விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/வெற்றிகரமானவை

இந்தியா தொகு

மேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கிறேன்--ரவி (பேச்சு) 16:17, 14 செப்டெம்பர் 2005 (UTC)

வழிமொழிகிறேன். -- Sundar \பேச்சு 04:30, 20 செப்டெம்பர் 2005 (UTC)


நானும் வழிமொழிகிறேன் என்றாலும், இக்கட்டுரையில் எழுத்து, வசன, நடை வழுக்கள் உள்ளன. அவற்றை அகற்றிய பின்னரே இதனை சிறப்பு கட்டுரையாக ஆக்குதல் சிறந்தது. இல்லாவிடில் தமிழ் விக்கிபிடியாவின் தரம் குன்றிவிடும் - சுரேன்
சுரேன், பலரும் சேர்ந்து ஒரு கட்டுரையை எழுதும்போது கட்டுரையின் தொனி வேறுபடுவது எதிர்பார்க்கக்கூடியது தான். இயன்ற அளவு நீங்கள் கூறியுள்ள முரண்பாடுகளை களைவோம். நீங்களும் உதவலாம். நன்றி--ரவி (பேச்சு) 09:55, 21 செப்டெம்பர் 2005 (UTC)

பெரிய சிக்கல்கள் எதுவுமில்லையெனில் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாமா? ஏனெனில், அவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில விக்கியில் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்பிற்கருகில் ஒரு நட்சத்திரக்குறி இருக்கும். இதன் மூலம் கூடுதல் கவன ஈர்ப்பு கிடைக்க வழி ஏற்படும். -- Sundar \பேச்சு 08:31, 27 செப்டெம்பர் 2005 (UTC)

சுரேனின் ஆலோசனையை கொஞ்சமாவது முயன்று பார்த்துவிட்டு பிறகு அறிவிக்கலாம் என்பது என் எண்ணம்--ரவி (பேச்சு) 09:40, 27 செப்டெம்பர் 2005 (UTC)
சுரேன், நீங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தந்தால் சீர்செய்ய வசதியாக இருக்கும். -- Sundar \பேச்சு 09:52, 27 செப்டெம்பர் 2005 (UTC)

ஆப்பிள் தொகு

அருமையான கட்டுரை. கண்டிப்பாக சிறப்புக் கட்டுரைகளுக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. பப்படு, நற்கீரன், ரவி ஆகியோருக்கும் நன்றி. -- Sundar \பேச்சு 10:40, 27 டிசம்பர் 2005 (UTC)

  • ஆதரவு :-) -- சிவகுமார் 10:43, 27 டிசம்பர் 2005 (UTC)
  • நியமனம் செய்யும் பணி எனக்கு மிச்சம் :). நிச்சயம் சிறப்புக் கட்டுரையாக வழிமொழிகிறேன். நீண்ட நாள் கழித்து ஒரு சிறப்புக் கட்டுரை உருவாகி இருப்பது மகிழ்ச்சி. எனக்குத் தான் இப்படி உட்கார்ந்து உருப்படியாக ஒரு கட்டுரை எழுதும் வித்தை வர மாட்டேன் என்கிறது :) பப்படுவின் அனைத்துக் கட்டுரைகளையும் அவரும் மற்றவர்களும் கொஞ்சம் முயன்றால் சிறப்புக்கட்டுரைகளாக எழுதில் ஆக்கிவிடலாம்.--ரவி 18:01, 27 டிசம்பர் 2005 (UTC)
  • ஆதரவு, நல்ல விரிந்த, ஆழமான கட்டுரை. --Natkeeran 20:05, 27 டிசம்பர் 2005 (UTC)

நகர்பேசி தொகு

  • சிறந்த தொழில்நுட்பக் கட்டுரை. இலக்கியம், பொழுதுபோக்கு, நாடுகள், தொழில்நுட்பம், அறிவியல், கணிதம் என அனைத்து துறைகளிலிருந்தும் சிறப்புக் கட்டுரைகள் வளர வேண்டும். -- Sundar \பேச்சு 05:58, 19 ஜூலை 2005 (UTC)
  • ஆதரவு. இதன் பேச்சுப்பக்கத்தில் நான் தந்துள்ள ஆலோசனையை கருத்தில் கொள்ளலாம்--ரவி (பேச்சு) 09:07, 19 ஜூலை 2005 (UTC)
  • ஆதரவு. நானும் இதை ஆதரிகின்றேன். --உமாபதி 04:23, 17 டிசம்பர் 2005 (UTC)
  • ஆதரவு.--Natkeeran 19:34, 30 டிசம்பர் 2005 (UTC)