விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/மாந்தவுருவகம்
அடிப்படை உளவியல், மெய்யியல் கருத்தான மாந்தவுருவகத்தைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு முன்னதாக வேறு எங்கும் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க வேண்டுவதற்கான காரணங்கள்:
- அடிப்படைக் கருப்பொருள்
- விக்கிக்கு வெளியே தமிழில் எழுதப்படாத தலைப்பு
- பிற மொழி விக்கிக்கள் பலவற்றைக் காட்டிலும் தமிழ் விக்கியில் இக்கட்டுரை நன்கு வளர்ந்துள்ளது
- போதிய அளவு சான்றுகள் தரப்பட்டுள்ளன
- இது போன்ற கருத்துக்களில் வழக்கமாக எழுதும் கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கில விக்கியைத் தழுவியிருக்கும் நிலை உள்ளது. ஆனால் இக்கட்டுரையில் வேறெந்த விக்கியிலும் இல்லாத எடுத்துக்காட்டுகளும் (குறிப்பாகத் தமிழ்ச்சூழலில் இலக்கியத்தில் இருந்து பெற்றவை) விவரங்களும் உள்ளன.
- பொருத்தமான, படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும், பல தரப்பட்ட படங்கள் உள்ளன.
en:Template:FAOL என்ற வார்ப்புருவை ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடுவதன் மூலம் பலரது கவனத்தை ஈர்க்க முடியும். நம் தளத்தைப் பற்றிய மதிப்பும் உயரும். அதே போல en:Template:Link_FA வார்ப்புருவை கட்டுரையில் இடுவதன் மூலம் அனைத்து மொழி விக்கிக் கட்டுரையிலும் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்புக்கருகே விண்மீன் குறியும் காட்டப்படும்.- இலக்கியம், வரலாறு, உளவியல், மொழி எனப் பல துறைகளில் இருந்தும் தகவல்கள் காட்டப்பட்டுள்ளதால் படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டவும் மேலும் பல கட்டுரைகளைப் படிக்கத் தூண்டவும் கூடும்.
இருந்தும் இக்கட்டுரையில் வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அவற்றையும் செய்வோம். நாம் இணைந்து உரையை எளிமைப்படுத்தினால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 11:48, 27 மே 2010 (UTC)
ஆதரவு
தொகு- ஆதரவு--அராபத்* عرفات 15:18, 27 மே 2010 (UTC)
- ஆதரவு --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 16:56, 18 ஏப்ரல் 2011 (UTC)
கருத்துக்கள்
தொகு- ஏழாம் எண்ணிட்ட கருத்து அனைத்து சிறப்புக் கட்டுரைகளுக்குமே பொருந்தும் என்பதால் அடித்துள்ளேன். தவிர, கட்டுரையை எளிமைப்படுத்துவதோடு சில சொந்த ஆய்வுகளைக் களைய வேண்டும். ஆகு பெயர்கள் அனைத்தும் மாந்தவுருவகங்களா என்பதைச் சரி பார்க்க வேண்டும். நான் கட்டுரையில் தந்துள்ள எடுத்துக்காட்டு தவறு போலத் தோன்றுகிறது. கடைசி உட்தலைப்பை மாற்ற வேண்டும், எதிரான கருத்துகளோடு பயன்களும் தரப்பட்டுள்ளன. வேறு மாற்றங்கள் தேவை என்றாலும் பரிந்துரைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:41, 28 மே 2010 (UTC)
- அண்மையில் மேலும் சில சான்றுகளைச் சேர்த்துள்ளேன். இதைச் சிறப்புக்கட்டுரை நிலைக்கு வளர்த்தெடுக்க வேறு என்னென்ன செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்தால் நன்று. -- சுந்தர் \பேச்சு 09:02, 7 மே 2011 (UTC)