விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை

இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் உடையவர்களின் கவனத்துக்கு வர வேண்டிய விடயங்களைப் பற்றி குறிப்பிடலாம்.

 • அனுபவமற்ற பயனர்கள் இங்கு புதிய கருத்துக்களைத் தெரிவிப்பது என்பது அரிதான செயலாக உள்ளது
 • இங்கு தனியுரிமைக் கொள்கைகளை மீறுதல், பொருத்தமற்ற சுய தகவல்களைப் பகிர்தல், இன்பப் பயணங்கள் போன்றவை குறித்து இங்கு புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதியதாக ஒரு பயனரைப் பற்றிய உரையாடலைத் துவங்கும் போது நீங்கள் தவறாமல்/மறவாமல் இது குறித்தான அறிவிப்பினை அந்தப் பயனரின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்

இங்குள்ள முந்தைய உரையாடல்களின் தொகுப்புக்களைக் காண பின்வரும் இணைப்புக்களைக் காணுங்கள்.

தொகுப்பு 1 | தொகுப்பு 2


Arun321

தொகு

பயனர்:Arun321 இப்பயனர் தனது விக்கிக்கு வெளியில் தனிநபர் தாக்குதல் என் மீது மேற்கொண்டுள்ளார். ஆதாரம் உள்ளது. --AntanO (பேச்சு) 05:14, 26 மே 2021 (UTC)Reply

@Arun321: நீங்கள் JPEG XL என்னும் கட்டுரையை கலைக்களஞ்சியத்தில் இல்லாதவாறு உருவாக்கியதால், நிர்வாகி AntanO அவர்கள் நீங்கள் உருவாக்கிய கட்டுரையை நீக்கினார், இது விக்கிப்பீடியாவின் வழக்கமான ஒரு செயல், இதற்கு ஏன் தேவையில்லாத மிரட்டல் வேலையெல்லாம். நீங்கள் அவரை மிரட்டல் விட்ட நேரத்தில், என் கட்டுரை ஏன் நீக்கப்பட்டது, அதில் என்ன தவறு உள்ளது என அவரிடமோ இல்லை மற்ற நிர்வாகியிடமோ விளக்கம் கேட்டுத் தெரிந்துக் கொண்டால், இந்நேரம் அதே கட்டுரை விக்கிப்பீடியாவின் விதிமுறைக்கு உட்பட்டு உங்களால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. முதலில் நிர்வாகி ஒருவர் கட்டுரையை நீக்கினால், அதை ஏன் நீக்கம் செய்தீர்கள் என அவரிடம் விளக்கம் கேட்டு பெறுங்கள், அப்போது தான் உங்களால் அடுத்த கட்டுரையை சரியான முறையில் உருவாக்க முடியும். (குறிப்பு: எந்த ஒரு நிர்வாகியும், ஒரு கட்டுரையை நீக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள், மாறாக அந்த கட்டுரையை திருத்தம் செய்ய தான் பார்ப்பார்கள். அப்படி முடியாத பட்சத்தில் தான் அந்த கட்டுரையை நீக்கம் செய்வார்கள்.) --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 05:43, 26 மே 2021 (UTC)Reply

IcyVex68

தொகு

Vandalism on various pages, likely to be a sock account of SuperGod367. Stang (பேச்சு) 20:57, 6 அக்டோபர் 2021 (UTC)Reply

@Stang:, Many IDs are blocked and related pages are protected. --AntanO (பேச்சு) 03:20, 7 அக்டோபர் 2021 (UTC)Reply

Thanks a lot! Stang (பேச்சு) 03:21, 7 அக்டோபர் 2021 (UTC)Reply

Global ban proposal for Musée Annam

தொகு

Apologies for writing in English. Please help translate to your language There is an on-going discussion about a proposal that Musée Annam be globally banned from editing all Wikimedia projects. You are invited to participate at Requests for comment/Global ban for Musée Annam on Meta-Wiki. நன்றி! NguoiDungKhongDinhDanh (பேச்சு) 14:22, 27 திசம்பர் 2021 (UTC)Reply

நிர்வாகக் கருவிக்கான பரிந்துரைகள்

தொகு

விக்கிமீடியா அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக அணுக்கத்தில் செயல்படும் Moderator Tools உருவாக்கி வருகிறார்கள். இதில் நிர்வாகப் பணிக்குத் தேவையான கருவிகள் குறித்த பரிந்துரையினைத் தமிழ் விக்கிப்பீடியா சார்பாகக் கேட்டுள்ளனர். நமது பரிந்துரையின் அடிப்படையில் தங்களது ஆய்வு & மேம்பாட்டைச் செய்து புதிய வசதிகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் ஐயங்களுக்கு User:Samwalton9_(WMF) பதிலளிக்கவும் கூடும். பொதுவாக நீக்கம், சுற்றுக்காவல், தடை போன்று விசமத்தனத்தைத் தடுக்கும் வகையில் இந்த மட்டுப்பாட்டுக் கருவி அமையும். எனவே உள்ளடக்கத்தைப் பாதுகாக்க என்ன வகையான வசதிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற கோணத்தில் பரிந்துரைகளை முன்வைக்கலாம். கவனிக்க @Gowtham Sampath, AntanO, Kanags, செல்வா, Arularasan. G, Aswn, Balajijagadesh, Info-farmer, Parvathisri, கி.மூர்த்தி, and Nan: -நீச்சல்காரன் (பேச்சு) 15:53, 12 சனவரி 2022 (UTC)Reply

  விருப்பம் AntanO (பேச்சு) 19:42, 12 சனவரி 2022 (UTC)Reply
  விருப்பம் --கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 02:53, 14 சனவரி 2022 (UTC)Reply
  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 04:04, 14 சனவரி 2022 (UTC)Reply
  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 05:55, 14 சனவரி 2022 (UTC)Reply
விருப்பக் குறிகளுக்கு நன்றி. பரிந்துரைகளை எதிர்பார்க்கிறேன். எனது பரிந்துரைகளை முதலில் வைக்கிறேன்.
 • பகுப்பு வாரியாகக் கவனிப்புப் பட்டியலை அமைத்தல்(categorywise follow list). இதன் மூலம் விருப்பமான தாய்ப்பகுப்பை ஒருவர் எடுத்துக் கொண்டால் அதன் திருத்தங்களை மட்டும் கவனித்து மட்டுப்படுத்தலாம்.
 • புதுப் பயனரொருவர் புதியதாக ஒரு பக்கம் உருவாக்கும் போது மேற்கோளும் பகுப்பும் இல்லாவிட்டால் அவற்றைச் சேர்க்கச் சொல்லி ஒரு அறிவிப்பினைக் காட்டலாம்.
 • புதுப் பயனருக்குக் கொடுக்கப்படும் புதிய தகவல்களை வெறும் அறிவித்தலாக(Notification) மட்டுமல்லமால் அது முன்பக்கத்திலேயே படிக்கக் காட்டலாம்.
 • மின்னஞ்சலில்லாமல் பதிவுசெய்த பயனர் ஒருவரது திருத்தங்கள் இருமுறைக்கும் மேல் மீளமைக்கப்பட்டால், தானாகவே மின்னஞ்சலைக் கொடுக்கச் சொல்லி கணக்கினைத் தற்காலிகத் தடையினை இடலாம்.
 • ஒருவரைப் பொதுவாகத் தடை செய்யாமல் ஒரு தாய்ப்பகுப்பின் கீழுள்ள கட்டுரைகளுக்கு மட்டும் தடை செய்யலாம். இதனால் அவர் விரும்பும் மற்ற துறைகளில் எழுதமுடியும்.
 • புதுப்பக்கங்களுக்கே சுற்றுக்காவலுள்ளது. பொதுவான திருத்தங்களுக்கு இல்லை எனவே பொதுவாக ஒரு பயனர்கள் விரும்பினால் ஒரு கட்டுரையை குறிப்பிட்ட வரிகளைத் தேர்வு செய்து அதை மீளாய்வு செய்யச் சொல்லி கருத்திட வாய்ப்பளிக்கலாம்(Highlight and raise concern).
 • துப்புரவுப் பணிகளின் போதோ பின்தொடர வேண்டியவற்றின் போதோ சில பணிகளை எதிர்காலத்தில் கவனிக்கவேண்டிய தேவைகள் உள்ளன. அதனால் விக்கிக்குள்ளே பயனரின் தனிப்பயன்பாட்டிற்கான நினைவூட்டல் வசதி வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:59, 14 சனவரி 2022 (UTC)Reply
 • புகுபதிகை செய்யாமல் தொகுக்க முற்படும் புதியவர்களின் தொகுப்புகளை சேமிப்பதற்கு முன்னர் புகுபதிகை செய்யச் சொல்லி உடனடியாக தானாகவே அறிவிப்பை வெளியிடலாம்--கி.மூர்த்தி (பேச்சு) 11:36, 14 சனவரி 2022 (UTC)Reply
@AntanO, Gowtham Sampath, Arularasan. G, and கி.மூர்த்தி: இது வரை எங்களுடன் இணைந்து பணிபுரிய இசைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்! இன்று வரை எங்களுக்குப் பதிலளித்திருக்கும் பதிப்பாசிரியர்களுக்கு கூடுதல் விவரங்களுடன் மின்னஞ்சலில் தகவல் அனுப்பவிருக்கிறோம். உங்கள் பொன்னான நேரத்திற்கும் பின்னூட்டக் கருத்துக்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் Samwalton9 (WMF) (பேச்சு) 10:39, 26 சனவரி 2022 (UTC)Reply
பிப்ரவரி 27 அன்று சாம் நம்முடன் கலந்துரையாடல் செய்ய அழைத்துள்ளார். பொதுவான தொழில்நுட்பப் பரிந்துரைகள் இருந்தாலும் மேலே விவாதித்த மட்டுப்பாட்டுக் கருவிகள் சார்ந்தோ தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். தமிழிலேயே கலந்துரையாடலாம் மொழிபெயர்ப்பாளர் வசதியும் உண்டு. இன்னும் கூட்ட இலக்கத்தை அவர் பகிரவில்லை. கிடைத்தவுடன் பகிர்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 18:43, 18 பெப்ரவரி 2022 (UTC)
பிப்ரவரி 27 மாலை 5 மணி https://meet.google.com/kyz-bqon-khr கூட்டம் இணைப்பு. இது தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவுப் பணிகளுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டுப் பரிந்துரைகளுக்கான உரையாடல். நேரமிருந்தால் பொதுவான தொழில்நுட்பப் பரிந்துரைகளையும் முன்வைக்கலாம். தமிழ் விக்கித் தொடர்பான கொள்கை உரையாடல் அல்ல. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கலந்துரையாடலாம். ஆர்வமுள்ள/துப்புரவுப் பணியில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் வருக. கவனிக்க:@AntanO, Gowtham Sampath, Arularasan. G, and கி.மூர்த்தி:-நீச்சல்காரன் (பேச்சு) 13:31, 24 பெப்ரவரி 2022 (UTC)
சில கருத்துகள்
 • புதிதாக கட்டுரைகள், பகுப்புகள் (பிற) உருவாக்காத வகையில் தடை செய்யும் வசதி
 • (கருவியுடன் தொடர்பில்லாதது, ஆனால் கருத்தில் கொள்ள வேண்டியது.) ஆ.வி.யில் உள்ளதுபோல் ஐ.பி பயனர்கள் நேரடியாக கட்டுரைகளை உருவாக்காது, விக்கிப்பீடியா:கட்டுரை உருவாக்கல் வழிகாட்டி மூலம், வரைவாக (draft) உருவாக்கச் செய்தல்.
 • {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}, குறிப்பாக மேற்கோள் அல்ல, பகுப்பற்ற, (பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால்) அதனை சரியான விக்கித்தரவில் இணைக்காத கட்டுரையை உருவாக்குபவருக்கு செய்தி அனுப்புதல்.
 • மூன்று வரிக்கு குறைவா உள்ளடக்கம் கொண்ட கட்டுரை உருவாக்குபவருக்கு (கட்டுரைகள் நீக்கப்படும்) என்ற அறிவிப்பை வழங்குதலும், கட்டுரையில் துரித நீக்கல் வார்ப்புரு இடுதலும்.

--AntanO (பேச்சு) 07:23, 27 பெப்ரவரி 2022 (UTC)

நேற்றைய சந்திப்பில் இக்கருத்தையும் வலியுறுத்தினோம். தமிழ் விக்கிப்பீடியர்களின் பரிந்துரைகளைத் தொகுத்து வாய்ப்புள்ளவற்றிற்குத் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்கவுள்ளோம் என்றார் திரு. சாம் வால்டன்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:05, 28 பெப்ரவரி 2022 (UTC)

பயனர்:கார்தமிழ்

தொகு

பயனர்:கார்தமிழ் எனும் பயனர் என் மீது சர்வாதிகாரி, சாதி வெறியர், முட்டாள் என தனிப்பட்ட தாக்குதல் நடத்தியுள்ளார். கலைக்களஞ்சியம் அறியாத, நாகரீகமற்ற, பதிப்புரிமை மீறல் செய்யும் இந்த "கோவை இந்துஸ்தான் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்" மீதும் உடன் நடவடிக்கை தேவை. நிருவாகிகள் எடுக்காவிட்டால் நான் எடுக்கிறேன்.

மேலும், ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பு.... உலகளாவிய இந்த அமைப்பு, விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது. அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விளக்கமும் தேவை. --AntanO (பேச்சு) 00:02, 3 மார்ச் 2022 (UTC)

பயிர்சிப் பட்டறைகள் - இது போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கவனிக்க வேண்டும். விக்கிப்பீடியாவில் பெயரால் வெளியே என்ன நடக்கிறது? --AntanO (பேச்சு) 00:08, 3 மார்ச் 2022 (UTC)

வணக்கம் அன்ரன் தங்கள் மீது தனிப்பட்ட தாக்குதலை எந்தப் பக்கத்தில் மேற்கொண்டார் எனபதற்கான இணைப்பையும், //விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது.// என்று அவர் குறிப்பிட்டுள்ள பக்கத்திற்கான இணைப்பையும் தந்தால் பிற நிர்வாகிகள் அவர் குறித்து அறிய ஏதுவாக இருக்கும் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:19, 3 மார்ச் 2022 (UTC)

விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#புத்தகம்_பற்றி_எழுத_கூடாதா_? / கார்தமிழ் --AntanO (பேச்சு) 00:36, 3 மார்ச் 2022 (UTC)
கார்தமிழ் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் எழுதியுள்ள தனி மனித தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை. ஒரு வாரத்திற்குள் அவர் ஆன்டன் நிர்வாகியிடம் மன்னிப்பு கோராவிட்டால், அவர் பயனர் கணக்கு முடிவிலியாகத் தடை செய்யப்பட வேண்டும்.--நந்தகுமார் (பேச்சு) 07:44, 3 மார்ச் 2022 (UTC)
பயனர்:கார்தமிழ் புதியவரல்லர் மேலும் ஒரு கல்வி நிலையத்தின் பிரதிநிதியாக இருக்கிறார் எனும் போது கூடுதல் பொறுப்பறிந்து உரையாடியிருக்கலாம். ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரியவில்லை. Nan பரிந்துரையுடன் உடன்படுகிறேன். மேலும் கட்டுரைக்கு நிதி வழங்குவதற்கு விக்கிச் சமூக அனுமதியில்லை என அந்த தமிழ் மன்றத்தின் செம்மல் அவர்களிடமும் விளக்கித் தகவல் அளித்துள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 10:29, 3 மார்ச் 2022 (UTC)
பயனர்:கார்தமிழ் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரின் தனிப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கன. //விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது.// என்ற கருத்து தவறான கருத்து. அவ்வாறு யாரும் நிதி உதவி பெற்று விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதவில்லை. தன்னலம் பாராமல் எழுதும் விக்கிப்பீடியரின் பணிகளை இது அவமதிப்பதாக உள்ளது. எனவே அவர் அன்ரனிம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையேல் அவரது கணக்கு தடைடெய்யப்படும்.--அருளரசன் (பேச்சு) 13:36, 3 மார்ச் 2022 (UTC)

என் மீதான தனிநபர் தாக்குதல் தவிர்த்து, பயனரின் முரண்பாடான விளக்கம் தொடர்பில் பயனர் பக்கத்தில் (பயனர் பேச்சு:கார்தமிழ்#விளக்கம் தேவை) கேள்வி கேட்டுள்ளேன் என்பதையும் உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். --AntanO (பேச்சு) 19:05, 4 மார்ச் 2022 (UTC)

அப்பயனர் நான் தனிநபர் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்துகிறர். யாருக்காவது கேள்வியிருந்தால் தயங்காமல் கேளுங்கள். அல்லது அந்த நபரிடமே ஆதாரம் கேளுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 15:54, 5 மார்ச் 2022 (UTC)
தகவலுக்காக
en:WP:WIAPA
 • Abusive, defamatory, or derogatory phrases based on race, sex, gender identity, sexual orientation, age, religious or political beliefs, disability, ethnicity, nationality, etc. directed against another editor or a group of editors.
 • Comparing editors to Nazis, communists, terrorists, dictators, or other infamous persons.

--AntanO (பேச்சு) 04:29, 6 மார்ச் 2022 (UTC)

@Nan, Neechalkaran, and Arularasan. G: உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. எனக்காக நியாயம் கேட்க வந்து, தேவையில்லாமல் பிற பயனர்கள் மீது தேவைற்ற குற்றம்சாட்டப்பட்டதற்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனிநபர் விமர்சனம் செய்வோர் மீது தடை செய்தல் என்பதில் விக்கியில் முறையான கொள்கை இல்லாததால் குறித்த நபர் மீது தடை விதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இயற்கை அற்புதமானது. சட்டத்திற்குத் தப்பித்தாலும், இயற்கை தன் கடமையைச் செய்யும். A man of good acts will become good, a man of bad acts, bad. (Brihadaranyaka Upanishad)

ஆர்வமிருந்தால் இங்கு கருத்திட்டு கொள்கைப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 21:44, 7 மார்ச் 2022 (UTC)

பயனர் கார்தமிழ் நிதி தொடர்பானது

தொகு

பயனர் கார்தமிழ் பேச்சுப்பக்கத்தில் விளக்கம் கேட்டேன். இதுவரைக்கும் சரியான பதில் இல்லை. ஆகவே, நிருவாகிகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

 • விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#புத்தகம் பற்றி எழுத கூடாதா ? இங்கு உலகளாவிய இந்த அமைப்பு, விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது. அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன். என்றுள்ளார். ஆகவே, நிதி வழங்கப்பட்டது, தமிழ்ப்பரிதி மாரி பயிற்சியளிக்கிறார் என்பது வெளிப்படை.
 • பயனர் பேச்சு:Arularasan. G#திருத்தம் - இங்கு கட்டுரைக்கு நூறு ரூபாய் அவர் தரவில்லை என்றும் கட்டுரை எழுதும் பயனருக்கு இணையச் செலவாக நூறு ரூபாய் என்றும் சொன்னார். இதுவரை யாரும் கட்டுரை எழுதவில்லை. எனவே யாருக்கும் நிதி வழங்கப்படவில்லை. இங்கே முன்னர் குறிப்பிட்டதை மறுதலிக்கிறார்.

@Ravidreams: இங்கு நான் செயற்படுவது பழிவாங்குதல் போல் கருதப்படுவதால் உங்களின் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன். என்ன செய்யலாம்? --AntanO (பேச்சு) 17:51, 6 மார்ச் 2022 (UTC)

பயனர் கார்தமிழிடம் பேசிக் கூடுதல் விவரங்களை அறிந்து கொண்ட பின் என் கருத்துகளை இடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:24, 6 மார்ச் 2022 (UTC)
அவரை இங்கு கருத்திடச் சொல்லுங்கள். நீஙகள் ஆலமரத்தடியில் தெரிவித்தபடியே, தமிழ்ப்பரிதி மாரியிடமும் குறிப்பு சேர்க்கப்பட்டது. ஆனால் யாரிடமும் முறையான பதில் கிடைக்கவில்லை!? எனக்கு தனிப்பட்டமுறையில் சில தகவல் கிடைக்கப்பட்டன. விரும்பினால் என் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள். AntanO (பேச்சு) 22:10, 7 மார்ச் 2022 (UTC)
பயனர் கார்தமிழிடம் தொலைப்பேசி வாயிலாகப் பேசினேன். அவர் புதுப்பயனர் என்பதால் இலகுவான தொடர்பாடல் கருதி தொலைப்பேசியில் அழைத்தேன். அப்பேச்சின் அனைத்து விவரங்களையும் இங்கே பதிவதில் சிக்கல் இல்லை. இங்குள்ள முறையீடு தொடர்பாக: அவர் இது வரை தான் யாருக்கும் விக்கிப்பீடியா தொடர்பாகப் பயற்சி அளிக்கவில்லை என்கிறார். அவர் சென்ற ஆண்டு விக்கிமூலத்தில் பயிற்சி அளித்த ஒருவரின் கட்டுரையே இங்கு நீக்கப்பட்டிருந்தது என்கிறார். அவர் இது வரை யாருக்கும் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்கவில்லை என்பதால், பயிற்சி பெற்ற பயனர்கள் கட்டுரைக்கு இவ்வளவு என்று காசு பெற்றார்களா, யார் அவர்கள், உருவாக்கிய கட்டுரைகள் எவை என்று உரையாட ஏதும் இல்லை. மருத்துவர் செம்மல் தொடர்பு விவரங்கள் கேட்டிருக்கிறேன். அவரிடமும் பேசி அவரது முயற்சிகளின் தன்மையைப் புரிந்து கொண்டு நெறிப்படுத்துகிறேன். பயனர் கார் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையாக்கத்தில் உரிய தேர்ச்சி பெறும் வரை மணல் தொட்டியிலேயே பயிற்சி செய்ய வேண்டும் என்றும், குறைந்தது 3 மாதங்களுக்கு வேறு யாருக்கும் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வாட்சாப் மூலம் அவருடன் தொடர்பில் இருக்கிறேன். இயன்ற அளவு விக்கி உதவிகளை நல்குகிறேன். நீங்கள் கேள்விப்பட்ட முரணான தகவல் ஏதும் இருந்தால், அதை இங்கு பதியலாம். தொலைப்பேசியில் தான் சொல்ல முடியும் என்றால் அழைக்கிறேன். நன்றி.
பி.கு. இந்தப் பிரச்சினை இங்கு என் கவனத்திற்கு வரும் வரை பயனர் கார்தமிழ் யாரென்றே தெரியாது. அவரது விக்கி முயற்சிகள் பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. --இரவி (பேச்சு) 15:08, 9 மார்ச் 2022 (UTC)

Marappagounder உம் சக பயனர் நிலையும்

தொகு

பயனர் பேச்சு:Marappagounder இந்த பயனரும், அதனைத் தொடர்ந்து 117.246.112.204, 117.202.255.143, 117.209.251.234, 117.209.140.46, 117.209.138.244 (இன்னும் சில) ஐபிகளில் இருந்து தனிநபர் தாக்குதல், பண்பாடற்ற சொற் பிரயோகம், தடைசெய்யப்பட்ட இயங்கங்களுடன் தொடர்புபடுத்தல் போன்ற தாக்குதல்களை சுமார் 2 மாத காலம் நான் உட்ட அருளரசன், சிறிதரன், சா அருணாசலம் (மற்றவர்களும் தாக்கப்பட்டார்களா என்பதை கவனிக்கைவில்லை) நிகழ்த்தி வருகிறார் என்பதையும், இது தொடர்பில் மேல்விக்கியில் ஆலோசனை கேட்டுள்ளேன்.

இங்கு ஒரு விடயத்தை கவனித்தேன். ஒரு வன்மம் நிறைந்த, அறமற்ற, நாகரீகமற்ற தாக்குதல் நடக்கும்போது சக பயனர்கள் எதுவும் செய்யாமல் இருப்பது. அந்த நபர் நம்மையும் கீழ்த்தரமாக தாக்கிவிடுவார் என ஒதுங்கிவிடுகிறார்கள் போலும். முதலில் அந்த நபர் சிறிதரன் மீது தாக்குதல் தனி நபர் தாக்குதல் நடத்த நான் அதை எச்சரிக்க, என் மீது தாக்குதல். அதை நீக்க நடவடிக்கை எடுத்த அருணாசலத்திற்கு எதிரான பின்னர் அருளரசனுக்கு எதிராகவும் மீண்டும் விசமத்தனத்தை நீக்கிய சிறிதரனுக்கு எதிராகவும் என தாக்குதல் தொடர்ந்தது, தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நம்மிடையே மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், நம் சக பயனர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இதுவரை நான் வேடிக்கை பார்த்ததில்லை. ஆள் பார்த்து நான் யாருக்கும் ஆதரவு குரல் கொடுப்பதில்லை. "உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன்தான்."

ஆளாளுக்கு இந்த முறையின்மை, அறம், குரல் கொடுத்தல், துணிவு என்பன மாறுபடலாம். ஆனால் சக பயனருக்கு இக்கட்டில் குரல் கொடுக்காவிட்டால், இங்கு பிழையானவர்களின் கரம் ஓங்கிவிடும். --AntanO (பேச்சு) 04:34, 19 மே 2022 (UTC)Reply

  விருப்பம்-- சா. அருணாசலம் (பேச்சு) 05:54, 19 மே 2022 (UTC)Reply
117.249.214.114 இன்று இந்த ஐபி முகவரியில் வந்துள்ளனர். இவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவர் போல் தெரிகிறது. சா. அருணாசலம் (பேச்சு) 08:25, 28 மே 2022 (UTC)Reply

117.249.213.53 இன்று இந்த ஐ. பி முகவரி எல்லாம் ஐபியும் 117 இல் ஆரம்பமாகிறது. --சா. அருணாசலம் (பேச்சு) 12:30, 29 மே 2022 (UTC)Reply

ஜாவத் ரமதானி

தொகு

Hi sorry for writing in English. You article ஜாவத் ரமதானி is part of crosswiki spam that started many years ago [1][2][3] (see also the many crosswiki additions and deletions at the current Wikidata object [4]). I tried to flag the tawiki article for deletion twice, but every time an IP (likely belonging to the person doing the crosswiki spam) promptly removed my deletion request [5]. Could you take a look at this? Johannnes89 (பேச்சு) 19:14, 9 சனவரி 2023 (UTC)Reply

@Johannnes89: Thanks. The article has been deleted now.--Kanags \உரையாடுக 05:03, 10 சனவரி 2023 (UTC)Reply

Request

தொகு

Please block 2409:4064:228C:48CF:8FC8:568:9847:13CB: Vandalism. Thanks, --Mtarch11 (பேச்சு) 06:38, 10 சனவரி 2023 (UTC)Reply

 Y ஆயிற்று AntanO (பேச்சு) 08:19, 10 சனவரி 2023 (UTC)Reply

மீளமைப்பு

தொகு

பயனர்:Ykfeynceu செய்த தொகுப்புகளையும் நகர்த்தல்களையும் மீளமைக்க வேண்டும். Pagers (பேச்சு) 14:39, 11 மே 2023 (UTC)Reply

தற்போது உள்ள தொகுப்புகள் சரியாக உள்ளதாகத் தெரிகிறது. எவற்றை மீளமைக்க வேண்டும் எனக் குறிப்பிடமுடியுமா?-நீச்சல்காரன் (பேச்சு) 02:41, 13 மே 2023 (UTC)Reply
இது குறித்து சா அருணாசலம் பயனர் பேச்சி உரையாடப்பட்டது. Pagers (பேச்சு) 06:11, 13 மே 2023 (UTC)Reply

New special page to fight spam

தொகு

Please help translate to your language

Hello, We are replacing most of the functionalities of MediaWiki:Spam-blacklist with a new special page called Special:BlockedExternalDomains. In this special page, admins can simply add a domain and notes on the block (usually reasoning and/or link to a discussion) and the added domain would automatically be blocked to be linked in Wikis anymore (including its subdomains). Content of this list is stored in MediaWiki:BlockedExternalDomains.json. You can see w:fa:Special:BlockedExternalDomains as an example. Check the phabricator ticket for more information.

This would make fighting spam easier and safer without needing to know regex or accidentally breaking wikis while also addressing the need to have some notes next to each domain on why it’s blocked. It would also make the list of blocked domains searchable and would make editing Wikis in general faster by optimizing matching links added against the blocked list in every edit (see phab:T337431#8936498 for some measurements).

If you want to migrate your entries in MediaWiki:Spam-blacklist, there is a python script in phab:P49299 that would produce contents of MediaWiki:Spam-blacklist and MediaWiki:BlockedExternalDomains.json for you automatically migrating off simple regex cases.

Note that this new feature doesn’t support regex (for complex cases) nor URL paths matching. Also it doesn’t support bypass by spam whitelist. For those, please either keep using MediaWiki:Spam-blacklist or switch to an abuse filter if possible. And adding a link to the list might take up to five minutes to be fully in effect (due to server-side caching, this is already the case with the old system) and admins and bots automatically bypass the blocked list.

Let me know if you have any questions or encounter any issues. Happy editing. Amir (talk) 09:41, 19 சூன் 2023 (UTC)Reply

ஜெ. பாலாஜி | பயனர்:Balajijagadesh

தொகு

விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி பயன்பாட்டு விதிகள் தொடர்பில் இங்கு எழுத்து மூல வழிகாட்டல் இல்லை. ஆனாலும், இங்கு இது பற்றிப் பேசியே விக்கிதானுலாவியைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பயனர்:Balajijagadesh இது பற்றி தன்னிலை விளக்கம் அளிக்கிறார். மேலதிக உரையாடல் அவருடைய பேச்சுப்பக்கத்தில் உள்ளது. ஆ.வி பயன்பாட்டு விதிகள் இவ்வாறுள்ளது:

 1. You are responsible for every edit made. You are expected to review every edit, just as if you were making an edit using Wikipedia's edit form when editing by hand. Do not sacrifice quality for speed, and review all changes before saving.
 2. Abide by all Wikipedia guidelines, policies and common practices.
 3. Do not make controversial edits with it. Seek consensus for changes that could be controversial at the appropriate venue; village pump, WikiProject, etc. "Being bold" is not a justification for mass editing lacking demonstrable consensus. If challenged, the onus is on the AWB operator to demonstrate or achieve consensus for changes they wish to make on a large scale.
 4. Do not make insignificant or inconsequential edits. An edit that has no noticeable effect on the rendered page is generally considered an insignificant edit. If in doubt, or if other editors object to edits on the basis of this rule, seek consensus at an appropriate venue before making further similar edits.

குறிப்பு: இவர் செய்தாது சரியென்றால், நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஒவ்வொருநாளும் இவ்வாறான சிறு தொகுப்புகள் ஒவ்வொருவராலும் செய்ய முடியும். நிர்வாகி அல்லாத பயனரும் இதற்கு அனுமதி கேட்கும்போது வழங்க வேண்டும். AntanO (பேச்சு) 07:43, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply