விக்கிப்பீடியா:நுட்பப் பணிகள் ஒருங்கிணைவுத் திட்டம்
நுட்பப் பணிகள் ஒருங்கிணைவுத் திட்டம் என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் செய்ய வேண்டிய நுட்பப்பணிகளுக்கான ஒருங்கிணைவு முனையமாகும்.
நோக்கம்
தொகுகட்டுரையாக்கம், தொகுத்தல், வகைப்படுத்தல், படங்களைச் சேர்த்தல் போன்ற பயனுள்ள பணிகளோடு இடைமுகத்தை தமிழ் விக்கிப் பயன்பாட்டுக்கேற்ப வடிவமைத்தல், வழுக்களைச் சுட்டி சரி செய்தல், புதிய நீட்சிகளை உருவாக்குதல், பங்களிப்பாளர்களின் உழைப்பை மிச்சப்படுத்தும் வகையில் அவர்களது பணிகளை எளிமைப்படுத்தல், தானியங்கிகளை இயக்குதல், தரம், வளர்ச்சி, விரைவு போன்ற தரவுகளைக் கணித்துத் தருதல், தமிழ் விக்கிக்கு வெளியே இயங்கும் நுட்பக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு நமது தேவைகளை நிறைவு செய்தல் போன்றவையும் இன்றியமையாத பணிகளாகும். இப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பாளர்களிடையே திட்டமிடலுக்கும் ஒருங்கிணைவுக்கும் ஒத்துழைப்புக்கும் உதவும் தளமாக இத்திட்டப் பக்கம் இருக்கும்.
பணியாற்ற விரும்பும் உறுப்பினர்கள்
தொகுபுதிய திட்டங்கள்
தொகு- http://techblog.wikimedia.org/2009/12/mobile-homepage-in-your-language/ (இங்கு இன்னும் ஒரு மொழிபெயர்ப்பு எஞ்சியுள்ளது.)
- ...
தொடர் பணிகள்
தொகு- விக்கியிடை இணைப்புத் தானியங்கி (பைவிக்கிப்பீடியாபாட் மென்பொருள் துணை கொண்டு)
- தர அளவைப் பணி (தானுலவி துணை கொண்டு)
- ...