விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு)

முன்னுரை தொகு

இணையவழியாக, முகம் பாராமல் வெவ்வேறு சூழலில் நின்று எழுதி உரையாடிச் செயல்படும்போது பலமுறை கருத்து வேறுபாடுகளும், தவறான புரிதல்களும், பிணக்குகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் விக்கிபீடியாவை தங்களை பிரபலப்படுத்த பயன் படுத்தலாம் சிலர் விக்கிபீடியாவை வைத்து தனி மனித தாக்குதல், மற்றும் அடுத்தவர் மீது அவதூறுகளை பரப்ப பயன்படுத்தலாம் கட்டுரையை மீள்விப்பது போல் மனித உணர்வுகளையும், ஒருவர் இன்னொருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பீட்டையும், அவதூறுகளால் ஏற்படும் மன உளைச்சலையும், கால இழப்பையும் மீள்வித்து விட முடியாது. எனவே, முறையான ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் பயனர்களை எப்படிக் கையாள்வது, அவதூறு பரப்புதல் உறுதியானால் அதற்கு என்ன நடவடிக்கை என்று கொள்கை வகுக்க வேண்டிய நேரம் இது

கொள்கை தொகு

முறையான ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் பயனர்கள் மற்றும் அந்த அவதூறை ஆதரித்தவர்கள், அந்த அவதூறிற்கு விருப்பம் தெரிவித்தவர்கள், மற்றும் அந்த பயனரின் கைப்பாவைகள் மற்றும் கையாட்கள் (sock puppets and meat puppets) ஆகியவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் கொள்கை விளக்கம்

முறையான ஆதாரம் இல்லாமல் தொகு

  • அவதூறு பரப்பியவரால் தான் கூறியவற்றை நிருபிக்க முடியாது போனால்

அவதூறு தொகு

ஒரு பயனர் (பாதிக்கப்பட்டவர், அவதூறு செய்யப்பட்டவர்)எழுதாத ஒன்றை எழுதியதாக மற்றொரு பயனர் (அவதூறு செய்பவர்) / பல பயனர்கள் (அவதூறு செய்பவர்கள்) கூறுவது, எழுதுவது ஒரு பயனர் (பாதிக்கப்பட்டவர், அவதூறு செய்யப்பட்டவர்)செய்யாத ஒன்றை செய்ததாக மற்றொரு பயனர் (அவதூறு செய்பவர்) / பல பயனர்கள் (அவதூறு செய்பவர்கள்) கூறுவது, எழுதுவது

வகைகள் தொகு

இரண்டே வகைகள் தான்

  1. அவதூறு - அதாவது அடுத்தவரை பற்றி எழுதியது தவறு
  2. அவதூறு அல்ல - அதாவது அடுத்தவரை பற்றி எழுதியது சரி

எனவே ஒரே தண்டனை போதும்.

பரப்பும் பயனர்கள் தொகு

  • https://ta.wikipedia.orgல் அடுத்தவரை குறிப்பிட்டு எழுதுபவர்கள்
  • பிற தளங்களில் விக்கியில் நடந்ததை பற்றி எழுதும் விக்கி பயனர்கள்
  • பிற ஊடகங்களில் எழுதுபவர்கள்
  • பொது தளங்களில் பேசுபவர்கள்

மற்றும் அந்த அவதூறை ஆதரித்தவர்கள், அந்த அவதூறிற்கு விருப்பம் தெரிவித்தவர்கள் ஆகியவர்களுக்கு தொகு

  • அவதூறு செய்திகளை பரப்புபவர்கள்,
  • அதற்கு விருப்பம் தெரிவிப்பவரக்ள்,
  • அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்
  • கைப்பாவைகள்
  • கையாட்கள்

பயனரை தடை செய்து விட்டு கைப்பாவைகளையும், கையாட்களையும் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவே அனைவரையும் தடை செய்ய வேண்டும்

வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் தொகு

  • அந்த பயனர் விக்கியில் பங்களிக்க வாழ்நாள் தடை

கட்டுரையை மீள்விப்பது போல் மனித உணர்வுகளையும், ஒருவர் இன்னொருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பீட்டையும், அவதூறுகளால் ஏற்படும் மன உளைச்சலையும், கால இழப்பையும் மீள்வித்து விட முடியாது. இது தனிப்பட்ட பயனரின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை. எனவே, முறையான ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் பயனர்கள் மற்றும் ஆதரவு மற்றும் விருப்பம் தெரிவிப்பவரகளுக்கு கடுமையான தண்டனை அவசியம் இல்லாவிடின் விசமத் தனமாக அவதூறுகள் நிறைய வரும், அது தொடர்பாக நிறைய ஆற்றல் வீணாகும். இல்லை என்றால் ரோட்டில் நின்றவர் போனவர் எவரும் ஒரு கணக்கை ஆரம்பித்து இந்த தளத்தை பயன்படுத்தி பிற பயனர்களை அவதூறு செய்ய இயலும் இல்லை என்றால் குழப்பம் விளைவிக்க எண்ணும் எவரும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அவதூறுகளை பரப்பி விட்டு எல்லாப் பயனர்களது நேரத்தையும் வீணடித்து விடுவதற்கே வழி சமைப்பதாக முடியும் தமிழ் விக்கிப்பீடியாவின் நலனுக்காகத்தான் வழிமுறைகளை உருவாக்க முனைகிறோம். இங்கே பல ஆண்டுகள் தமது பொன்னான நேரத்தைச் செலவு செய்து பல பயனர்கள் உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவைத் தற்போதைய நிலைக்குக் கட்டி எழுப்பி இருக்கிறார்கள். வழிமுறைகள் இந்த உழைப்புக்கு மதிப்பு அளிப்பதாக இருக்கவேண்டும்.

நடைமுறை தொகு

பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டுதல் தொகு

இதில் கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்

  1. அவதூறு செய்தவர்.
  2. அந்த தொகுத்தல் வேறுபாடு.
  3. அதை விரும்பியவர்களின் தொகுத்தல் வேறுபாடு
  4. அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களின் தொகுத்தல் வேறுபாடு

தவற்றை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது தன் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்தல் தொகு

குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பில் இருந்த ஆதாரங்களை தந்து தான் கூறியது சரி என்று சொல்லலாம் அல்லது வேறு யாராவது ஆதாரங்களை தந்து முதலில் கூறப்பட்டது சரி என்று சொல்லலாம் அல்லது அவரால் ஆதாரங்களை தரமுடியாவிட்டால் வருத்தம் தெரிவித்து, தன் தவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்

இந்த கொள்கை மற்றும் நடைமுறைக்கு வாக்கெடுப்பு தொகு

ஆதரவு தொகு

  1. நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:02, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு தொகு

  1. . இந்தக் கொள்கையை இறுதி செய்ய வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இருந்தாலும் தற்போதைய வடிவில் இவ்வரைவில் எனக்கு ஏற்பு இல்லை. குறிப்பாக வாழ்நாள் தடையை எதிர்க்கிறேன். களங்கத்தின் தன்மையைப் பொருத்தும், அவதூறு செய்ததாகத் தெரியவருபவரின் நோக்கத்தையையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிறிது நல்லெண்ண நம்பிக்கை குறைந்து சரியான தகவல் இல்லாமையால் தவறான செய்தியை இட்டிருந்தால், அவருக்கும் எவர்மீதாவது பெரிய பழி வருமளவிற்கு வேண்டுமென்றே பொய் சொல்வதற்கும் வேறுபாடு காட்ட வேண்டும். தொடர்புடையவர் விளக்கமளிக்கவும் தாம் சொன்னதைத் திரும்பப் பெறவும் மன்னிப்புக் கோரவும் வாய்ப்பளிக்க வேண்டும். பல வேளைகளில் அவதூறு என்பது விடுபாட்டுணர்வைத் தடுப்பதாக அமைந்துள்ளது (விக்கிக்கு வெளியே). இங்கு அவ்வாறு நிகழாது என நம்பினாலும் தேவையான காப்பு நடவடிக்கைகளைக் கொள்கையில் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பல நாடுகளில் அவதூறுக் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டுபவரே குற்றத்தை நிறுவ வேண்டும் என்று வைத்திருப்பார்கள். அப்படித்தான் வைக்க வேண்டும் எனக் கூறவில்லை. சரியான வழிமுறைகளைச் சேர்க்க வேண்டும். மிகத்தெளிவாகத் தெரியும் இடங்களில் கொள்கைகொண்டு மட்டுறுத்தவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் செய்யலாம்: காட்டாக பயனர் ஒருவர் சுந்தர் பணம் பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்தைப் பற்றி எழுதினார் என்று சொல்லிவிட்டு அதை உறுதிப்படுத்த சான்று எதையும் தரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதில் உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 13:20, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வாழ்நாள் தடை என்று இருந்தால் தான் அவதூறுகள் செய்ய அது தடையாக இருக்கும். வேறு என்ன தண்டனை என்றாலும் அது தண்டனையாக மட்டுமே இருக்குமே தவிர 'தவறு செய்வதை தடுக்கும் ஒரு காரணி'யாக இருக்காது. அடுத்ததாக அவதூறு செய்யப்பட்டவருக்கு அது வாழ்நாள் களங்கம் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
களங்கத்தின் தன்மையைப் பொருத்தும், அவதூறு செய்ததாகத் தெரியவருபவரின் நோக்கத்தையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை நான் மறுக்கிறேன். இது அவதூறும் செய்யும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும்
சிறிது நல்லெண்ண நம்பிக்கை குறைந்து சரியான தகவல் இல்லாமையால் தவறான செய்தியை இடுவதும் அவதூறே. அதற்கும் எவர்மீதாவது பெரிய பழி வருமளவிற்கு வேண்டுமென்றே பொய் சொல்வதும் அவதூறே.
தொடர்புடையவர் விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் வாழ்நாள் தடை செய்ய வேண்டும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 14:22, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  1. . மிகக்கடுமையான விதிமுறை. சிறு விக்கி சமூகங்களை அழிக்கக் கூடி வல்லமை படைத்தது. நோக்கம் எதுவெனினும் விளைவு அபாயகரமானது என்பதால் மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:44, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. . தனிநபர் தாக்குதலைத் தவிர்த்தல் கொள்கை ஏற்கனவே உள்ளது. --Natkeeran (பேச்சு) 14:53, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. வாழ்நாள் தடையை எதிர்க்கிறேன். விக்கிக்கு வெளியே செய்யப்படும் அவதூறுக்கு விக்கியில் விசாரணை செய்வது என்பதையும் எதிர்க்கிறேன். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 16:40, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. இத்தகு கடுமையான விதிமுறைகளை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 17:08, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. ஏற்கனவே இருக்கும் விதிமுறைகள் போதுமானது இதை கடுமையாக எதிர்க்கிறேன்.--சங்கீர்த்தன் (பேச்சு) 18:56, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. இது தேவையற்ற ஒரு நடவடிக்கை. இதைக் கடுமையாக எதிர்க்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 19:03, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. --கலை (பேச்சு) 07:30, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. வாழ்நாள் தடை வேண்டாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:44, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கருத்து தொகு

பயனர்கள் / தனிநபர்கள் மீது அவதூறு செய்து அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்களுக்கு எந்த தண்டனை என்று தமிழ் விக்கிபிடியாவில் இல்லை. அதனால் தான் நான் இதை முன்னெடுத்து உள்ளேன் −முன்நிற்கும் கருத்து Mariano Anto Bruno Mascarenhas (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
  • பயனர்கள்/தனிநபர்கள் மீது அவதூறு செய்து அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் போது பாதிக்கப்பட்டவரின் மனநிலையை உணரமுடிகிறது. விக்கியில் எழுதிய் தொடர்களை மறைக்கவோ, நிரந்தரமாக அழிக்கவோ முடியும். ஆகவே பெரிய பாதிப்புகளைத் தடுக்கமுடியும். எச்சரிக்கை செய்து பயனரை வழிநடத்தலாம். நமது தடுத்தல் நடவடிக்கைக்குப்பின் அவதூறு செய்தவரும், செய்யப்பட்டவரும் குறைந்தபட்சம் அடிப்படை தொகுத்தல் உரிமையைப் பறிக்கக் கூடாது என நினைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 15:55, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இந்த வரைவின் படி செயற்படுவதானால், தமிழ் விக்கியின் கடந்த சில நாட்களாக நடந்துவரும் விவாதங்களில் பங்குபற்றும் பல பயனர்கள் வாழ்நாள் தடை பெறவேண்டியிருக்கும். இந்த விவாதங்களில் நிறைய எழுதும் பயனர்கள் தாங்கள் எழுதுவதைத் திரும்ப ஒரு முறை வாசித்துப் பார்க்கவேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:49, 21 அக்டோபர் 2013 (UTC)  விருப்பம்--கலை (பேச்சு) 07:30, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 16:51, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • இந்த முன்மொழிவு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாறாக சிக்கல்களை வளர்க்கும். பழி, பழி சுமத்தல் பழி தூற்றுதல், அவதூறு, என பல கருத்துகள் உள்ளன. புருனோ மிக எளிதாகத் தரும் கீழ்க்கண்ட 'வகைகள்' பலவாறு உள்வாங்கப்பட்டு மேலும் மேலும் பெருத்த குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

அவர் மேலே கூறுகின்றார்:

இரண்டே வகைகள் தான்

  1. அவதூறு - அதாவது அடுத்தவரை பற்றி எழுதியது தவறு
  2. அவதூறு அல்ல - அதாவது அடுத்தவரை பற்றி எழுதியது சரி

எனவே ஒரே தண்டனை போதும்.

இது தண்டனை வழங்கும் களம் அன்று என்பதையும், வழக்காடு மன்றம் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கின்றார். மேலே குறிப்பிட்டபடிப் பார்த்தால் எது "அவதூறு" (பழி, பழி சுமத்தல், பழிதூற்றல்??) என்பதைப்பற்றி நாளும் ஆயிரம் கேள்விகள் எழக்கூடும். அடுத்தவரைப் பற்றி எழுதியது தவறு எனில் அவர் பேச்சுப் பக்கத்தில் போய் கேள்வி கேட்கலாம், பல்வேறு வழிகளில் திருத்திக்கொள்ளலாம். நான் பார்த்த விக்கிப்பீடியர் திருநெல்வேலிக்காரர் என்று எங்காவது கூறியிருந்தால், அது தவறான செய்தியாக இருந்தால் (அவர் கோவையைச் சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்), மேலே உள்ள வரையறையின் படி அவதூறு. நான் அமெரிக்காவில் பேராசிரியராக இருக்கின்றேன் என்று தவறுதலாக ஒருவர் கூறினால் (நான் கனடாவில் பேராசிரியராக இருக்கின்றேன்), இது அவதூறா? பிறகு கணக்கற்ற நேரம் எது அவதூறு எது இல்லை என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே இருக்கும் கொள்கைகளின் படி நற்பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தல் போன்றவற்றால் இவை எளிதாக எதிர்கொள்ள முடியும்; ஒரு செய்தி தவறு என்றால் எளிதாகத் திருத்திக்கொள்ளலாம். தீய நோக்குடன் அணுகி ஒன்றைக் கூறுவது (malicious intent) என்பது ஏற்கனவே விக்கியின் நன்னோக்குக் கொள்கைக்குள் அடங்கும். இப்படியான முன்மொழிவுகளைக் கொள்கை ஆக்கினால் சீரழியும் நம் விக்கி. குலைந்தே போகும். இப்பொழுது நான் குலைந்தே போகும் என்று கூறியது அவதூறு, நன்னோக்கம் இல்லாதது என்று கணக்கற்ற நேரம் வழக்காடிக்கொண்டிருக்கலாம். நம் நோக்கம் கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுப்பது என்பது. யாரும் மிகவும் தவறுதலாக எதுவும் செய்ய நேர்ந்தால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் படியே எடுக்க முடியும். விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல் என்னும் விதியே இருக்கும்பொழுது பழி சுமத்துவதும் பழி தூற்றுவதும், "அவதூறு" என்பதும் கூடாது என்பது அதிலேயே அடக்கம். எனவே இந்த முன்மொழிவு தேவையே இல்லை. எனவே இதனை விலக்கிக் கொள்ளுமாறு அல்லது திரும்பப்பெற்றுக்கொள்ளுமாரு புருனோவைக் கேட்டுக்கொள்கின்றேன். இவற்றால் நேரக்கூடிய கட்டற்ற சீர்குலைவுகளைப் பயனர்கள் தெளிவாக எண்ணிப்பார்க்கவேண்டும். --செல்வா (பேச்சு) 13:31, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]