விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்/தொகுப்பு

Bot/தானியங்கி அனுமதி தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:NatkeeranBot
  • Purpose/நோக்கம்: இது துறை வாரியான சீரான கட்டுரைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
  • Owner/உரிமையாளர்: பயனர்:Natkeeran
  • Decision/முடிவு: சூன் 12, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

JayarathinaAWB_BOT - தானியங்கி அனுமதி தொகு

AswnBot - தானியங்கி அனுமதி தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்:AswnBot
  • Purpose/நோக்கம்:interwiki இணைப்புகளை சரிபார்த்தல் மற்றும் இணைத்தல்
  • Owner/உரிமையாளர்:அஸ்வின்
  • Decision/முடிவு: நவம்பர் 27, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Sodabot/தானியங்கி அனுமதி தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:Sodabot
  • Purpose/நோக்கம்: சிறு உரைதிருத்தங்கள் / வார்ப்புரு சேர்த்தல் & மாற்றம் / பகுப்பு சேர்த்தல் & மாற்றம்
  • Owner/உரிமையாளர்: பயனர்:Sodabottle
  • Decision/முடிவு: தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டது--இரவி 15:10, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

shanmugambot/தானியங்கி அனுமதி தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்:user:shanmugambot
  • Purpose/நோக்கம்:பகுப்பாக்கம் மற்றும் வார்ப்புருக்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் & general cleanup
  • Owner/உரிமையாளர்:shanmugam
  • Decision/முடிவு: தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டது--இரவி (பேச்சு) 18:52, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி தொகு

கருத்துகள் தொகு

விக்கித் தானுலவியைப் (AWB) பயன்படுத்தவுள்ளீர்களா, சண்முகம்? -- சுந்தர் \பேச்சு 14:26, 5 மே 2012 (UTC)[பதிலளி]

ஆம் சுந்தர். விக்கி தானுலவி மூலமே பகுப்பை சேர்த்தல், நீக்கல் மற்றும் GENERAL CLEANUP போன்ற வேலைகளைச் செய்வேன். BOT அணுக்கம் இருந்தால் எளிதாக இருக்கும். மேலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் எளிதாக பயனர்கள் தானியங்கி தொகுப்புகளை மறைத்து பார்க்க இயலும். (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அப்போது தேர்வுகள் நடந்தமையால் பார்க்கவில்லை, இப்போதுதான் கவனித்தேன் :) )--சண்முகம் (பேச்சு) 06:13, 19 மே 2012 (UTC)[பதிலளி]

LogicwikiBot/தானியங்கி அனுமதி தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:LogicwikiBot
  • Purpose/நோக்கம்: புள்ளிவிவரங்களை தினந்தோறும் இற்றைப்படுத்த
  • Owner/உரிமையாளர்: ஸ்ரீகாந்த்
  • Decision/முடிவு: சுந்தரின் கேள்விக்கு LogicwikiBotன் பங்களிப்புகளே விடையாக உள்ளதால் தானியங்கி அணுக்கம் வழங்கப்படுகிறது--இரவி (பேச்சு) 11:44, 18 பெப்ரவரி 2013 (UTC)

கருத்துகள் தொகு

புள்ளி விவரப் பக்கங்களை மட்டும் தான் இக்கணக்கில் இருந்து தொகுக்க உள்ளீர்களா, ஸ்ரீகாந்த்? -- சுந்தர் \பேச்சு 14:27, 5 மே 2012 (UTC)[பதிலளி]

புள்ளிவிபரங்கள் மட்டுமே நாளுக்கு ஒரு தடவை இத்தானியங்கி மூலம் தரப்படுகிறது. இதற்கு தானியங்கி அணுக்கம் தருவதால் மிக அவசியமான இத்தரவுகள் அண்மைய மாற்றங்களில் தெரிய வாய்ப்பில்லை. இதனால் தானியங்கி அணுக்கத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 07:30, 20 பெப்ரவரி 2013 (UTC)
ஒவ்வொரு மாதமும் முனைப்பாக உள்ள பயனர்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் தொகுப்புகளில் தானியங்கி அல்லாதவற்றைப் பிரித்துப் பார்க்க விரும்புகிறேன். இதன் காரணமாகவும் தானியக்கமாக தொகுப்பவற்றை அவ்வாறே குறிக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை செயற்பாடு என்பதாலும் இக்கணக்கின் தானியங்கி அணுக்கம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இங்கு தானியங்கி அணுக்கம் இருப்பது பிரச்சினை இல்லை. அதனால், அண்மைய மாற்றங்களில் தெரியவில்லை என்பதே பிரச்சினை. இப்பக்கத்தின் தொகுப்புகள் சிறிய தொகுப்புகளாக இருப்பதால் அண்மைய மாற்றங்களில் சிறு தொகுப்புகளை மறைத்திருப்பவர்களுக்கும் கூட தென்படாது. எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க, அண்மைய மாற்றங்களின் தலைப்புப் பகுதியிலேயே பெப்ரவரி 2013 புள்ளிவிவரத்துக்கான இணைப்பைத் தந்திருக்கிறேன். அனைவரின் பார்வைக்கும் கிட்டும். ஒவ்வொரு மாதமும் இந்த இணைப்பை இற்றைப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதுவே போதுமான தீர்வாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன்.
சுந்தரின் கேள்விக்கு ஆம், இல்லை என்று இரண்டே பதில்கள் தான் வர இயலும். இல்லை என்றால் இன்னும் என்னென்ன பணிகள் என்ற அடுத்த கேள்வி வரும். அந்தத் தானியக்கப் பணி ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்றங்களைச் செய்தால் அதற்கு தானியங்கி அணுக்கம் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிரீக்காந்த் தற்போது தமிழ் விக்கியில் முனைப்பாக இல்லாத நிலையில் அக்கணக்கின் பங்களிப்புகளையே விடையாக கொள்ள வேண்டும். ஒரு தானியங்கி செய்யும் பணி தீங்காக இருந்தாலோ பெரும்பான்மை பயனரிடமிருந்து உள்ளடக்கத்துக்கு நேரும் பெரும் மாற்றங்களை மறைப்பதாக இருந்தாலோ மட்டுமே அதற்கான அணுக்கத்தை மறுக்கலாம். அண்மைய மாற்றங்களில் பார்க்க இயலவில்லை என்பது அணுக்கத்தை மறுப்பதற்கான போதுமான காரணம் இல்லை. இணையத்தில் ஒரு பக்கத்தைப் பார்க்க நிறைய வழிகள் உள்ளன. உலாவியில் குறித்து வைத்துக் கொண்டும் பார்க்கலாம். எனவே, தொடர்ந்து தானியங்கி அணுக்கத்தை அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன்--இரவி (பேச்சு) 08:04, 20 பெப்ரவரி 2013 (UTC)
இரவி, தானியங்கி அணுக்கம் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நான் நினைக்கிறேன். பொதுவாகப் பயனர்களுக்குத் தேவையற்ற தொகுப்புகளை செய்யும் தானியங்கிகளுக்கே தானியங்கி அணுக்கம் கொடுக்கப்படுகிறது என்பதே எனது புரிதல். இவற்றின் நம்பகத் தன்மையைக் கொண்டு அவற்றின் பதிவுகள் அண்மைய மாற்றங்களில் மறைக்கப்படுகின்றன. சிறீகாந்தின் தரவுகள் பலரும் பார்த்துப் பயனுறுவது என்ற முறையில் அதனை மறைக்க முயல வேண்டாம். அனைத்துத் தானியங்கிகளுக்கும் தானியங்கி அணுக்கம் கொடுப்பதென்ற உங்கல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.--Kanags \உரையாடுக 08:24, 20 பெப்ரவரி 2013 (UTC)
சிறீதரன், //பொதுவாகப் பயனர்களுக்குத் தேவையற்ற தொகுப்புகளை செய்யும் தானியங்கிகளுக்கே தானியங்கி அணுக்கம் கொடுக்கப்படுகிறது என்பதே எனது புரிதல். // என்பது சரியான அணுகுமுறை அன்று. பயனில்லாத எந்தத் தொகுப்பையும் அது தானியங்கி செய்தாலும் சரி பங்களிப்பாளர் செய்தாலும் சரி ஏற்பதில்லை. தமிழ் விக்சனரியில் இலட்சக்கணக்கான சொற்கள் தானியங்கி மூலம் ஏற்றப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கத்தில் நூற்றக்கணக்கான கட்டுரைகள் தானியங்கி மூலம் ஏற்றப்பட்டது. இவை யாவும் பயனுள்ள தொகுப்புகளே. ஒரே மாதிரியான செயற்பாட்டை தானியங்கி மூலம் செய்ய முடியுமானால், அதனைத் தானியங்கி மூலம் செய்வது மனித உழைப்பை மிச்சப்படுத்தும் என்ற நோக்கிலேயே தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தொகுப்புகளும் பயனுடையவையே. ஆனால், உலக விக்கிப்பீடியாக்கள் முழுவதிலுமே தரவு நோக்கில் தானியங்கித் தொகுப்புகளும் பங்களிப்பாளர் தொகுப்புகளும் வேறுபடுத்தியே பார்க்கப்படுகிறது. ஒரு தானியங்கி தொடர்ந்து பயனுள்ள தொகுப்புகளைத் தந்தால் அதற்குத் தானியங்கி அணுக்கம் வழங்குவது முறை. அத்தொகுப்பை எப்படிப் பார்வைக்குத் தருகிறோம் என்பது வேறு பிரச்சினை. அண்மைய மாற்றங்களில் காண்பது மட்டும் ஒரே வழி அன்று. --இரவி (பேச்சு) 08:37, 20 பெப்ரவரி 2013 (UTC)
அவ்வாறென்றால், நீங்கள் தானியங்கியையும் தானியங்கி அணுக்கத்தையும் ஒன்றெனப் பார்க்கிறீர்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை. தானியங்கி வேறு. தானியங்கி அணுக்கம் வேறு எனப் பார்க்கிறேன். ஒரு தானியங்கி செய்யும் மாற்றம் பொதுவாகப் பயனர்களுக்குப் பயன் தராது எனக் கருதும் பட்சத்தில் அதற்குத் தானியங்கி அணுக்கம் தரலாம். அதே வேளையில், தானியங்கி செய்யும் மாற்றம் கவனிக்கப்பட வேண்டும், அல்லது கட்டாயம் தெரிய வேண்டும் எனக் கருதினால் அதற்கும் அணுக்கம் தரத் தேவையில்லை. மேலும் இது குறித்து நான் வாதாட விரும்பவில்லை. எனது புரிதலும் தவறென்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன். சுந்தர் அல்லது மயூரநாதன் தெளிவான பதிலைத் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 08:46, 20 பெப்ரவரி 2013 (UTC)
தானியங்கியையும் அணுக்கத்தையும் தனித்தனியாகப் பார்க்கும் உங்கள் நோக்கு புரிகிறது. ஆனால், என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விக்சனரியில் ஏற்றிய இலட்சக்கணக்கான சொற்களும் விக்கிப்பீடியாவில் ஏற்றிய நூற்றக்கணக்கான கட்டுரைகளும் பயனுடையவையே. இவற்றைப் பயனர்கள் பார்க்கத் தேவையில்லை என்பதற்காக தானியங்கி அணுக்கம் கொடுத்து மறைத்து வைக்கவில்லை. தானியங்கி செய்யும் பணியை அவ்வாறே குறிக்க வேண்டும் என்பது உலக விக்கிகள் நடைமுறை. இந்தக் குறிப்பிட்ட தரவுப் பக்கம் சிலருக்குப் பயனுடையதாக இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அனைத்துப் பயனர்களும் ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்றாக நான் கருதவில்லை. அப்படியே கருதினாலும், அதற்காக தானியங்கி அணுக்கத்தை மீளப்பெற வேண்டும் என்பதை ஏற்க இயலாது. அணுக்கத்தை மீளப் பெறாமலேயே தொகுப்புகளைப் பயனர்களின் காட்சிக்கு வைக்க முடியும். நானும் என்னுடைய கருத்துகளை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன். மற்ற பயனர்களும் தங்கள் கருத்தை முன்வைத்தால் நன்று. --இரவி (பேச்சு) 09:34, 20 பெப்ரவரி 2013 (UTC)
அதாவது உலக விக்கி நடைமுறை: தானியங்கிகள் செய்யும் மாற்றங்கள் அனைத்தையும் அண்மைய மாற்றங்களில் தெரியாது மறைத்து வைக்க வேண்டும். விரும்பியவர்கள் அந்த மாற்றங்களப் பார்க்கலாம். என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறான உலக நடைமுறை இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். தெரியப்படுத்தியமைக்கு நன்றி. //அணுக்கத்தை மீளப் பெறாமலேயே தொகுப்புகளைப் பயனர்களின் காட்சிக்கு வைக்க முடியும்.// எவ்வாறு எனக் கூறுங்கள்?--Kanags \உரையாடுக 09:44, 20 பெப்ரவரி 2013 (UTC)
அண்மைய மாற்றங்களில் தானியங்கிகள் செய்யும் தொகுப்புகளை மறைத்து வைத்திருப்பது அனைத்து விக்கிகளிலும் இயல்பு நிலை. Firefox private browsing அல்லது Google chrome incognito modeல் சென்று பார்த்தால் இதை உறுதிப்படுத்தலாம். தானியக்கமாகச் செய்யும் பணியைத் தானியக்கத் தொகுப்பு என்று குறிப்பதும் அதற்காக தானியங்கி அணுக்கம் வழங்குவதும் உலக நடைமுறை. http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm ல் Edit activity levels of registered users and bots per group of namespaces , 50 bots, ordered by number of contributions ஆகிய தரவுகள் தானியங்கித் தொகுப்புகளை வரையறுக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டுகிறது. தானியங்கி செய்யும் தொகுப்பைப் பங்களிப்பாளர் செய்யும் தொகுப்பாக கருத இடமளிப்பது புள்ளிவிவரப் பிழை. //அணுக்கத்தை மீளப் பெறாமலேயே தொகுப்புகளைப் பயனர்களின் காட்சிக்கு வைக்க முடியும்.// தற்போது அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் தலைப்பில் பெப்ரவரி 2013 புள்ளிவிவரத்துக்கான இணைப்பு உள்ளது. இது ஒரு வழி. ஒவ்வொரு நாளும் இத்தானியங்கி செய்யும் தொகுப்பு சரியா தவறா என்று பார்த்து திருத்த வேண்டிய தேவையில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றத்தை அண்மைய மாற்ற வரிசையில் காட்டாமல் அப்பக்கத்தைச் சுட்டும் இணைப்பு மட்டுமே போதுமானது. இதே போல் வேறு ஏதாவது தானியங்கியின் பங்களிப்பைப் பார்ப்பதற்கான தேவை இருந்தால் சுட்டுங்கள். அதற்கான மாற்று வழியைச் சிந்திப்போம்--இரவி (பேச்சு) 10:31, 20 பெப்ரவரி 2013 (UTC)