விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்
இந்த விக்கிப்பீடியா பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த விக்கிப்பீடியா பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
தற்போது தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை மிகுதியில்லாததால், சிறப்புக் கட்டுரைகள் நியமனத்திற்கான நெறிமுறைகள் சிலவேயாகவும் எளிமையானதாகவும் இருக்கும். நாளடைவில், கட்டுரைகளின் எண்ணிக்கையும் தரமும் வளரும் போது, விக்கிபீடியர்கள் கலந்துரையாடி ஒரு இணக்க முடிவு எடுத்து இந்நெறிமுறைகளை மாற்றலாம்.
சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்
தொகு- கட்டுரை முழுமையாகத் தமிழில் இருத்தல் அவசியம். தேவைப்படும் இடங்களில் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலம் அல்லது பிறமொழிச் சொற்களைக் குறிப்பிடலாம்.
- கட்டுரை நடுநிலையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- தவறான தகவல்கள் ஏதும் இருக்கக் கூடாது. இயன்ற அளவு, பிற மதிக்கத்தக்க ஆவணங்களை மேற்கோள்களாகக் காட்ட வேண்டும். (எ-கா: பிபிசி தமிழ் வலைத்தளம்) தகவலுக்கு ஆதாரமான நூல், நூலாசிரியர், பதிப்பகம், வெளியான ஆண்டு, நூலின் பதிப்பு, நூலின் பக்கம் போன்றவைகள் அடங்கிய நூல் மேற்கோள்களாகவும் இருக்கலாம்.
- கட்டுரைத் தலைப்புடன் தொடர்புடைய கருத்துகளுக்கான கருப்பொருளைப் பற்றி நன்கு விளக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும், பொது அறிமுக நடையைப் பின்பற்றி இருக்க வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியாவிலிருக்கும் நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள நடைப் பிறழ்வுகளைத் தவிர்த்துக் கட்டுரை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- விக்கிப்பீடியாவின் பக்க வடிவமைப்பு கையேட்டில் குறிப்பிட்டபடி கட்டுரை வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டுரைக்குத் தேவையான படங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியாவிலிருக்கும் பிற கட்டுரைகளுக்குச் செல்ல வசதியாக அக்கட்டுரையிலுள்ள முக்கியத் தகவல்களுக்கான தலைப்புகளுக்கு உள் இணைப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டுரை பிற மொழி விக்கிப்பீடியாக்களில் இருக்கும் நிலையில் அம்மொழிகளுக்குச் செல்வதற்கான இணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் சார்ந்த சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான கலைச்சொற்கள் பகுதி கட்டுரையின் கீழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டுரையுடன் தொடர்புடைய வார்ப்புருக்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்
சிறப்புக் கட்டுரைகளின் பட்டியல்
தொகுதற்போதைய சிறப்புக் கட்டுரைகள் நல்ல எடுத்துக்காட்டு கட்டுரைகள். அவற்றின் பட்டியலை இங்கே காணலாம்.