விக்கிப்பீடியா:திறனாய்வுக் கையேடு

ஆங்கில விக்கிபீடியாவில் புதிய ஆய்வு அல்லது திறனாய்வுக் கட்டுரைகளை ஏற்பதில்லை என்ற விதிமுறை இருக்கின்றது. பொதுவாக அந்த விதிமுறை தமிழ் விக்கிபீடியாவிற்கும் பொருந்தும். தமிழ் விக்கிபீடியாவிலும் அங்கீகரிக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட தகவல்களைப் பகிரவே முனைப்பு காட்டப்படுகின்றது. எனினும், சமூக அறிவியல் சார்ந்த கட்டுரைகளில் தகவல்கள் மட்டுமின்றி தகுந்த முறையில் விமர்சனப் பார்வைகள் உள்ளடக்கப்படுவதும், திறனாய்வு பகுதிகள் சேர்க்கப்படுவதும் நன்று. அதற்கு உதவும் நோக்குடன் இந்தக் கையேடு தொகுக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்ட கருத்துக்களுடன் வேறுபடுகின்றவர்கள் உரையாடல் பக்கத்தில் அவற்றைத் தெரிவிக்கவும்.

இக்கையேடு தற்சமயம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உங்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகின்றது.