விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தானியல் பாண்டியன்

தானியல் பாண்டியன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பங்களாச்சுரண்டையைச் சேர்ந்தவர். தற்போது, சிகாகோ நகரில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கி முழுமையாக்குவதில் ஆர்வம் உடையவர். நீர் மின் ஆற்றல், மனித மூளை, கொல்கத்தா, சூரியன், சிகாகோ, இந்தியத் தரைப்படை, நீர்மூழ்கிக் கப்பல் முதலிய இவர் உருவாக்கிய கட்டுரைகளில் சில.