விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு

நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

இது தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யவேண்டிய நுட்ப மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தும் பக்கம்.

அறிமுகம் தொகு

விக்கிப்பீடியா முதலிய விக்கிமீடியாவின் அனைத்து விக்கித்திட்டங்களின் வழங்கிகளையையும் விக்கிமீடியா பொறியியல் குழு நிருவகித்து வருகிறது. விக்கித்திட்டங்களுக்கான மென்பொருள், வழங்கிகள் தொடர்பான மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மீடியாவிக்கி மற்றும் அதற்கு உதவும் மென்பொருட்களின் வழுக்களையும், விக்கிமீடியா தொடர்புடைய சேவை வேண்டுகோள்களையும் பதிவு செய்ய Phabricator பயன்படுத்தப்படுகின்றது. தனிப்பட்ட விக்கிகள் அவற்றுக்குத் தேவைப்படும் விருப்பமைப்பு மாற்றங்களைப் பெறவும் (பெயர்வெளி உருவாக்குதல், இலச்சினை மாற்றுதல் போன்றவை), நீட்சிகளை நிறுவவும், குறிப்பிட்ட மென்பொருள் இயல்பிருப்புகளை மாற்றவும் Phabricator இல் வழுக்கள் பதிய வேண்டும். பொதுவான மென்பொருள் வழுக்கள் போன்றல்லாமல் இதுபோன்ற மாறுதல்கள் தனிப்பட்ட விக்கிகளின் தன்மையை மாற்றும் என்பதால் அதன் விக்கி சமூகம் மாற்றத்தைப் பற்றி அறிந்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது விக்கிமீடியா பொறியியற்குழுவின் கொள்கை(shell policy). இது விக்கி சமூகத்துக்குத் தெரியாமல் தனிப்பட்ட விக்கிகளில் மென்பொருள் மாற்றங்களை யார் வேண்டுமானாலும் செய்யக் கோரி கேட்பதைத் தடுக்கின்றது.

நுட்ப மாற்றம் விரும்புவோர் செய்யவேண்டியவை தொகு

  • இங்கு, எந்த ஒரு பயனரும் நுட்ப மாறுதல் வாக்கெடுப்பை முன்மொழியலாம். முன்மொழிந்த பிறகு ஆலமரத்தடியில் செய்தி இடவேண்டும்.
  • நுட்ப மாறுதலின் சிறு அறிமுகத்தை இயன்றவரை எளிய சொற்களில், நுட்பக் குழுமொழி தவிர்த்து விளக்க வேண்டும். பெரும் தாக்கம் உண்டாக்கக்கூடிய மாற்றங்களுக்கு முடிந்தால் பயன்-இடர் தாக்கங்களை குறிப்பிடவேண்டும். எடுத்துக்காட்டு :- இணைய எழுத்துரு
  • பயனர்கள் தங்களின் ஐயங்ககளையும் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.
  • வாக்கெடுப்பு ஒரு வார காலத்துக்கு நடக்கும். எத்தனை ஆதரவு /எதிர்ப்பு வாக்குகள் என்பதை விட பொதுக்கருத்து, எதிர்ப்பு வாக்குகளின் ஆக்க அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்
  • வழு பதிந்தவுடன் இங்கு வழு எண்ணை இற்றைப்படுத்த வேண்டும். வழுவின் மூல வழு தமிழ் விக்கித்திட்டங்களின் மேலாண்மை வழு 32578 என்று இருக்கவேண்டும்.
  • வழுவில் சமூகத்திலிருந்து மேலதிக தகவலோ / கருத்தோ கேட்கப்பட்டால் இங்கு இற்றைப்படுத்தி சமூகத்தின் கருத்தை கேட்டு வழுவை இற்றைப் படுத்தவேண்டும். கண்கூடான சர்ச்சையில்லாத விடயங்களுக்கு இதனை தவிர்க்கலாம்.

முடிந்த வாக்கெடுப்புகள் தொகு

தற்பொழுது நடைபெறும் வாக்கெடுப்புகள் தொகு

இறக்குமதி தொகு

டுவிங்கிள் கருவிக்குத் தேவையான சில நூறு வார்ப்புருக்கள் (கிட்டத்தட்ட 600 வார்ப்புருக்கள்) இறக்குமதி செய்யப்பட அல்லது உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் விக்கியில் இறக்குமதி செய்யும் வசதி இல்லாததால், அவ்வசதியை வழங்குமாறு "phabricator" இல் வழு பதிய விரும்புகிறேன். அங்கு வழு பதிய இங்குள்ள விக்கிச் சமூகத்தின் ஆதரவு தேவை. ஆகவே, ஆதரவு அளிப்பீர்களானால் அங்கு வழு பதிய முடியும். நன்றி. --AntanO 21:26, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இவ்வாக்கெடுப்பு 03-01-2016 அன்று முடிவடையும்.

கருத்து தொகு

//ஆனால் தமிழ் விக்கியில் இறக்குமதி செய்யும் வசதி இல்லாததால்// சிறு சந்தேகம் - நிர்வாகிகளுக்கு இறக்குமதி செய்யும் அணுக்கம் உள்ளது. "phabricator" இல் எதற்காக வழு பதிய வேண்டும்?!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 01:31, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
முயன்று பார்த்தேன் முடியவில்லை. தேடியதில் (m:Help:Import#Implementation) தமிழ் விக்கிக்கு இறக்குமதி செய்யும் வசதி இல்லை.--AntanO 03:08, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
//No wikis from which to import have been defined and direct history uploads are disabled.// என்ற செய்தி காண்பிக்கப்படுகின்றது. இப்பக்கம் //On many Wikimedia wikis transwiki import is disabled too, it gives message with id 'importnosources' (talk): "No wikis from which to import have been defined and direct history uploads are disabled."// எனக் குறிப்பிடுகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் இறக்குமதி முடக்கப்பட்டிருப்பதாலேயே வழுப்பதியவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:27, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
சிறப்பு:Import பக்கத்தில் //மற்றொரு விக்கியில் இருந்து பக்கங்களை இறக்குமதி செய்யவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்: நீங்கள் கோரிய செயற்பாடு நிர்வாகிகள், இறக்குமதியாளர்கள், விக்கியிடை இறக்குமதியாளர்கள் குழுக்களுள் ஒன்றின் பயனர்களுக்கு மட்டுமே.// என்ற குறிப்பு காணப்பட்டதால் தங்களிடம் வினவினேன். "phabricator" இல் வழு பதிந்து இறக்குமதி (Import) அணுக்கத்தை நிர்வாகிகளுக்கு வழங்குவதா அல்லது விக்கியிடை இறக்குமதியாளர் அணுக்கத்தை த.வியில் புதிதாகச் சேர்ப்பதா அல்லது இரண்டுமா எனத் தீர்மானிக்க வேண்டும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:53, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Shrikarsan: இறக்குமதி அணுக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே நிருவாகிகளுக்கு உள்ளது. காண்க: இணைப்பு. தனியே விக்கியிடை இறக்குமதியாளர் அணுக்கம் தற்போது தேவையற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் இறக்குமதி வசதி முடக்கப்பட்டிருப்பது தொடர்பாகவே வழு பதியவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:57, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி மதனாஹரன் அண்ணா --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:50, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
Phabricator:T122808--சண்முகம்ப7 (பேச்சு) 16:12, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அலைபேசியில் மீடியாவிக்கி:Sitenotice தொகு

அலைபேசியில் மீடியாவிக்கி:Sitenotice தெரிய வழு பதிய வேண்டும். இவ்வசதி தேவையா என்பது குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும். (Enable wgMinervaEnableSiteNotice for tawiki)--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கருத்து தொகு

MediaWiki:Mobile-frontend-sitenotice என்ற உருப்படி உருவாக்கி அதைக் காட்டக் கோருவது இயலுமா? Mobile-frontend- க்கு எனத் தனியாக இருப்பதால் கையடக்கக் கருவிக்கென customize செய்யமுடியும். -நீச்சல்காரன் (பேச்சு) 18:01, 9 சனவரி 2019 (UTC)[பதிலளி]