழுத்துக்குறியீட்டு முறை. இதனைத் தகவல் பரிமாற்றத்திற்கான நீட்டித்தப் பதின்ம எண்ணின் இருமக்குறியீட்டு முறை எனலாம்.
- Bitmap - பிட்டுமேப்பு - பிட்டுப்படம்
- அதிர்ஷ்டம் - ஆகூழ் (திருஷ்டம் என்றால் கண்ணால் காணக்கூடியது. அதிர்ஷ்டம் என்றால் எதிர்பாராமல் கிடைத்தது (காணாது கிட்டியது). காணாக்கிட்டி, நற்கிட்டி, நல்லூழ்
- துரதிர்ஷ்டம் - போகூழ் - துர்+அதிர்ஷ்டம் = எதிர்பாராது வந்த தீய நிகழ்வு/நிலை/இழப்பு. தீகிட்டி, தீசமைவு (சமைவு = நிலைமை, "situation"..), தீயூழ்,
பன்னாடு மற்றும் சர்வதேசம்
தொகுபன்னாட்டையும் (Multinational) சர்வதேசத்தையும் (International) விக்கியில் தெளிவாகப் பயன்படுத்தலாமா? சர்வதேசம் வருமிடங்களில் சிலவற்றில் பன்னாடு என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. தன்னாட்சியான கலைச்சொல்லாக்கம் தவறான பொருளைத் தருகிறது என நினைக்கிறேன். அதேவேளையில் பன்னாட்டுத் தமிழ் நடுவம் போன்ற சில அமைப்புகள் பன்னாட்டு எனப் பதிவு செய்துகொண்டதால் அவற்றை மாற்ற முடியாதுயென்பதையும் அறிகிறேன். அவையின்றி அனைத்து நாடுகளையும் குறிக்க வேண்டிய இடத்தில் பல நாடுகள் என தவறாகக் குறிப்பவைகளை மாற்றிக்கொள்ளலாமா? சில உதாரண இடங்கள்: பன்னாட்டுக் காவலகம், பன்னாட்டு இருபது20, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பன்னாட்டுப் பள்ளிகள், பன்னாட்டு உறவுகள், மேலும் கொஞ்சம்..--நீச்சல்காரன் (பேச்சு) 00:48, 29 மே 2012 (UTC)
- சர்வதேசம் என்பது புறமொழிச்சொல். சமற்கிருதம் என எண்ணுகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- நீச்சல்காரன், நான் International என்பதினை அனைத்துலக என்றும், Global என்பதனை உலகலாவிய என்றும் பயன்படுத்தி வருகின்றேன். இது இவ்வுரையாடலுக்குப் பயன்படுமென்று நினைக்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:13, 29 மே 2012 (UTC)
- International என்பதற்கு அனைத்துலக என்பதுதான் சரி என்று படுகின்றது. நானும் பல இடங்களில் பன்னாட்டு என்றே பயன்படுத்தி இருக்கின்றேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:18, 29 மே 2012 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சிக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்தக் குழப்பம் விக்கிப்பீடியாவுக்கு வெளியேயும் உண்டு. எடுத்துக்காட்டுக்கு, பார்க்க: பன்னாட்டு விமான நிலையம் குறித்த கூகுள் தேடல் முடிவுகள். சர்வதேசம் புறமொழிச் சொல் என்பதால் விட்டு விடுவோம். Multinational, international ஆகிய இரு சொற்களுக்கு இடையேயான தெளிவு தேவைப்படுகிறது என்றாலும், இரண்டும் பல இடங்களில் மாற்றி மாற்றிப் பயன்படுவதைக் காணலாம். International one day match என்று சொன்னாலும் அங்கு ஒரு சில நாடுகளே விளையாடுகின்றன. எனவே, பன்னாட்டு ஒரு நாள் கிரிக்கெட்டுப் போட்டி என்று சொன்னாலும் தவறாகத் தெரியவில்லை. பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் இது பொருந்தும். எனவே, ஆங்கிலச் சொல்லுக்கு நேர் மொழிபெயர்ப்பு வேண்டும் என்று கருதாமல் தமிழில் சொல்லும் போது பொருள் மாறாமல் இருக்கிறதா என்று மட்டும் பார்க்கலாம். அப்படியே international என்பதற்கு சரியான, நேரடித் தமிழாக்கம் நாடுகளிடை, நாட்டிடை என்பது போன்றே அமையும். சர்வதேசம் புறமொழிச் சொல் என்பதை விடுத்துப் பார்த்தாலும் இந்த நேரடிப் பொருளைத் தருவதில்லை. World, Global என்று வரும் இடங்களில் உலக, உலகளாவிய, அனைத்துலக என்பது போன்ற சொல்லாட்சிகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு, உலக சுகாதார அமைப்பு--இரவி (பேச்சு) 07:47, 29 மே 2012 (UTC)
- அனைத்துலக என்பதுவே international என்பதற்கு தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 16:06, 29 மே 2012 (UTC)