விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள்

இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


கொள்கை:

தமிழ் விக்கிப்பீடியா தரவுத்தள கட்டுரைகள் உருவாக்கத்தைத் தடுப்பதில்லை. எனினும், சிறிய சமூகமான தமிழ் விக்கிப்பீடியாவின் வளங்களைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கட்டுரைகளை முதல் தொகுப்பிலேயே பிழையின்றியும் இலகுவாகவும் பதிவேற்றுவது எப்படி என்பதை முறைப்படுத்த இக்கொள்கை விழைகிறது.

முறைமை:

 • தரவுத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே போன்று குறைந்தது 100 கட்டுரைகளுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உருவாக்கப்படும் கட்டுரைகள் இந்தக் கொள்கையின் கீழ் வரும். பல கட்டுரைகளில் உள்ள எண், பெயர் போன்ற தரவுகளை நீக்கினால், அனைத்துக் கட்டுரைகளும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருந்தால் இவை தரவுத்தள கட்டுரைகள் எனக் கருதப்படும். எடுத்துக்காட்டுகள்: மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரம் அடிப்படையில் ஊர்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகள், ஒவ்வொரு திரைப்படம் குறித்த விவரிப்புகள் ஏதும் இல்லாமல் IMDB அடிப்படையில் எழுதப்படும் கட்டுரைகள், விளையாட்டு வீரர்கள் பற்றிய புள்ளி விவரங்கள், தேர்தல் முடிவுகள் மட்டும் கொண்ட கட்டுரைகள்.
 • ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது மூன்று வரி இருக்க வேண்டும். கூடுதல் தகவலை தகவற்பெட்டி மூலம் தர முனைய வேண்டும்.
 • ஒவ்வொரு கட்டுரையிலும் தகுந்த உசாத்துணை அல்லது வெளி இணைப்பு, விக்கியிடை இணைப்புகள் இருக்க வேண்டும்.
 • கட்டுரைகள் எழுத்து, இலக்கணம், தகவல் பிழைகள் அற்றவையாக இருக்க வேண்டும்.
 • எத்தலைப்பைப் பற்றிய கட்டுரையாகவும் இருக்கலாம். அத்தலைப்பு குறிப்பிடத்தக்கதா, கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றதா என்று மட்டுமே பார்க்கப்படும். எத்தனைப் பேருக்குப் பயன்படும், தமிழருக்குப் பயன்படுமா என்பது போன்ற அடிப்படைகளில் மட்டுறுத்தப்படாது.
 • சில தரவுகளைத் தனித்தனிக் கட்டுரைகளாக இடுவதைக் காட்டிலும் ஒரே பட்டியல் பக்கத்தில் இட்டால், தரவுகளை அடுக்கிப் பார்க்கவும் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஏதுவாக இருக்கும். இது போன்ற வேளைகளில், தனித்தனிக் கட்டுரையாக இடாமல் தகவலை வேறு விதமாக இடுவது சிறப்பாக இருக்குமா என்று பரிந்துரைக்கப்படும். தகவல் மட்டுறுத்தப்படாது. ஆனால், தகவலை விக்கிப்பீடியாவில் சிறப்பாகத் தருவதற்கு ஏற்ற வடிவம் பரிந்துரைக்கப்படலாம்.
 • கட்டுரைகளைத் தானியங்கி கொண்டு உருவாக்க இயலுமானால், அதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப்படும். இதன் மூலம், கட்டுரையை உருவாக்குவோர், கண்காணித்து உரை திருத்துவோர் ஆகிய அனைவருக்கும் நேரம், உழைப்பு மிஞ்சும். கட்டுரைகளை உருவாக்கும் பயனர் தனக்கான ஒரு தானியங்கிக் கணக்கு தொடங்கி அதில் இருந்து கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டும்.
 • இவ்வாறு உருவாகும் கட்டுரைகள் தொடர்ந்தோ அடிக்கடியோ மாறக்கூடியோ தரவுகளைக்கொண்டிருந்தால், அவற்றைத் தானியக்கமாகவோ, பகுதி தானியக்கமாகவோ இற்றைப்படுத்தி வரும் வாய்ப்புகள், அதற்கு ஏற்றவாறு தானியங்கி / தரவுகளைச் சேமிக்கும் முறை குறித்து ஆய வேண்டும். எடுத்துக்காட்டு: தற்போது முனைப்பாக ஆடி வரும் விளையாட்டு வீரர்கள், அடிக்கடி ஆட்கள் மாறக்கூடிய பொறுப்புகள்.
 • மேற்கண்ட தேவைகளை நிறைவு செய்த பிறகு, சில மாதிரிக் கட்டுரைகள் உருவாக்கப்படும். வெவ்வேறு தரவுகளுக்கு வெவ்வேறு மாதிரிகள் / படிவங்கள் / வார்ப்புருக்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் சில மாதிரிக் கட்டுரைகள் இங்கு இட வேண்டும்.
 • இந்த மாதிரிக் கட்டுரைகளைக் கவனித்து ஒப்புதல் பெற 14 நாள் காலம் தர வேண்டும். இந்த 14 நாள் காலத்தில் இக்கட்டுரைகளின் மாதிரிகளை மேம்படுத்த தமிழ் விக்கிப்பீடியா பயனர் சமூகம் முனையும்.
 • மாதிரிகளைச் சரி பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, பயனர்கள் கட்டுரைகளைப் பதிவேற்றலாம். ஒரு வேளை இக்கட்டுரைகளின் தன்மையால் இவற்றில் உள்ள தகவலைக் கண்காணிக்க வேண்டிய தேவை இருந்தால், மாதம் 300 கட்டுரைகளை மட்டுமே பதிவேற்றுமாறு வேண்டலாம். இத்தகைய தேவை இல்லாவிட்டால், ஒரே மூச்சில் அனைத்துக் கட்டுரைகளையும் பதிவேற்றலாம்.